பரபரப்புடன் முடிந்த சிங்கை பதிவர் சந்திப்பு....


டோன்லீ-அவர்கள் சிங்கை பதிவர் கூட்டத்திற்கு விடுத்த திறந்த அழைப்பை, சிங்கையில் இருப்பதாலும், நாமும் பதிவர் தான் என்ற நம்பிக்கையிலும் முழு மனதுடன் அழைப்பை ஏற்று கூட்டத்திற்கு செல்வது என்ற முடிவெடுத்தேன்.

பொங்க்கோல் பார்க் கூட்டம் நடப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட இடம், நண்பர் டோன்லீ அழைப்பிலே விபரங்கள் கொடுத்திருந்தாலும், பின்னுட்டத்தில் பார்க் வருவதற்கான நாலாபுற வழிகளையும், வழி தடங்களையும் மிகத்தெளிவாக தெரிவித்திருந்தனர். கூட்டத்திற்கு போவதற்கு முடிவெடுத்தாயிற்று., வழித் தடங்களும் மிகதெளிவாக தெரிந்தாயிற்று., உடன் வர ஒரு நண்பரையும் தேர்ந்துடுத்தாயிற்று., அப்புறமென்ன...நண்பர் சகிதமாய், ஜனவரி 3, மாலை மணி 3.30 க்கு பொங்கோல் பார்க்கை வந்தடைதாயிற்று. ஆகா...நல்ல பெரிய பார்க், மரங்களின் நடுவே சிறுகுளம். நடப்பதற்கு, மிதிவண்டி பயிற்சி, உடற்பயிற்சிக்கு தோதாக மரங்களின் நடுவே சிமெண்ட் பாதை, என கண்களுக்கு குளிர்ச்சியான இடம்(எல்லா வயதினர்க்கும்) தான், இடத்தை தேர்ந்தெடுத்தற்கு மனதுக்குள் நன்றி சொல்லிவிட்டு மொத்த பூங்காவையும் சுற்றிவர ஆரம்பித்தோம். முதலில் குளத்தங்கரையில் சிறுவர் முதல் பெரியவர் வரை பொழுது போக்கு + சுவாரசியத்திற்கு, தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சிறுவர் சிறுமிகளை பார்த்தாலே அழகு, அதிலும் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருக்கையில் அவர்களின் முக மொழியும், உடல் மொழியும் கொள்ளை அழகு., ஆஹா ஆரம்பமே அமர்க்களம்.


குறிப்பிட்ட நேரத்திற்கும் 15 நிமிடங்கள் முன்னமே வந்து, குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நண்பருடான பேச்சு குழந்தை பருவத்திற்கு திரும்பியது. "அண்ணே, சின்ன வயசுல என்னன்ன வெளையாட்டு விளையாடி இருக்கீங்க?" இது நான்., " என்ன வெளயாடுவோம், எல்லாரையும் போலத்தான், குண்டு(கோலி), பம்பரம், கிட்டி, புளியங்கொட்டை வச்சு செதறு கல்லு, ஏறி பந்து வெளையாடுவோம், இப்பிடி வெளையாடுற இடத்துக்கு எல்லாருக்கும் முன்னாடி வந்துட்டோம்முனா, குழி தோண்டி முள்ளை போட்டு பேப்பேர் வச்சு மேலாக்க மண்ணை தூவி விட்டுருவோம், லேட்டா வர்றவன் எவனாச்சும் அதுல அகழி வசி முள்ளு கித்தி அழுவான்"- என்று சொல்லி முடித்தார் நண்பர்." அண்ணே, நீங்களும் என்னைய மாதிரி தானா?" என்று சிரித்தபடியே பேசிக்கொண்டிருந்தோம்...


சுமார் நான்கு மணிப்போல் ஒரு தமிழ் நண்பர் பச்சை நிற T-Shirt அணிந்து கையில் காமெரா போனுடன் சூழ்நிலையை படமேடுத்தப் படியே கடந்து போனார். கூட்டத்திற்கு வந்தவாராயிருக்கும் என்று மனதுக்குள் நினைத்தபடி உடன் வந்த நண்பருடன் பேச எத்தனிக்கையில், நண்பருக்கு ஊரிலிருக்கும் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு., நண்பர் தன் தாயுடன் பேச ஆரம்பித்ததால் எனக்கு வாய்ப்பூட்டு! கண்களை மேய விட்டதில் தூரத்தில் பச்சை டி-சட்டை நண்பர், உடனொரு நண்பருடன் சூழ்நிலையை வளைத்து, வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார், பாண்பு போல!


ஐந்து மணியை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், நண்பர் அதிரை ஜமால் மூன்று பேருடன் வந்தினைந்தார், எங்களோடு. உடனே அனைவரும் அலைபேசியில் அடுத்தடுத்து மக்களை தொடர்பு கொண்ட கன நேரத்தில் பூங்காவின் மறுபுறத்திலிருந்து நாம் முதலில் கண்ட பச்சை டி- சட்டை நண்பர் உடன் நான்கு பேருடன்(நண்பர் ஒருவர் கையில் கூடையுடன் வந்திருந்தார், அனேகமாக அல்வாவாக இருக்கலாம்) வந்து கூட்டத்தை கூ...ட்டினர்.
அறிமுக படலம் ஆரம்பமானது.... நான் அப்பாவி முரு...நீங்க...டோன்லீ ( பச்சை டி- சட்டை ), ஜோதிபாரதி...ஜெகதீசன்...ராம்...ஜமால்...சரவணன்...அப்துல்லா... அறிமுக படலம் நடக்கயிலே கோவி.கண்ணன்., ரொம்ப நல்லவன் போன்றோர் வரும் வழியில் இருப்பதாக தகவல் வரவும், கூட்டம் மொத்தமும் காத்திருப்பதில் உள்ள சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்து.
காத்திருந்த போது அனுபவித்த சுகங்கள்:- அன்பர் ஜெகதீஷ், கூட்ட திட்டப்படி பாட்டில்களை திறக்க ஆரம்பித்தார். ஷ்.. ஷ்..ஆமாம் பொங்கிவிட்டது வாங்கி வந்த .....
காமிரா காதலர்கள், வந்தவர்களிடம் " படமெடுக்குற மாதிரி எதையும் காணமே" என்று கவலைப் பட்டுகொண்டிருந்த நேரத்தில் ஒரு சூப்பர் சிட்டு கண்ணில் பட்டு அவர்களின் காதலில் விழுந்தது...
ஒரு சிறு கும்பல், நண்பர் ஜோதி பாரதி தள்ளி வந்த கூடையில் அனேகமாக என்ன இருக்கும் என்ற விவாதத்தில் ஈடுபட்டது...


மொத்த கூட்டத்தின் இடையே ஒரு குரல், ஹே, அண்ணன் வந்துட்டாரு.. அண்ணன் வந்துட்டாரு.... அட அமாம், மொத்த கூட்டமும் எதிர் பார்த்த அண்ணன் கோவி. கண்ணன், ரொம்ப நல்லவனுடன் வந்தினைந்தார்.. கூட்டம் கொளத்தன்கரையில் ஆரம்பமானது. அண்ணன் ஜோசப் பால்ராஜ் எழுந்து "இன்றைய நமது பதிவர் கூட்டமும் கூடி இருப்பதற்கான காரணம்... "அண்ணே வடை ஆறிடப் போகுது..."பின்னிருந்து ஒரு குரல். ஆமா., ஆமாம்... எல்லோரும் பின் குரலை ஆமோதித்தனர். பின் குரல் வாழ்க...உடனே நண்பர் ஜோதிபாரதி தள்ளி வந்த கூடையிலிருந்து பொட்டலங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன...பின் பேப்பேர் தட்டுகளில் சக்கரை பொங்கல்., உளுந்த வடை., அல்வா வைத்து எல்லோருக்கும் பரிமாற ஆரம்பித்தனர் சங்கத்தின் மூத்த பதிவர்கள் கோவி.., ஜோசப். பால்ராஜ்., ஜோதி பாரதி (சிற்றுண்டி தயாரிப்பாளர்) .


"யப்பா, எல்லோரும் சாப்பிட்டசுல இனிமேலயாவது பேசலாமுல" என்று முன் அனுமதியுடன் கூட்டம் ஆரம்பித்து. புதிய பதிவர்களின் தங்களிப் பற்றிய சுய அறிமுகம்.( தங்களின் பெயர், இந்தியாவில் ஊர், ப்ளோக்கின் பெயர், ப்ளோக்கின் பெயர் காரணம், தாங்கள் எழுதும் தலைப்பு, தாங்கள் விரும்பி படிக்கும் ப்ளோக்குகள், அதற்கான காரணம் போன்றவற்றை பற்றிய சுய விளக்கம்) புதிய பதிவர்கள், அதிரை ஜமால் ஆரம்பித்து, அப்பாவி முரு வழியாக ., ரொம்ப நல்லவனிடம் முடிந்தது சுய விளக்க படலம்.
அனைவருக்கும் முழு அறிமுகம் கிடைத்த பின் சங்கம் தன் கடமையை செய்ய ஆரம்பித்தது. முதலில் சில குறிப்பிட்ட பதிவர்களை பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன, கார சாரமான விவாதங்கள், அனல் பறக்கும் விளக்கங்கள் என்று மொத்த கூட்டமும் மெதுவாக சூடாக ஆரம்பித்தது.இதை இதற்கும் மேல் எழுத வேண்டாமென நினைக்கிறேன்.
மொத்தக் கூட்டமும் முழு சூட்டை அடைந்ததும், அன்பர் அடுத்த விவாதத்தை ஆரம்பித்தார், அது, இன்று நாம் சாப்பிட்டது கேரட் அல்வாவா? பரங்கிக்காய் அல்வாவா?. எனக்கு இப்ப விளக்கம் கிடச்சாகனும், ஆமா!. அனைவரும் அவரை பார்த்துக் கொண்டிருக்கையில், கூட்டத்தில் ஒரு குரல் "இது பீட்ரூட் அல்வா கிடையாது, என்னா, அது ரொம்ப செவப்பா இருக்கும்" சூட்டை குறைக்கும் விதமாக மொத்த சிற்றுண்டியும் செய்து (பின் குறிப்பு அவரே செய்து) கொண்டுவந்த அண்ணன் ஜோதி பாரதி -இல்லை இல்லை இது பப்பாளி அல்வா என்று சுய விளக்கம் கொடுத்ததும், கூட்டம் அடுத்த பரபரப்புக்கு போனது. அது
"ஏம்பா, இந்த 'கழுகு கண்' பேருல பின்னுட்டம் போடுறது யாரு, நான் எதை எழுதினாலும் அதை எதுத்து பின்னுட்டம் போடுறான், இந்தக் கூட்டத்துல இருந்தா குத்தத்தை ஒத்துக்க", என்று ஒருவர் ஆரம்பிக்கவும்,
"ஆமண்ணே, எம்ப்லோக்குல ஒருத்தன் 'பெருச்சாளி'-ன்னு தொந்தரவு தர்றான்' எம்ப்லோக்குல, "நான் தான் அவன்" -ன்னு ஒருத்தன் வர்ரான்,
மொத்த கும்பலும் ஒருவரை ஒருவர் சந்தேக கண்ணோடு பார்த்து கொண்டு எழுகையில், ஜோதி பாரதி அண்ணன், " ஏம்பா, வடைக்கு சட்னி கொண்டுவந்தேன் அதை எடுக்காம விட்டுடோமே" என்கையில் கூட்டம்

நிகழ்ச்சி நிரலின் கடைசிக்காக தேதண்ணி குடிக்க கடையை நோக்கி நகர்ந்த நேரம் முன்னிரவு மணி எட்டு.


விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள்
7 comments:

அப்பாவி முரு said...

மன்னிக்க வேண்டும் நண்பர்களே.,

இந்த பதிவை எழுதிய பின், மீண்டும் சரி பார்க்க திறந்த போது என்னால் மூன்று, நான்கு கணினிகளிலும் திறக்க முடியவில்லை. அதனால் இப்பதிவில் இருக்கும் எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்.

Anonymous said...

:)
Anputan
Singai Nathan

நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க ...

வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

என்னாப்பா இது..

ஒரு படம் கூட காணும்.. என்ன பதிவர் சந்திப்பு...

அட்லீஸ்ட் அந்த பப்பாளி அல்வா படைத்தையாவது போட்டு இருக்கலாம் இல்ல..

நல்லா எழுதியிருக்கீங்க.. கீப் இட் அப்..

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...
மன்னிக்க வேண்டும் நண்பர்களே.,

இந்த பதிவை எழுதிய பின், மீண்டும் சரி பார்க்க திறந்த போது என்னால் மூன்று, நான்கு கணினிகளிலும் திறக்க முடியவில்லை. அதனால் இப்பதிவில் இருக்கும் எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும். //

எந்த கணினியில் எழுதினீர்களோ அந்த கணினியில் திறந்து பாருங்கள், அங்கு இருக்கும், அதை விட்டு விட்டு, வேற கணினியில் தேடினால் எப்படி கிடைக்கும்.. வைத்த இடத்தில் தேடணும்.

என்ன புரிஞ்சுதா...

சி தயாளன் said...

நான் டோன் லீ கிடையாது. டொன் லீ...:-)

அட...அப்ப முதலில் சந்திப்பு வந்தது நீங்கள் தானா..நான் கவனிக்காமல் போயிட்டனே...எனக்கும் இரு தமிழர்களை முதலில் பார்த்த ஞாபகம். வடிவாக கவனிக்கவில்லை :-)

கோவி.கண்ணன் said...

பதிவர் சந்திப்பு தாண்டி பலவற்றை எழுதி இருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கு, இன்று (11 ஜன 2009) தான் இடுகையை படித்தேன்.

சிங்கை பதிவர்கள் மின் அஞ்சல் குழுமத்தில் இணைந்து கொண்டால் (பதிவர் சந்திப்பு) பதிவு போட்டவுடனேயே தகவல் தெரிஞ்சுடும்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB