நமது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட சிறப்பு தரிசனத்தின் ஒரு பகுதியாக, மதுரை-தேனி மாவட்டங்களுக்கிடையே சுற்றுப்பயணத்தில் ஒரு குடும்ப நண்பர் cum சொந்தக்காரர் வீட்டிற்க்கு, நமது உடன்பிறந்த அன்பு தம்பியுடன் சென்றிருந்தோம்.
நமது குடும்பநண்பர், ஓய்வுபெற்ற காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (Rtd ASP), அவரது மகன் வழக்குரைஞராக பயிற்சி செய்கிறார். வீட்டிற்க்கு சென்றதும் வழக்குரைஞர் எங்களை வரவேற்று உபசரித்தார். அப்பா பின் தோட்டத்தில் இருப்பது தெரிந்ததும், தம்பி அவரை சந்திக்க உள்ளே சென்று விட்டான்.
நானும், வழக்குரைஞரும் வழக்கமான குசல விசாரிப்புகளை பகிர்ந்து கொண்டபின், என்ன பேசுவது என்ற குழப்பத்திற்க்குப் பின், வழக்குரைஞருக்கு முதல் கேள்வியை நான் கேட்டேன்,
“இப்ப நாட்டுல, சமூக நடவடிக்கை, சமூக அமைப்பு எப்படி இருக்கு?”
"எதைப் பத்தி கேக்குறீங்க?”
“அதுவந்து, பொதுவா வீட்டுக்கு வெளியில ஒருத்தன, ஒருத்தன் எப்படி ஏமாத்துறது? அதுல நாமக்கு ஏதாவது கொஞ்சம் கெடக்குமா? அதுக்காக பொய் பேசவும் தயங்குறது இல்லை. அதே வீட்டுக்குள்ள பாத்தோம்னா, அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடிகூட காதல்ங்கிறதும், ஜாதி விட்டு ஜாதி காதல்ங்கிறதும் தப்பா இருந்தது, இன்னக்கி பெரிய தப்பா தெரியலை, புருசன் – பொண்டாட்டி ஒறவுல கொஞ்சம் பிடிப்பு கொறஞ்சிருக்கு, அதாலயா என்னனு தெரியல, கள்ளக்காதல் பெருகிக்கிட்டு இருக்கு. யாராவது தப்பு செஞ்சு மாட்டிக்கிட்டா, கேள்வி கேக்குறவுங்ககிட்ட- ஏன், என்னை மட்டும் கேக்குறீங்க, அடுத்த தெருவுல - இந்த வீட்டுல, நடந்தப்ப ஒன்னும் சொல்ல- ஒன்னும் செய்யல, அப்புறம் என்னை மட்டும் ஏன் கேள்வி கேக்குறீங்கன்னு- எதிர் கேக்குறாங்க”
“தப்பு செஞ்சுட்டு அதுக்கு அவுங்க தெருவுலயே இல்ல அவுங்க ஊருலயே இல்ல அவுங்க சொந்தக்காரங்களேயே ஒரு முன்னுதாரணமா காட்டிடுறாங்க. அதாவது இது போல கெட்ட விசயங்களுக்கு முன்னுதாரணங்கள் ரெம்ப ஈசியா கெடைக்குது”
இந்த 498A அப்பிடின்னு ஒரு சட்டத்தை சொல்லுறாங்களே, அதை எப்படி பயன்படுத்துறங்க?
பொதுவா, அதை புருசனை- அவுங்க குடும்ப ஆளுகளை மிரட்டுரதுக்கு கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துறாங்க.
நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி, குடும்ப நல கோர்ட்க்கு வந்த ஆம்பளை ஆளுகளை கோர்ட் வாசல பாத்தாக் கூட, குடும்ப நல கோர்ட்க்கு வந்ததை காமிச்சுக்காம, சும்மா அப்படியே ப்ரண்டு கூட வந்தேன், இல்லயினா ஒரு ஜாமீனுக்கு வந்தேன்னு சொல்லுவாங்க. அவுங்க மழுப்புறதுல இருந்து வக்கில் நமக்கு தெரியாதா, சரி குடும்ப்த்துக்குள்ள ஏதோ பிரச்சனை போலன்னு நாமல நினைச்சுக்க வேண்டியது தான்.
ஆனா இப்பயெல்லாம், லேடிஸ் நல்லா மேக்கப் பண்ணிக்கிட்டு ஏதோ பொருள்காட்சிக்கு வந்தது போல வற்றாங்க. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி காலைல 11 மணிக்கே குடும்ப நல கோர்ட்ல எல்லா வேலையும் முடிஞ்சுடும், ஆனா இப்ப,
சாயந்திரம் ஆறுமணி வரைக்கும் கோர்டும், ஜட்சும் வேலை செய்யுராங்க.
அதுலயும் ஒரு கொடுமய கேளுங்க, ஒரு விவாவரத்து கேசுல,
ஆறு வயசுல பையனிருக்குர புருசன் – பொண்டாட்டி விவாகரத்து கேஸ் நடந்துகிட்டு இருந்தது. அப்ப, குழந்த பயன் அம்மாகிட்ட இருக்கு, வாய்தா அன்னைக்கு மட்டும் தான் அந்தம்மா புருசன் குழந்தையைப் பாக்க முடியும். இந்தம்மா வாய்தாவுக்கு வரும்போதெல்லாம் கூடவே ஒரு ஆளும் குழந்தையை தூக்கிக்கிட்டு வந்து அவுங்கப்பாகிட்ட குழந்தையை காமிப்பாரு. நான் கூட அந்தாளு, அந்தம்மாவோட அண்ணன் தம்பியா இருக்குமுனு நினைச்சேன். அப்புறமாதான் தெரிஞ்சது, விவாகரத்துக்கு அப்புறம் அந்தம்மா அந்த குழந்தயை தூக்கிக்கிட்டு வர்ர ஆளைத்தான் கல்யாணம் கட்டிக்கப் போகுதாம்.
அதாவது புயூச்சர் அப்பா குழந்தய எக்ஸ் அப்பாகிட்ட காமிச்சுக்கிட்டு இருக்காரு. இதுமாதிரி பல வித்யாசமான கேஸுக்கள், ரொம்ப சாதாரணமான காரணத்துக்காகவெல்லாம்
விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு தாராளமா படியேறி வர்ராங்க.
இப்படியெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் முத்தாய்ப்பாய் ஒரு வாக்கியம் சொன்னார்
“முன்னெல்லாம் (சட்ட)வசதி, அறிவு இல்லாம கஷ்ட்டப்பட்டு குடும்பத்தை ஓட்டுனாங்க. ஆனா இப்ப, (சட்ட)வசதி இருப்பதனால ரொம்ப ஈசியா குடும்பத்தை ஒடைக்கிறாங்க”
ஒரு வழக்கறிஞர் தன் தொழிலைத்தாண்டி, அந்த வசதியை மக்கள் எப்படி தவறாக பயன்படுத்தி நம் சமூக கட்டமைப்பின்
கண்ணுக்குத்தெரியாத கட்டுக்களை- தங்களுக்குத் தெரியாமலே இளக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள் என்று வருந்தியதால் வந்த வார்த்தைகள். இதன் வலியை உணரமுடியாத அளவு நாகரீக போதையில் இருக்கிறார்கள். ஆனால், அந்த போதை தெளியும் போது உதவி செய்ய உறவு என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்பதே நிதர்சணம்.
0 comments:
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.