வெளிநாட்டிலிருந்தும், இராணுவத்திலிருந்தும் விடுமுறை அல்லது ஓய்வு பெற்று வருபர்களிடம் ஒரு நல்ல!? பழக்கமிருக்கும், அது, நான் அங்க ஒழுக்கமா இருப்பேன், அமைதியாய் இருப்பேன், காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சுருவேன், ஆனா இங்க நீங்க அப்படி இருக்கிறதில்லை. இது தப்பு இதை மாத்தணும், நீங்களெல்லாம் திருந்தணும் என்று விடாமல் நாள்கணக்கில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
இப்படி இருக்கும் கலாச்சார சூழ்நிலையில், மும்பையில் பணிபுரிந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரரும் (A REAL HERO), சிங்கையிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கும் வாய் சொல் வீரரும் சந்த்தித்தால், உடனிருந்தவர்களின் நிலை?
அவர் நமது நாள்பட்ட நண்பனின் தங்கையின் கணவன். அவர்களின் திருமணத்தின் போது சிங்கையிலிருந்ததால், அவருடன் நேரடி பழக்கமில்லை. அவர் என்னுடய ஊருக்கு வந்திருப்பது தெரிந்ததும் நேற்று அவர்க்காகவே நண்பனின் வீட்டிற்க்கு சென்று, சுயஅறிமுகம் செய்துகொண்டோம். மாமா நல்ல உடல்வாகு, பார்த்தாலே “ஏட்டய்யா”(ஒசந்த அதிகாரி ஹி... ஹி... ) என்பது தெரிகிறது.
தங்கையின் முகத்தில் குடிகொண்டிருக்கும் சந்தோசத்திலேயே மாமா எவ்வளவு நல்லவர் என்பதை உணர்ந்துகொண்டேன். வழக்கமான குசல விசாரிப்புகளுக்கு பின், நமது தனிப்பட்ட கேள்வி தொகுப்பிலிருந்து பல கேள்வி கணைகள் பாதுகாப்பு படை வீரரை நோக்கி பாய்ந்த்து.
தற்ப்போது நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?
இப்ப, நாட்டுமக்கள்கிட்ட விழிப்புணர்வே சுத்தமா இல்லை. என்னதான் பாதுகாப்புக்கு போலீசை குவிச்சுவைச்சாலும் மக்களோட ஒத்துழைப்பில்லாமல், மக்களிடமிருந்து தகவல் இல்லாம போலீசால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு தெரியமாட்டேங்குது. மக்கள் நடமாட்டம் அதிகமான ரயில்வே ஸ்டேசன், கடைதெரு, கோவில்களுக்குப் போற மக்கள், அவுங்க பாட்டுக்கு கோவிலுக்கோ, கடைக்கோ கூட்டத்தோட கூட்டமா உள்ள போயிட்டு வெளிய வந்திடுறாங்க. சுத்துமட்டத்துல, என்ன நடக்குதுன்னு பாக்குறதே இல்லை, யாராவது வித்தியாசமா நடந்துகிட்டாக் கூட அதைப் பத்தி எந்த விழிப்பும் இல்லாத்தால, போலீசுக்கு தகவல் சொல்லாம அந்த இடத்தை விட்டு வந்திடுறாங்க.
அப்புறம் ஏதாவது நடந்த பின்னாடி, போலீஸ் சரியில்லை, போலீஸ் சரியா வேலைசெய்றதில்லைன்னு சொல்லுறாங்க. என்னதான் போலீஸ் பவரோட இருந்தாலும், எந்த முன் தகவலும் இல்லாம எப்படி கெட்ட சம்பவங்களை நூத்துக்கு நூறும் தடுக்க முடியும்?
அடுத்த கேள்வி, இப்ப ராணுவத்தில் சேர்வது குறைந்திருக்கிறதா?
அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்தந்த பிராந்தியத்துக்கு எவ்வளவு ஆள் எடுக்கணுமோ, அது சிப்பாயிலிருந்து – ஆபிசர்க்கு ஆளெடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் நிறைஞ்சுடுது. ராணுவத்துக்கும், போலீசுக்கும் ஆள் வர்ரது எள்ளவும் குறையவேயில்லை.
ஆனா ஒரு சிலர் டாக்டர், எஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையில்லாம் நாட்டுக்குள்ள செஞ்சாத்தான் நல்லாஇருக்கும்முனு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா உண்மையில, மெடிசின், எஞ்சினீரிங், சாப்ட்வேர் எல்லாத்திலும், புது கண்டுபிடிப்புகள் மிலிடரில்ல பயன்படுத்துன பின்னாடிதான் நாட்டுக்குள்ள வருது என்பதை மறந்துடுங்றாங்க. அப்ப உண்மையான “challenging job, thrilling life” எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கங்க.
அடுத்து ராணுவத்துல சேர்ந்தா உயிருக்கு உத்திரவாதமில்லைன்னு படிச்சவங்க மத்தியில நினைச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிலையில இது முட்டாள்தனமாயிடுச்சு. எப்படின்னா, சமீபத்துல நடந்த தீவிரவாதி தாக்குதல் எங்க நடந்துச்சுன்னு யோசிச்சு பாருங்க,
பெங்களூருல்ல சாஃப்ட்வேர் கம்பனிகளை குறிவச்சும், பாம்பேல பொது மக்கள் புழங்குற ரயில்வே ஸ்டேசன்லயும்- பெரிய மனுசனுங்க புழங்குற தாஜ் ஹோட்டலையும், அடுத்து காயம் பட்டு அரை குறை உசுரோட வர்ற மக்களை குறிவச்சு ஆஸ்பத்திரிகளிலும் தானே குண்டு வச்சாங்க.
தீவிரவாதிகளுக்கு எந்த சட்ட திட்டமில்லாததால, பொதுமக்களுக்கு எங்கேயும் நூறு சதவீத பாதுகாப்பில்லை என்பதே உண்மை. தீவிரவாதத்தால ராணுவத்துல சாகுறவுங்க சதவீதமும், பொதுமக்கள் சாகுறதோட சதவீதமும் சமமாகிட்டு இருக்கு.
இதனால திறமைசாலிகள், அவுங்களோட திறமை அவுங்க வீட்டுமட்டுமில்லாது, நாட்டுக்கும் பயன்படனும்ன்னு நினைக்கனும்.
அடுத்த முக்கிய கேள்வி, மக்களிடையே தேசிய உணர்வு குறைந்து வருகிறதா?
நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னது
“இந்தியாவில் சுகந்திரமடைந்த போதிருந்த தேசிய உணர்வு இன்றும் வடக்கில் குறையவில்லை, ஆனால் தெற்க்கில் குறைந்துவிட்டது (கவனிக்கவும் கடந்த காலம்)”
எனக்கூறி அவர் முடித்துக் கொண்டார், ஆனால் எனக்குள் பத்திக்கொண்டது?
உண்மையா?
பின்குறிப்பு:-
சந்திப்பில் உடனிருந்த நண்பன், அவரது ஐந்து மாத மகனை பொறியியல் படிக்க வைத்து, ராணுவத்திற்க்கு அணுப்புவதாக சபதம் எடுத்திருக்கிறார்.
நண்பர் மனம் மாறாமல் இருப்பாரா?
11 comments:
\\நண்பர் மனம் மாறாமல் இருப்பாரா?\\
அப்ப நாம?
நான் முதல்ல ஒரு இந்தியன், அப்புறம் தான் தமிழன்.
எனக்கு தமிழ் கலாச்சாரமும் (இயற்க்கை வழிபாடு) வேண்டும், இந்தியன் என்ற அடையாளமும் வேண்டும். எதுக்காகவும் எதையும் விட்டு தர மாட்டேன்.
நான் முதல்ல ஒரு இந்தியன், அப்புறம் தான் தமிழன்.
எனக்கு தமிழ் கலாச்சாரமும் (இயற்க்கை வழிபாடு) வேண்டும், இந்தியன் என்ற அடையாளமும் வேண்டும். எதுக்காகவும் எதையும் விட்டு தர மாட்டேன்.
அப்படி ஒன்றும் குறைந்து விட்டதாக சொல்ல முடியாது . நான் இன்று அளவும் சந்திக்கும் அன்பர்கள் தேச பக்தியோடு தான் இருக்கின்றனர்.இன்னும் சில பேருக்கு அதிகமாகவே உள்ளது. நான் சமிபத்தில் படித்த பதிவு ஒன்றில் ஒரு அன்பர் தனக்கு தேச பக்தி போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் தான் வாழும் நாட்டின் மீது நேசம் இருப்பதாக சொல்லி இருந்தார். என்னை பொறுத்தவரை தேச பற்று உள்ள தமிழனாக இருக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை தேச பற்று உள்ள தமிழனாக இருக்க வேண்டும்///
வாங்க வினோத்...
எல்லோரும் அப்படி தேச பக்தியோடு இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்
தேச பக்தி என்பது ரத்தத்தோடு கலந்தது. இது குறைவு அதிகம் என்று அளக்க முடியாது.
தாய் தன் மகனிடம் காண்பிக்கும் அன்பை அளக்க முடியுமா?
என்னாதான் வெளிநாட்டில் வேலை செய்தாலும் (பிழைப்பு) எப்படா ஊர் வருவோம் என்று உள்ளது. நான் இப்போதே இன்னும் நான்கரை மாதத்தில் ஊருக்கு போகலாம் என்று மனதில் உற்சாகம் கொண்டு இருக்கின்றேன்.
சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா?
மக்கள் நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது ஒன்று சேர்ந்துவிடுகின்றார்கள்.
நான் சந்தித்தவரையில் (எனக்கு தெரிந்தவரையில் என்றும் சொல்லலாம்) நம் மக்களின் தேசபக்தி இன்று நீறு பூத்த நெருப்பு போல உள்ளது
தமிழ்நாட்டை பொறுத்தவரை என்று திராவிட நச்சுகிருமிகள் பரவ ஆரம்பித்தோ அன்று குறைய ஆரம்பித்தது தான் தேசப்பற்று. சுதந்திர தினத்தையே கருப்பு நாளாக அனுஷ்டிக்கும் தலைவர்களை பெற்ற புண்ணியவான்கள் அல்லவா இவர்கள்.
பத்தாதற்கு தற்சமயம் தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் சரிபாதி பேர்வழிகள் தேசவிரோத சக்திகள் தான்.
The deliberate passivity of the Government of India and the inablity of TN governmnent have made me distrust in India. I hate Congress to which I have voted in the past elections. I feel ashamed pf it.
நான் இந்தியன் என்று சொல்லிகொள்வதில் வருத்தபடுகிறேன், ஆம் இஸ்ரேல் என்ற நாட்டை கண்டிக்கும் மனம் இருக்கிறது என் இனம் அழியும்போது கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய அரசை எப்படி நான் விரும்புவது. நான் முதலில் தமிழன் பிறகு தான் இந்தியன்.
என்னோட பின்னூட்டம் போட்டு 24 மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை.
எனக்கும் என் தம்பி முருவுக்கும் ஆன புரிதலை கெடுக்க நினைக்கும், உள்நாட்டு, வெளி நாட்டு சதி என்பதை இங்கு ஆணித்தரமாக சொல்லிக் கொள்ளும் அந்த தருணத்தில், எங்கள் பாசத்தை யாரும் கெடுக்கவோ / முறிக்கவோ முடியாது என்பதையும், இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
தேச பக்தி என்பது ரத்தத்தோடு கலந்தது. இது குறைவு அதிகம் என்று அளக்க முடியாது.
தாய் தன் மகனிடம் காண்பிக்கும் அன்பை அளக்க முடியுமா?
என்னாதான் வெளிநாட்டில் வேலை செய்தாலும் (பிழைப்பு) எப்படா ஊர் வருவோம் என்று உள்ளது. நான் இப்போதே இன்னும் நான்கரை மாதத்தில் ஊருக்கு போகலாம் என்று மனதில் உற்சாகம் கொண்டு இருக்கின்றேன்.
சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா?
மக்கள் நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது ஒன்று சேர்ந்துவிடுகின்றார்கள்.
நான் சந்தித்தவரையில் (எனக்கு தெரிந்தவரையில் என்றும் சொல்லலாம்) நம் மக்களின் தேசபக்தி இன்று நீறு பூத்த நெருப்பு போல உள்ளது///
உங்களை வழிமொழிகிறேன் அண்ணா...
///என்னோட பின்னூட்டம் போட்டு 24 மணி நேரம் ஆகியும் இன்னும் வரவில்லை.
எனக்கும் என் தம்பி முருவுக்கும் ஆன புரிதலை கெடுக்க நினைக்கும், உள்நாட்டு, வெளி நாட்டு சதி என்பதை இங்கு ஆணித்தரமாக சொல்லிக் கொள்ளும் அந்த தருணத்தில், எங்கள் பாசத்தை யாரும் கெடுக்கவோ / முறிக்கவோ முடியாது என்பதையும், இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்பதையும் இங்கு பதிவு செய்கின்றேன்.///
மன்னிக்கணும் அண்ணா...
என்னூட ஊருல எப்பவாவது தான் இணைய தொடர்பு கிடைக்கிறது. உங்களுக்குக்காகவே சென்னை வந்து பதில் சொல்கிறேன்
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.