நான் நினைப்பது சரியா?

பதிவுலகம் அறிந்த அணைவருக்கும், பதிவர் அறிவிழி (ராஜ்குமார்)-யை தெரிந்திருக்கும். கடந்த 2008 செப்டம்பர் மாதம் 20 தேதி அறிவிலி(அறிவில்லாதவன்) என்ற பெயரில் எழுத ஆரம்பித்தவர், தனது இரண்டாவது பதிவில் நமது சகபதிவர் அண்ணன் செல்வகுமாரின் வேண்டுகோளுக்காக அறிவிழி(அறிவில் ஆதவன்) என மாற்றம் பெற்று எழுதியவர்.

இதுவரை மொத்தம் 173 பதிவுகள் இணைத்ததில்,முப்பது பதிவுகள் கட் அண்ட் பேஸ்ட் முறையில் அவர் ரசித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணைத்திருந்தார்.அவர் எழுதிய பதிவுகள் எல்லாம் காரசாரமான விவாதங்களுக்கு உள்ளானது, ஆனால் அவரோ ஒழுக்கமான முறையில் கேட்க்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தார்.

தனது முதல் பதிவிலே, கலைஞரும் கலாநிதி மாறனும் என்ற தலைப்பில் மாறன் சகோதரர்களின் கலைஞருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து எழுத ஆரம்பித்தவர், தமிழக, இந்திய, அமெரிக்க அரசியல்வாதிகளின் மோசமான நடவடிக்கை, செயல்பாடு, பேச்சுக்களையும் விமர்சித்து எழுதினார்.

ஆனால், ஆரம்பத்தில் கண்மூடித்தனமாக கலைஞரை ஆதரித்து எழுதியவர், மாறன் சகோதரர்கள் தங்கள் தாத்தாவுடன் ஒருஇரவில் இணைந்ததை தாங்க முடியாமல் தனது உள்ள குமுறலைக் கொட்டிய கடிதம் தான், கழகத்தின் கண்ணான காவலராம் கலைஞருக்குக் கழகத்தின் கடைக் கோடி கண்மணியின் கடிதம். இந்த கடித்திற்க்குப் பின் அறிவிழியின் கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு மாறியது. ஆனாலும் கலைஞர் என்ற தனிமனிதனைத்தான் ஆதரித்தாரே ஒழிய, தி.மு.கழகத்தை ஆதரித்து எழுதுவதில்லை.

ஆனால் ஒரு சாதாரண பார்வையாளராக இருந்து சகல விசயங்களிலும் தன்னுடைய பார்வையின் மூலம் கண்டறிந்ததை உடனடியாக பதிவிட்டு மற்றவர்களுக்கு தகவலைச் சொன்னார், அவற்றில் குறிப்பிடத்தக்க சில,

அமெரிக்க பொருளாதார நெருக்கடி-இந்திய மென்பொருள் வல்லுனர்கள் தெருவில் நிற்கப் போகின்றனர்...

அவரவர் வீடுகளில் புகைப்பிடித்தாலும் அபராதம் - ஐயோ பாவம் திருவாளர் பொதுஜனம்,

இதயம் கொடுத்த ஹிதேந்திரன் எங்கே - உயிரைப் பறித்த காவலர்கள் எங்கே

இந்துக்களின் அறியாமையும், அடிமைத் தனமும் - மதம் என்றால் என்ன?

பிஞ்சுக் குழந்தைகளைக் கூட சிதைக்கும் காமக் கொடூரர்கள் - உறவினரையும், அடுத்த வீட்டுக்காரரையும் கூட நம்பாதீர்கள்!

50 நாட்கள் பதிவுகள் எழுதியதால் எனக்கு கிடைத்த வருமானம் - ரூபாய் 5 கோடி ( பதிவர்களுக்கு எச்சரிக்கைப் பதிவு.)

அந்தரத்தில் பறப்பது எப்படி? ஏமாற்றும் போலிச் சாமியார்கள். பாருங்கள் வீடியோவை

சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்துகிறீர்களா? - எச்சரிக்கை தேவை - புகைப்படங்கள்

புத்தாண்டு கொண்டாட்டம்! குடி! குடி உன்னைக் குடித்து விடாமல்! குடியால் ஒரு கிரமாமே விதவைக் கோலம் பூண்ட கதை தெரியுமா?

சத்யம் ராசு நல்லவரா? கெட்டவரா? 420யா? இல்லை வள்ளலா?

ரயில் சிநேகிதனால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் துணிகர முடிவு!

ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூடாரங்களா? .

போன்ற பதிவுகள் நமக்கல்லாம் சில விழிப்புணர்வை ஊட்டியவை.


சில நேரங்களில் சக பதிவர்களுடன் பதிவுச் சண்டை போட்டிருக்கிறார். ஈழபிரச்சணைக்காக லக்கிலுக்குடன் தோழர் லக்கிலுக் அவர்களுக்கு மிகுந்த மன வேதனையுடன் ஒரு திறந்த மடல் என்ற பதிவு. (இந்த பதிவில் நான் அறிவிழிக்கும், கலைஞருக்கும் எதிராக சொன்ன கருத்தை அறிவிழி நீக்கிவிட்டார். பல நேரங்களில் நான் அறிவிழியுடன் முரண்படுபவன், அதனால் தான் பதிவு எழுத வேண்டாம் என்றிருக்கும் அறிவிழியை மீண்டும் எழுத அழைக்கிறேன்). அதன்பின் அதே லக்கி ஒரு புத்தகம் வெளியிடுவதை பாராட்டி பதிவிட்டவர் பதிவர் லக்கி லுக் --> எழுத்தாளர் யுவகிருஷ்ணா. வாழ்த்துவோம்! வரவேற்போம்! ஆதரிப்போம்! வாருங்கள்.......... என எழுதி சக பதிவரை ஊக்கிவித்த்வர் தான் இந்த அறிவிழி.


அதே போல் வினவு, வினை செய் ஒரு முறை மொக்கைப் பதிவு உடல் நலத்திற்க்குக் கேடு ! என எல்லா பதிவர்களையும் மிக கேவலமாக எழுதியவுடன், வேறு யாருக்கும் வராத துணிவுடன் நமக்காக நண்பர் அறிவிழி எழுதிய பதிவு மொக்கைப் பதிவுகள் எழதும் பதிவர்கள் அனைவரையும் தூக்கிலே போட்டு விடலாமா? நம் எல்லோருடைய மானத்தை காப்பாற்றியது.


நன்றாக எழுதிக்கொண்டிருந்தவர் ஒரு நாள் மறந்து தனது பின்னூட்ட மட்டறுதலை திறந்துவிட்டார். விட்டார்களா நமது அட்டைக்கத்தி முகமூடி வீரர்கள், (வெற்றிவேல், வீரவேல் என்று கத்தியுடன் போருக்கு வந்த இந்தியரை, பாதுகாப்பாக அரணில் ஒழிந்துகொண்டு துப்பாக்கியால் சுட்ட வெள்ளையனுக்கு ஒப்பானவர்கள்) கூடி கும்மியடித்து, வெற்றி! வெற்றி!! வெற்றி!!! ஜெயலலிதா அம்மையாரின் தொடரும் வெற்றி மழை! அறிவிழி பின்னூட்டத்தயே எடுத்துவிடும்படி செய்துவிட்டனர். (அந்த பதிவில் இருந்த கும்மியடி பின்னூட்டத்தை எழுதியது அறிவிழி தானோ என்ற சந்தேகத்துடன் அவரிடம் விளக்கம் கேட்டேன், அவர் மறுத்ததுடன் அதை எழுதியது சென்னையிலிருக்கும் பிரபல பதிவர்தான் எனக்கூறினார்).


இடையிடையே பைரைட் நண்பர்களின் தொந்தரவு வேறு, அதைப்பற்றி பேசவேண்டியதில்லை ஏனெனில் அது ஒழிக்க முடியாதது. ஆனால் அறிவிழியுடன் பல விசயங்களில் முரண்பட்டு நேரடி விவாதம் செய்தவன், நான். அந்த நேரத்தில் உங்களிடம் தர்க்கம் பண்ணுவதற்க்காகவே பல தகவல்களை தேடித்திரிந்து என்னை புதுபித்துக் கொண்டேன். ஆனால் தற்பொழுது அறிவிழின் பதிவு இல்லாத்தால் புத்துணர்வு இல்லாமல் இருக்கிறேன். உங்களைப் போல் வேறு நல்ல பதிவர்களும் இருக்கிறார்கள், ஆனால் உங்களைப் போல் நிதானமான, தெளிவான பதிகள் தான்

இல்லை.நண்பா அறிவிழி, உங்களுக்கு எதிரிகள் பாதி, நண்பர்கள் பாதி என்றாகிவிட்டது.

உங்கள் எதிரிகள்( வளர்ச்சியை பிடிக்காதவர்கள்) நீங்கள் மீண்டும் வரக்கூடாது, தங்களுக்கு போட்டியாகக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

நண்பர்களோ, மீண்டும் வரவேண்டும், எல்லோருக்கும் எல்லாத் தகவல்களும் சென்று சேரவேண்டுமென்றே நினைக்கிறார்கள்.

ஆனால், யாருடைய (நண்பர்களின், எதிர்களின்) ஆசையை நிறைவேற்றுவது என்பதன் முடிவு உங்கள் கையில் மட்டுமே. சரியான முடிவை மீண்டும் யோசித்து எடுக்கவும்.

10 comments:

நட்புடன் ஜமால் said...

அவருடைய எதிரிகள் தான் அவருக்கு பலம்.

அதற்காகவே நல்லா எழுதுனும்.

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
அவருடைய எதிரிகள் தான் அவருக்கு பலம்.

அதற்காகவே நல்லா எழுதுனும்.//

வாங்க ஜமால் அண்ணே, நமக்கு தெரியுது, அவருக்குப் புரியலையே.

நட்புடன் ஜமால் said...

புரிய வச்சிடுவோம் ...

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் கூறியது...
புரிய வச்சிடுவோம் ...//

எவ்வாறு புரியவைப்பது? தாங்கள் தங்களின் பொன்னான திட்டங்களை பகிரவும்.

இராகவன் நைஜிரியா said...

என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.

நல்லத்தனமா சொல்லிட்டேன்.
கோபப்பட்டு பேசிட்டேன்.
நயமா சொல்லிப் பார்த்துட்டேன்.

என்னால முடியலீங்க.

யாராவது அவரை கொண்டு வந்தா, முதல்ல சந்தோஷப் படுவது நானாகத்தான் இருக்கும்.

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.

நல்லத்தனமா சொல்லிட்டேன்.
கோபப்பட்டு பேசிட்டேன்.
நயமா சொல்லிப் பார்த்துட்டேன்.

என்னால முடியலீங்க.

யாராவது அவரை கொண்டு வந்தா, முதல்ல சந்தோஷப் படுவது நானாகத்தான் இருக்கும்.//

வாங்கண்ணே, நீங்களும் என்னைப்போல தனா?

இராகவன் நைஜிரியா said...

// உங்கள் எதிரிகள்( வளர்ச்சியை பிடிக்காதவர்கள்) நீங்கள் மீண்டும் வரக்கூடாது, தங்களுக்கு போட்டியாகக்கூடாது என்று நினைக்கிறார்கள். //

எதிரிகள் இல்லாதவர்கள் யாருங்க..

எல்லோருக்கும் எதிரிகள் உண்டுங்க..

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...

// இராகவன் நைஜிரியா கூறியது...
என்னால் முடிந்த அளவு முயற்ச்சி செய்துவிட்டேன்.

நல்லத்தனமா சொல்லிட்டேன்.
கோபப்பட்டு பேசிட்டேன்.
நயமா சொல்லிப் பார்த்துட்டேன்.

என்னால முடியலீங்க.

யாராவது அவரை கொண்டு வந்தா, முதல்ல சந்தோஷப் படுவது நானாகத்தான் இருக்கும்.//

வாங்கண்ணே, நீங்களும் என்னைப்போல தனா?//

இங்கேயிருந்து போன் போட்டு கூட பேசி பாத்துச்சுங்க.. என்னால முடியல. என் தோலிவியை நான் ஒப்புக் கொள்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// ஆனால், யாருடைய (நண்பர்களின், எதிர்களின்) ஆசையை நிறைவேற்றுவது என்பதன் முடிவு உங்கள் கையில் மட்டுமே. சரியான முடிவை மீண்டும் யோசித்து எடுக்கவும்.//

நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகின்றேன்.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அப்பாவி முரு said...

// இராகவன் நைஜிரியா கூறியது...
// ஆனால், யாருடைய (நண்பர்களின், எதிர்களின்) ஆசையை நிறைவேற்றுவது என்பதன் முடிவு உங்கள் கையில் மட்டுமே. சரியான முடிவை மீண்டும் யோசித்து எடுக்கவும்.//

நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகின்றேன்.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.//

மீண்டும் யோசிக்க அவருக்கு கொடுத்த காலம் காலம் முடிவடைந்து விட்டது.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB