சபாஷ், அம்மா வழியில் தாத்தாவும் தள்ளாமையையும் தாண்டி தனி ஈழம், தமிழ் ஈழம் என புலம்ப ஆரம்பித்துவிட்டார். இந்த புலம்பலுக்கு தேர்தல் தான் காரணம் என்பதை பத்து நாள் முன் பிறந்த குழந்தையும் அறியும்.
உச்ச நீதி மன்றத்தின் இடைக்கால ஆணை, கடைக்கால ஆணை மற்றும் தீர்ப்பு என எதுவாக இருந்தாலும் சரி அதையெல்லாம் கண் கொண்டு பார்க்கவும் மாட்டேன், காது கொடுத்து கேட்டவும் மாட்டேன், என அடம்பிடித்து (வாழ்ந்து!) வருகின்றன அண்டை மாநிலங்கள். மொத்ததில் நதிநீர் பங்கீட்டு விசயத்தில் தேசிய ஒருமைப்பாடெல்லாம் பார்க்க முடியாது என சொல்லாமல் சொல்லி மார்தட்டி, தோள் துடிக்க தினவெடுத்து விஷ்வரூபம் எடுத்து நிற்கின்றன அண்டை மாநிலங்கள்.
அவர்களுடனான தாவாக்களை வழக்கறிஞர்களுடன் ஆலோசனை, உச்ச நீதி மன்றத்தில் ரிட், அடையாள உண்ணாவிரதம், பிரதமர்- ஜனாதிபதி – உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி போன்றோருக்கு தந்தி, ஒரு நாள் உண்ணாவிரதம், கடையடைப்பு, ரயில் - விமானங்கள் கூட இயங்கமுடியாத அளவுக்கு அரசுமுறை பந்த் என குண்டுச் சட்டியிலேயெ காலத்தை ஓட்டிவிட்டன ஆளும், ஆண்ட கழகங்கள். இடையில் மறவாமல் மத்திய அரசில் அங்கம்.
இதற்காகத்தானா தனிதமிழ்நாடு கோரிக்கையை விடுத்து, வீடு - ஓடு என தேசிய ஒருமைப்பாடு பேசினாரா அண்ணா?
சென்னையில் குடிக்கத் தண்ணீர் இல்லை, ராமநாதபுரத்தில் @#$# கழுவ தண்ணீரில்லை, காவிரி, வைகை ஆற்று படுகைகளில் விவசாயத்திற்கு தண்ணீரில்லை, பருவ மழை கைகொடுத்து வெள்ளாமை வைத்தால் - அறுப்பு வேலைக்கு ஆளில்லை, கிராமங்களில் இளைஞர்கள் இல்லாததால் அவை இன்று கிராமங்களாகவே இல்லை, நகர் புரங்களில் இருக்க இடமில்லை, சென்னையைத் தாண்டி தெற்கே வர தொழிற்சாலைகளுக்கு மனமில்லை, கற்ற தொழிற்கல்விக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய சம்பளமில்லை, சம படிப்பு படித்து வெளியேருகிறவர்களுக்கு சமமான சம்பளமில்லை, இல்லை...இல்லை...இல்லை...
ஆக, ஆயிரமாயிரம் இல்லைகள் இருக்கும் நாட்டில், இருபது நாட்களுக்கு முன் அம்மாவுக்கு பொங்கிய தனி ஈழப்பிரவாகம் இன்று தாத்தாவிற்கும் பொங்கி உள்ளது. அண்டை மாநிலத்தின் தயவால் காவிரி பொங்குவதைத் தான் பார்க்கமுடிவதில்லை, ஆனாலும், ஈழத்தின் மேல் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த திடீர் பிரவாகத்தை கண் குளிர பார்க்க, ஏனோ முடியவில்லை!
அதற்கு காரண காரிய விளக்கம் தேவையில்லாத அளவுக்கு அந்தர் பல்டிகள் பல அடித்து, உலக தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை வெறுப்பால் பெற்றுள்ளனர் இந்திய, தமிழக அரசியல்வாதிகள். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்குத் தோன்றியிள்ள திடீர் ஈழப்பாசத்தால், வாழ்வாதாரத்தில் வழுக்கி விழாமல் இருக்க வேண்டும். மற்றும், அரசியல்வாதிகளின் தேர்தல் நேர பாசமெல்லாம் வெறும் கூட்டல் – கழித்தல் கணக்கு மட்டுமே என்பதையும் உணர வேண்டும் தமிழ் மக்கள்.
ஈழ விசயத்தில் நேற்று ஒரு பேச்சு –கொள்கை- அறிக்கை, இன்று வேறு பேச்சு – கொள்கை - அறிக்கை என மாற்றி, மாற்றி பேசும் அரசியல்வாதிகளின் போலி முகங்களையும், அவர்கள் தம் விடும் நீலி கண்ணீரையும் நம்பி வாக்களிக்காமல், தமிழ்நாட்டில் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ள மேற்கூறிய இல்லைகளை இல்லாமால் செய்யும்!? அரசியல்வாதிகளுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டுகிறேன்.
ஆனால் இது பகல்கனவு என உள் மனம் கூறுவது, வேதனையாகத் தான் உள்ளது.
11 comments:
நச்னு எழுதியுருக்கிங்க
நம்மால வேதனைப் படுவதைத் தவிர என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்? எல்லாமே சுயநலப் பிண்டங்கள்.. தேர்தல் முடிந்தால் இந்த விஷயங்களைப் பற்றி பேச நாதி இருக்காது..:-(
தலைப்பிலேயே சாட்டையடி...
//சென்னையில் குடிக்கத் தண்ணீர் இல்லை, ராமநாதபுரத்தில் @#$# கழுவ தண்ணீரில்லை, காவிரி, வைகை ஆற்று படுகைகளில் விவசாயத்திற்கு தண்ணீரில்லை, பருவ மழை கைகொடுத்து வெள்ளாமை வைத்தால் - அறுப்பு வேலைக்கு ஆளில்லை, கிராமங்களில் இளைஞர்கள் இல்லாததால் அவை இன்று கிராமங்களாகவே இல்லை, நகர் புரங்களில் இருக்க இடமில்லை, சென்னையைத் தாண்டி தெற்கே வர தொழிற்சாலைகளுக்கு மனமில்லை, கற்ற தொழிற்கல்விக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய சம்பளமில்லை, சம படிப்பு படித்து வெளியேருகிறவர்களுக்கு சமமான சம்பளமில்லை, இல்லை...இல்லை...இல்லை...//
இவற்றையெல்லாம் பேச அரசியல்வதிகளும் தயாரில்லை.
தமிழக ஊடகங்களும் தயாரில்லை. இந்த விசயத்தில் அரசியல்வியாதிகளுக்கு அடுத்தபடியாக குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டியது தமிழக பத்திரிக்கையாளர்களை தான்
பிரச்சனைகளை வளரவிட்டு குளிர் காய்வதே இவர்களுக்கு வழக்கமாகப் போய்விட்டது.
தமிழகத்தின் நலன், தமிழரின் நலன் என்று வந்தால் கூட இவர்கள் ஒன்றாக மாட்டார்கள்.
ரொம்ப நெகடிவ்வா யோசிக்கிறிங்க!
இந்த ஆட்சியில் ஒரு ருபாய்க்கு அரிசி கிடைக்குது தெரியுமா!?
இலவ்ச கலர் தொலைக்காட்சி பெட்டி தர்றாங்க!
அரிசிய மென்னுகிட்டே ரசினி படம் பாருங்க டீவீயில!
காவிரிப் பிரச்சினை வழக்கமாக ஜூன் ஜூலை மாதமளவில் தானே வரும்..ஆனா தேர்தல் மே மாதம் வந்து விடுகிறதே..அதான்..
அதவிட மக்களின் மறதி.....
//சென்னையில் குடிக்கத் தண்ணீர் இல்லை, ராமநாதபுரத்தில் @#$# கழுவ தண்ணீரில்லை, காவிரி, வைகை ஆற்று படுகைகளில் விவசாயத்திற்கு தண்ணீரில்லை, பருவ மழை கைகொடுத்து வெள்ளாமை வைத்தால் - அறுப்பு வேலைக்கு ஆளில்லை, கிராமங்களில் இளைஞர்கள் இல்லாததால் அவை இன்று கிராமங்களாகவே இல்லை, நகர் புரங்களில் இருக்க இடமில்லை, சென்னையைத் தாண்டி தெற்கே வர தொழிற்சாலைகளுக்கு மனமில்லை, கற்ற தொழிற்கல்விக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை, வேலையிருந்தாலும் போதிய சம்பளமில்லை, சம படிப்பு படித்து வெளியேருகிறவர்களுக்கு சமமான சம்பளமில்லை, இல்லை...இல்லை...இல்லை...//
வித்தியாசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்!!!!! மற்ற ஒப்பாரி பதிவர்களிடமிருந்து வேறுபட்டு தமிழக பிரச்சினைகளை அலசியதற்கு...
சமீப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், தமிழ்நாட்டில் வாழும் மக்கள் "எல்லோரும் இங்கிலீஷ்காரர்களோ" என்று எனக்கு தோன்றுகிறது. ஏன்னென்றால் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் கடல் தாண்டி கண்ணீர் விடும் தமிழர்கள் மட்டுமே தமிழர்கள் என்று எண்ணி தமிழ்நாட்டு வாசிகளையும் அவர்களின் சிக்கலையும் மறந்தே விட்டார்கள்.
1989 இல் முதன்முறையாக சென்னைக்கு சென்ற பொழுது, நடை பாதையில் வாழும் மக்களையும் அவர் படும் துண்பகளை கண்டு மிகவும் அதிர்ந்தேன்.
1999 இல் (10 வருடங்கள் கழித்து) அதே நடை பாதையில் வாழும் மக்களின் எண்ணிக்கை கூடியதே தவிர, வேறொரு முன்னேற்றமும் இல்லை.
2009 இல் - நிலைமை எல்லோருக்கும் தெரியும். கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.
இதை புரிந்துகொள்ளாத பெரும்பான்மையான தமிழக மக்களும் உணர்ச்சி வெள்ளத்தில் தேர்தலை அணுகி, அவர்களே அவர்களின் பிரச்சினைகளை வளர்த்து கொள்கிறார்கள். இந்த உணர்ச்சிகளை தூண்டி தமிழ் கலை (சினிமா) கூத்தாடிகளும் நல்ல விளம்பரம் தேடி கொள்கிறார்கள்.
2019 இலாவது, தமிழ் நாடு மக்கள் சிந்தித்து தங்களின் உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்.. - ரெங்கா.
நியாயமான ஆதகங்கள்
எல்லா அரசியல்வாதிகளும் நம்மால் வளர்த்துவிடபட்டவர்கள். அவர்கள் எல்லாம் நம்மைப்போலவே......
நாம் வேதனைப்படுவோம் வருந்துவோம்...
அரசியல்வாதிகளும் ஒரு படி மேலே போய்.. மேடையில் பேசுவார்கள்/நடிப்பார்கள்....
நாமும் எதும் செய்யமாட்டோம்...எழுதுவதைத்தவிர...
அரசியல்வாதிகளும் எதுவும் செய்யமாட்டர்கள் பேசுவதைத்தவிர....
மற்றவரை குறை சொல்வதை நிறுத்திவிட்டு....நாம் தான் களமிறங்கவேண்டும்.

"பக்கத்து மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத்தர முடியாதவர்கள், தனி ஈழம் பிரித்துக் கொடுப்பார்களாம்!"
நன்றாகச்சொன்னீர்....இனியுமா இவர்களை நம்பி நாம் பொறுத்திருக்கவேண்டும்....
நாம் ஒன்ரும் பீனிக்ஸ் பறவையல்ல....இறந்தபின் பிறப்பதற்கு....இருக்கும்போதே எழவேண்டும்.
எழு நண்பனே...........
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.