செந்தில் = ஜெயலலிதா!!!

மேலே உள்ள நகைச்சுவைக் காட்சியைத் தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. வாழைப்பழ கணக்கில் குழம்பிப்போய் இருந்த கவுண்டமணியிடம், ”அண்ணே, நான் திருந்திட்டேன்” என சொல்லி அடுத்து எவ்வளவு நுணுக்கமாக செந்தில் கவுண்டமணியை ஏமாற்றுகிறார் என்பதையும், அதனால் அவர் கடைசியில் கவுண்டமணியிடம் பெற்றது வாய் நிறைய சுண்ணாம்பு மட்டுமே என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.அது திரைப்படம் என்பதால் தண்டனை உடனடியாகக் கொடுக்கப்பட்டது.இந்த காட்சிக்கு இணையாக உள்ளது அரசியலில் நமது ஜெயலலிதாவின் தற்போதைய நடவடிக்கை. அவர் யார்?., அவரின் நடவடிக்கைகள்,

சாந்தமான நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்!,

கோவமான நேரங்களில் எப்படி நடந்து கொள்வார்!.,

கொள்கையில் எப்படி இருப்பார்!.,

அதற்காக அவரின் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். (சொல்லக் கேள்வி என்பது குறைவாகவும்,. அவரால் துன்பப்பட்டதே அதிகம், என்பதே தமிழக மக்கள் எல்லோருக்கும் வாழ்வில் பட்ட பாடமாக இருக்கும்!) (அவரை நம்பி வந்த அரசியல்வாதிகளையே என்ன பாடுபடுத்தினார் என்பதை, ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், நல்லகண்ணு போன்றோர் அமர்ந்து காத்திருந்து ஜெயைப் பார்க்க முடியாமல் போன போயஸ் தோட்டத்து நாற்காலிகளையும், தோட்டத்து கதவுகளையும் கேட்டால் பல கண்ணீர் கதைகளைச் சொல்லும்)


முப்பது வருட அரசியல் வழ்க்கையில் இல்லாத அக்கரை, ஒன்பது வருட முதலமைச்சராக இருந்த போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்கள், இரண்டு மாதங்களுக்கு முன், ”போர் என்றால் சில உயிர்கள் பலியாகத்தான் செய்யும், அதற்கு நான் என்ன செய்ய முடியும்” என்ற தோணியில் பேசியது எல்லாம் யாரோ ஒரு சாமியார், படங்களுடன் விளக்கம் கொடுத்ததால் ஓரிரவில் தனி ஈழத்தால் ஈர்க்கப்பட்டவர், அதை தேர்தல் மேடைகளில் பேசி, விளக்கி, வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அம்மையாருக்கு,தேர்தல் முடிந்த பின் திடீரென கனவில் கடவுள் வந்து காட்சியளிப்பதுடன், ”வேண்டாம் மகளே, ஈழத்தை விட்டுவிடு” என சொன்னால், அவரின் இந்த மாற்றத்தைக் கண்டு வாக்களித்த மக்களின் நிலை???


இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத்தருவேன் என சொல்வதெல்லாம் நாற்பது எம். பி பதவிகளுக்காகத்தான். அவர் கட்சி எம். பி பொம்மைகளை வைத்து ஜெ., கண்டுகொண்டிருக்கும் பிரதமர் ஆசைக் கனவின் வெளிப்பாடே இந்த வார்த்தைகள்.


சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாமல், தமிழகத்தின் முதலமைச்சார் ஆகி தமிழகத்தை பீகாருக்கு சவால்விட வைத்ததைப் போல், பாராளுமன்ற உறிப்பினராக இல்லாமலே பிரதமர் ஆகி, இந்தியாவை வைத்து பாக்கிஸ்தானின் அரசியலுக்கு சவால்விடப் பார்க்கிறார் நமது அம்மையார்.
10 comments:

Suresh said...

சும்மா நச் மச்சி வோட்டும் போட்டாச்சு

வால்பையன் said...

அரசியல்ல எல்லாமே திருட்டு கம்முனாட்டிக தான்

ப்ரியமுடன் வசந்த் said...

//சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாமல், தமிழகத்தின் முதலமைச்சார் ஆகி தமிழகத்தை பீகாருக்கு சவால்விட வைத்ததைப் போல், பாராளுமன்ற உறிப்பினராக இல்லாமலே பிரதமர் ஆகி, இந்தியாவை வைத்து பாக்கிஸ்தானின் அரசியலுக்கு சவால்விடப் பார்க்கிறார் நமது அம்மையார்.//

முடியல.........

Rajeswari said...

யோசிக்க வேண்டிய விசயம் இது.

தீப்பெட்டி said...

ஜெயலலிதா நம்பகத்தன்மையில்லாதவர் என்பதே கடந்த காலம் சொல்லும் பாடம். ஆனால் அனைவரும் கைவிட்ட நிலையில் தற்கொலைக்கு முந்தைய முற்சியாக ஜெயலலிதாவை நாடவேண்டிய சூழ்நிலையில் நாம் இருப்பது கவலைக்குரியதுதான்.

TAMIZHAN said...

YOU HAVE TO THINK TWICE BEFORE VOTING. YOU ARE RIGHT ABOUT GOD TALKING TO HER .WHAT IS THE GUARANTEE THAT THIS MOVIE ACTORESS WILL STICK ON WHAT SHE SAID. CHO IS HER MAIN ADVISOR AND HE HATES EELAM TAMILS. WHAT IS THE GUARANTEE SHE DOES NOT GET SUIT CASES THROUGH SASIKALA AND CHANGE HER TUNE COPLETELY? SHE WILL THROW VAIKO IN A BLINK!!!

பழமைபேசி said...

எல்லாம் சர்வ சாதாரணமப்பா!!!

எட்வின் said...

இங்க எல்லாமே ஒரே குட்டைல ஊறின மட்டைங்களாத் தான் தெரியுறாங்க. எவரத் தேன் நம்புறதோ? ஆனா ஒண்ணு... ஏமாறுறவங்க தமிழகத்தில இருக்கிற வர இவங்களப் போன்ற ''புலித்தோல் போர்த்திய பசுக்களும்' இருக்கத்தான் செய்வார்கள். (பசுத்தோல் அல்ல)

ISR Selvakumar said...

ஜெயலலிதா மனது மாறியதாகச் சொல்வது ஒரு பல்டி என்றால், அவரால்தான் விடியும் என்று பிரச்சாரம் செய்பவர்கள் செய்வது அந்தர் பல்டி.

பெருங்காயம் said...

பேயை விட்டு பிசாசை பிடிக்க வேண்டிய நிலைமையில் இப்போது தமிழகம்

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB