வாக்களித்தவர்களுக்கு அப்பாவியின் நன்றி!!!
தேர்தல் 2009-லின் ஐந்தாம் கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதியில் வாக்களித்த தமிழ் பெரு மக்களுக்கு நன்றி…நன்றி…

பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் வாக்களிக்க முடியாத என்போன்றோர் ஆயிரமாயிரம், கருத்து - கருத்துகணிப்பு, ஒரு கூட்டணிக்கு ஆதரவு, அடுத்த கூட்டணிக்கு எதிர்ப்பு போன்றவற்றை இணையம், தொலைபேசி வழி பரப்பினாலோ அல்லது திணித்தாலோ களத்தில் இறங்கி பணியை – கடமையை – உரிமையை நிலைநாட்டிய லட்சோப லட்ச உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

என்னதான் உயர் தர உடைகள், பல்வேறு நாட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட சிறந்த உணவுகள், வீடு, வாகனம், பணியிடம் என அனைத்து இடத்திலும் குளிர்சாதன வசதியால் சூரியனைப் பார்க்காமல் உடல் வாழ்ந்தாலும், உள்ளம் என்றுமே பிறந்த வீட்டை, தெருவை, நண்பர்களை, ஊரை, தாய்நாட்டைத் தான் சுற்றி, சுற்றி வருகிறது. சாவதற்குள் சொந்த ஊருக்குப் போய் சேரவேண்டும் என்ற ஆழ்மனதின் ஆசையை உடனிருக்கும் வெளிநாட்டவரிடம் சொல்லி லோல் பட்டதை மறக்கமுடியாது, ஆனால் என் ஆசையையும் விட முடியாது என்ற உண்மை தான் எனது தாய் நாட்டுப் பாசம்.

வாங்கிய காசுக்காகவோ அல்லது நேர்மையான குடிமகன் என்ற உணர்விற்காகவோ இனிய விடுமுறையை வீட்டிலிருந்தபடி கழிக்காமல், கொளுத்தும் கத்தரி வெயிலிலும் மைல் நீள வரிசையில் வால் பிடித்து நின்று பணநாயகமோ அல்லது ஜனநாயகமோ வாக்கு எனும் மிகப்பெரிய ஆயுத்ததை வீணாக்காமல் பிரயோகித்தற்கு மீண்டும் ஒரு நன்றி.

ஆனால், மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களித்து, மேலேற்றிய நபர் – கட்சியின் தவறான நடவடிக்கையால் எதிர்காலத்தில் மனம் நொந்து போனால், விதியை மட்டும் நொந்துகொள்ளவும் அதற்கு என்னைப் பொறுப்பாக்க வேண்டாம்.

5 comments:

கோவி.கண்ணன் said...

//தேர்தல் 2009-லின் நான்காம் கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதியில் வாக்களித்த தமிழ் பெரு மக்களுக்கு நன்றி…நன்றி…//

5 ஆவது கட்டமாம், சன்னில் கேட்டேன்

தீப்பெட்டி said...

வாக்களித்த மக்களுக்கு நானும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

வால்பையன் said...

நீங்க என்னவோ தேர்தல்ல நின்ன மாதிரி நன்றியெல்லாம் சொல்றிங்களே!

கலையரசன் said...

ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!
www.kalakalkalai.blogspot.com

SUBBU said...

"வாக்களித்தவர்களுக்கு அப்பாவியின் நன்றி!!!"

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB