தண்டவாளத்துல தலைய வச்சு படுத்துக்கிட்டே இந்தி -ய ஏத்திகிட்டு வந்த ரயில தமிழ்நாட்டுக்குள்ள வரவிடாம தடுத்து, தமிழயும் – தமிழ்நாட்டையும் பெரிய அழிவுல இருந்து காப்பாத்துனவரு., இந்த தடவை மேலையும் – கீழையும் கூட்டணிக் கட்சியோட மைனாரிட்டி ஆட்சி பண்ணுனாலும் தமிழ மறக்காம `செம்மொழி` யாக்கினதால தான் இன்னிக்கும் நம்ம தமிழ் உசுரோட இருக்குது, இன்னிக்கி பிளாக்கு தமிழ்ல எழுதுறதுக்கே நம்ம தாத்தா தமுழ செம்மொழி ஆக்கினதால தான்னு வேற பேசிக்கிறாக,
அடுத்து ராசாசி – பெரியாரு (1), அண்ணா – காமராசரு – இந்திரா காந்தி (2), எம். சி. யாரு – நெடுஞ்செழியன் (3)., ராசிவ் காந்தி - ஜெயலலிதா – வைக்கோ – ராமதாசு – சோனியா காந்தி (4)., விசயகாந்து – சரத்குமாரு(5) இப்பிடி அஞ்சு தலைமுறை ஆளுகளோட `அரசியல்` பண்ணி அப்பப்ப செயிப்பாருல்ல,
கடந்த பாஞ்சு வருசமாவே டில்லில இவருக்கு நல்ல பவரு இருக்கு – இவரு சொல்லுற ஆளு பிரதமராக முடியுமோ இல்லீயோ, இவருக்கு பிடிக்காத ஆளு நிச்சியமா பிரதமரா ஆக முடியாதுல்ல!,
அடுத்து டில்லிக்கி பிளைட்டெடுத்து போனாருன்னா அவரோட தம்பிகளுக்கு வேணும்ற அமைச்சரு பதவிய அள்ளிக்கிட்டுத்தான் வருவாரு, மயங்களுக்கும் – பேரைங்களுக்கும் சண்டை வந்து அடிச்சிகிட்டு சொக்கப்பனை கொளுத்தி விளையாடினாலும் ஒரு ராத்திரியில கூப்பிட்டு, பேரம் பேசி பஞ்சாயத்தை முடிச்சிருவாரு, அதைப் பாத்து நமக்கெல்லாம் `கண்கள் பனிக்கும் – நெஞ்சம் இனிக்கும்ல`
அப்புறம் பாத்தீங்கன்னா, கட்சிக்கு கூட்டணி சேக்கனும்ன்னா நல்ல உணர்ச்சியைத் தூண்டுற மாதிரியா கவிதை எழுதுவாரு, இல்லை இருக்குற கூட்டணியை ஒடைக்கனும்ன்னா `நாய் கவிதை` மாதிரி எழுதி கூட்டணி ஆளுக்கள செல்லாமக் கொள்ளாம ஓட விட்டிருவாருல.
எம்புட்டு பெரிய பிரச்சனையும் ஒன்னாலதான்னு போய் கேட்டமுன்னா., `இல்லை இது அவரு அன்னிக்கி இப்பிடி நடந்துகிட்டதால தான் இன்னிக்கி இப்பிடி ஆயிப்போச்சு` ன்னு பிரச்சனைய தெச திருப்பீருவாரு.
என்ன தலைவா, அரநா உண்ணாவிரதமிருந்து இலங்கையில சண்டைய நிப்பாட்டுனீங்களே, அவிய்ங்க இன்னும் குண்டு போடுறத நிப்பாட்டலையேன்னு கேட்டா, `மழ விட்டும் , தூவானம் விடலைன்னு` எதுக – மோனையா பேசியே நம்ம கவலையெல்லாம் மறக்குற மாதிரி, இனிக்க - இனிக்க பேசுரத கேக்குற நமக்கெல்லாம் உச்சி குளுந்து போகும்ல.
என்னா தலைவரே, கருத்து கணிப்பெல்லாம் நமக்கு சாதகமா இல்லீயேன்னு கேட்டா, `நாங் கருத்துக் கணிப்பெல்லாம் நம்புறதில்லை` ன்னு சொல்லீட்டு, இருட்டோட, இருட்டா `அரசியல்` பண்ணியே செயிச்சிருவரு.,
இம்புட்டு பெரிய தலைவரு, முந்தாநேத்து சொந்தக்காரங்களையெல்லாம் கூட்டிக்கிட்டு டில்லிக்கி போறதப் பாத்ததும், ஆகா, நம்ம அண்ணனுக்கு உள்துறை மந்திரியா கேபினட்டை, அக்காவுக்கு இளைஞர் நலத்தையும் வாங்கீட்ட்டு தான் வருவாருன்னு காத்திருந்தா., பேரம் படியலைன்னு சும்மா வந்திட்டியே தலைவா??
ஓம் பவரு அம்புட்டு தானா? நீயி பெரியாளுன்னு நாங்க தான் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கோமா???
11 comments:
//நீயி பெரியாளுன்னு நாங்க தான் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கோமா??? //
ஒரு வேல இப்பிடி இருக்கோமோ? :)))))))))))
தண்டவாளத்துல தலைய வச்சு படுத்துக்கிட்டே இந்தி -ய ஏத்திகிட்டு வந்த ரயில தமிழ்நாட்டுக்குள்ள வரவிடாம தடுத்து, தமிழயும் – தமிழ்நாட்டையும் பெரிய அழிவுல இருந்து காப்பாத்துனவரு ////////////////////
ha..ha ha ..........
சோனியாவே கருணாநிதிக்கே அல்வாவா ?
http://kotticodu.blogspot.com/2009/05/blog-post_22.html
//உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.//
:))
`மழ விட்டும் , தூவானம் விடலைன்னு`- தாத்தா
'கண்கள் பனிக்கும் – நெஞ்சம் இனிக்கும்ல` - பேரன்
:-}
கவலை வேண்டாம்., தவறாக எடை போட வேண்டாம்., கேட்டது கிடைக்கும்.,
கலக்கல் பாஸ்..
:)))
என்னவோ புது பொண்டாட்டி கோச்சி கிட்டு பொறந்த வீடு வந்தாப்லதான் தான். அதுசரி , அல்லகைங்க அத்தனை பேர் பொறப்பட்டு எதுக்கு போனானுங்க ? கரி சோறு போடுவாங்கன்னா ?
போன ஐந்து வருடத்தில பாலு, ராஜா, தயாநிதி அடிச்ச பணத்தை வைச்சு இன்னும் பத்து தலைமுறைக்கு சாப்பிடலாம்,
போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரோ மன்மோகன்?
ஒட்டு போட்ட கைகளுக்கு காப்பு போட......
மனுசரு பாவம் ரொம்பத்தான் கெவலைல கெடக்காரு, அவர சீந்தாதீக
அடுத்தவன் வீட்ல பங்கு கேப்பாரு!
ஆனா தான் வீட்டுகுள்ள எவனையும் விட மாட்டாரு!
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.