தமிழகத்தில், உள்ளம் இருந்த இடத்தில் பெரும் பள்ளம்!!!






`தமிழன் எனுமொரு இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு`!!!



எனும் வாக்கியத்தை – வார்த்தைகளை இதுவரையில் நாம் வெளிப்படுத்தியும், கடைபிடித்தும், சுதந்திர இந்தியாவில் ஒரு தனிக் கூட்டமாகவே தேசியத்தில் ஒட்டாமல் வாழ்ந்துவருகிறோம். பெரியாரால் ஆரம்பித்து வைத்த இந்த இனமான உணர்வு மெல்ல வளர்ந்து, அண்ணாவின் அனல் தெறிக்கும் மேடைப் பேச்சுக்களாலும், கருத்துகள் மிக்க எழுத்துகளாலும், கலைஞரின் களப்பணிகளாலும் கவரப்பட்டு அறுபதுகளில் மிகப் பெரும் மாணவர் புரட்சியாக வெடித்தது, இந்தியாவுக்கு தமிழன் என்பவன் யாரென வெளிச்சம்(தீக்குளிப்புகள் மூலம்) போட்டுக் காட்டின.


தலைநகரின் கருத்துகளுக்கு எதிர்ப்பில் ஆரம்பித்த புரட்சி, தமிழ்நாட்டில் வாழ்ந்த அத்தனை உள்ளங்களிலும் (தமிழ் – தெலுங்கு – கன்னடம் என தாய்மொழி வித்தியாசமில்லாமல்) சிம்மாசனமிட்டு அமர்ந்தது, தமிழன் எனும் உணர்வு. தமிழன் என சொல்லிக் கொள்வதை பெருமையாக நினைத்ததும், தமிழின் முன் உயிரைத் துச்சம் என துறந்ததை செய்து காட்டியதுமே அதற்கு சாட்சி.


இந்த தமிழன் எனும் உணர்வை தூண்டிவிட்டதில் பெரியாருக்கு பெரும் பங்கும், அண்ணா – கலைஞருக்கே மீதிப் பங்கு என்பதில் எள்ளளவும் ஐய்யமில்லை.


திரை கடலோடியும் திரவியம் தேடு எனும் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு உலகத்தின் அனைத்து மூலைக்கும் தொழில் - வர்த்தகத்திற்காக சென்ற தமிழர்கள்களுக்கும், வெள்ளையன் ஆட்சிக்குட்ப்பட்ட நாடுகளின் காடு மேடுகளை செப்பனிட அடிமைதளையிட்டு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களுக்கும், மானசீக தலைமையாகவும், அவர்களுக்குதம் தொல்லைகள் வரும் வேளையில் காக்கும் காவலர்களாவும் இதுவரை அவர்கள் நம்பி இருந்தது மொழிகாக்கத் தோன்றிய இயக்கங்களையும், அதன் தலைமையும் தானே!


ஈழதமிழர் சாவுகளுக்கு இலங்கை அரசு தான் காரணமோ, அல்லது அவர்தம் தலைமை தான் காரணமோ, அப்பாவி தமிழர்கள் வெடிகுண்டுகளுக்கு கொத்து கொத்தாய் பலியாவது மட்டுமில்லாது, பசிப்பிணியெனும் கேவலமான சாவுக்கு தமிழன் ஆட்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதை கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த கட்சிகளுக்கு (காங்., தி.மு.க., அ.தி.மு.க) வாக்களித்து மீண்டும் ஆட்சி பீடத்தில் வைத்து அழகுபார்க்கத் துணிந்ததை எண்ணிப் பார்க்கும் போது, பெரியாரும், அண்ணாவும் ஊட்டி வளர்த்த தமிழன் எனும் கூர் உணர்வு இன்றைய அரசியல் அவலங்களில் முன் மழுங்கிப் போய்விட்டதே!


தமிழ் – தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாட்டால் தேசியத்தோடு ஒட்டாமல் வாழ்த்த தமிழகம் இழந்தது பல, ஆனால் அவற்றையெல்லாம் தமிழ் உணர்வுக்கு ஈடு இல்லை என ஒதுக்கிப் புறந்தள்ளி பெருமையோடு வாழ்ந்து வந்துள்ளோம். ஆனால் அந்த அடிப்படை உணர்வுக்கே ஆபத்தெனும் வேளையில் தமிழகத் தமிழர்களின் தீர்ப்பு, இதுவரை நாம் செய்த தியாகங்களை கேலிக்குரியதாக்கி விட்டதே?

3 comments:

பழமைபேசி said...

எல்லாம் உங்களாலதானே? தே.மு.தி.க யார்கிட்டயாவது ஒட்டலாம்ல?

தீப்பெட்டி said...

//எல்லாம் உங்களாலதானே? தே.மு.தி.க யார்கிட்டயாவது ஒட்டலாம்ல?//

இதை மறுப்பதற்கில்லை...

வேடிக்கை மனிதன் said...

தமிழ்நாட்டில் ஆதிமுக, திமுக வெற்றி தோல்வியை நிர்ணயித்தது தேமுதிக தான். விஜயகாந்துக்கே தெரியும் தான் இந்தத் தேர்தலில் வெற்றி பெரமுடியாதுன்னு. அதிமுகவின் ஓட்டுகள் தான் தனக்கு விழுகும் அப்படி கிடைக்கும் ஓட்டுகளினால் ஈழத்துப்பிரசினையை கையில் எடுத்திருக்கும் ’ஜெ’ கட்சிக்கும் அவரை நம்பி இருக்கும் ஈழத்து மக்களுக்கும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிந்தே தேர்தல் களம் கண்ட விஜயகாந்தே இதற்கு முழு பொருப்பு என்று நான் நினைக்கிறேன்

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB