32 கேள்வி பதில்கள் - தொடர் சங்கிலி இடுக்கை

இந்த தொடர்பதிவை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களுக்கும், தொடர்ந்த பதிவுலக நண்பர்களுக்கும், இந்த தொடர் ஆரம்பமான காலத்திலேலே அண்ணன் இராகவன் நைஜீரியா, என்னைக் கேட்டு நேரமில்லாத காரணத்தால் மறுத்த பின்னரும் காலைச்சுற்றிய பாம்பாக, என்னிடம் நண்பர் தீப்பெட்டி கணேஸ் மூலமாக வந்து சேர்ந்த இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க துணிந்து விட்டேன். இனி ஆட்டம் ஆரம்பம்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் ஆண்குழந்தை வேண்டி பழனி முருகனிடம் ஸ்பெசல் வேண்டுதலில் பிறந்த தவக்குழந்தையாதலால் அந்த லார்ட் முருகனின் பெயரையே நாமகரணம் பண்ணிவிட்டார்கள்.

சின்ன வயசுல ”என்னடா, நெறைய ஆளுக்கு இருக்குற பேரை வச்சுட்டாங்கன்னு கோவம் இருந்தது. இப்ப போயிருச்சு, ஏன்னா, ஏதாவது கோணாங்கி தனம் பண்ணி வீட்டுல மாட்டிக்கிட்டா, ஆமா முருகன் சாமி பேரை வச்சா, அந்த முருகன் சாமி புத்திதான இருக்கும்ன்னு சொல்லி தப்பிக்க முடியுது. அதனால என்ன அப்பப்ப காப்பாத்துற லார்ட் முருகனுக்கு ”ஸ்பெசல் தேங்க்ஸ்”.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கையெழுத்துல என்ன இருக்கு. உள்ள இருக்குற விசயத்துக்கு தான உண்மையான் மதிப்பு இருக்கு. (கோழி கிண்டும் கையெழுத்தை வச்சே எல்லாப் பரிச்சையிலும் பாஸ் பண்ணி வந்தவனாக்கும்)

4. பிடித்த மதிய உணவு என்ன?

ஒரு அவியல், ஒரு பொரியல் இருக்குற நல்ல மணக்கும் சாம்பார் + ரசம் சாதம் போதும். (ஆனா கிடைக்க மாட்டேங்குதே. ஆங்ங்ங்ங்ங்ங்)

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

முகத்துக்கு நேரா இருக்கவுங்ககிட்ட(அதாவது கூட இருப்பவங்ககிட்ட) உடனே நட்பு வச்சுக்குவேன்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி தான் முதல் சாய்ஸ். (அருவி வேகமா விழுது, தண்ணிக்குள்ள போக முடியலன்னு சொன்ன நண்பன்கிட்ட சவால்விட்டு வேகமா உள்ளே போய் பாறையில் முட்டுன கதையெல்லாம் உண்டு)

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

தூரத்தில இருந்தா அவுங்களோட நடவடிக்கை,

பக்கத்துல இருந்தா அவுங்களோட முகம்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் : நண்பர்கள் கிட்ட ஈகோ பார்காதது.

பிடிக்காத விசயம் : நண்பர்களுக்கு அடிக்கடி போன் பேசாதது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

எனக்கான சரி பாதியை முழு மூச்சாய் தேடிக்கிட்டு இருக்கேன். பாத்ததும் சொல்றேன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

சொந்த ஊர்ல இல்லாம் இருக்குறதுக்கு வருத்தமா இருக்கு.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சிவப்பும், கிரீம் கலரும் இருக்கும் பெரிய கட்டம் போட்ட சட்டை, டார்க் புளூ பேடர்டு ஜீன்ஸ் பேண்ட், பச்சைக் கலர்ல பெல்ட், ப்ரௌன் கலர் ஷூ.
(யூத் லுக்கிங்)


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கம்யூட்டரிலிருந்து வரும் ஸ்ஸ்ஸ்ஸ் சப்தம்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ப்ளூ... (நான் கொஞ்சம் ப்ளூங்கோ ஆசாமி)


14. பிடித்த மணம்?

மல்லிகைப் பூ வாசம் ரொம்ப பிடிக்கும். சீக்கிரம் பிடிக்கணும்.


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கடந்த இருபது நாட்களாக வலையுலகில் இல்லாததால், யார் எழுதலைன்னு தெரியாததால இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில இருக்கேன். (யாரையும் கோர்த்து விடாததால புண்ணியம் கிடைக்குமா?)


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

என்னை இந்த தொடர் கேள்வி – பதிலுக்கு கூப்பிட்டது மட்டுமில்லாம, என்னைப் பத்தி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட கணேஸ்குமாரின் 32 கேள்வி பதில் பதிவுதான்.

17. பிடித்த விளையாட்டு?

சீட்டுக் கட்டுல 18 சீட்டுப் போட்டு பெணாத்தல்ன்னு ஒரு ஆட்டம். சூப்பரா இருக்கும். காசு வக்காமலேயே ஆடலாம்.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாங்க. இப்ப தான் மூணு மாசமா (கம்ப்யூட்டரைப் பார்த்தே கண் அவிஞ்சு போச்சு)


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பழைய படம், புதுப் படம், கருத்து சொல்லும் படம், காமெடிப் படம், திகில் படம், சண்டைப் படம் எதுவா இருந்தாலும் சரி, திரைக்கதையில நொள்ளை இல்லாத எல்லாப் படமும் பிடிக்கும்.


20. கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க.

21. பிடித்த பருவ காலம் எது?

இன்னைக்கு மட்டும் தான்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ராஜேஸ்குமாரின் – நீயும் பொம்மை, நானும் பொம்மை!

சித்தர், சித்த வைத்தியம் கலந்த திகில் கதை.


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

என்னோட அடுத்த சூப்பர் ஸ்டில் கிடைச்சதும்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிச்ச சத்தம் : குழந்தைகளோட சிரிப்பு

பிடிக்காத சத்தம் : குழந்தைகளோட அழுகை.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சிங்கப்பூர் (பஞ்சம் பொழைக்கும் இடம்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நல்லா சமாளிப்பேன்.(இந்த கேள்வியை இல்லை)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நாம தான் செய்யணும்ன்னு தெரிஞ்ச பின்னாடியும் செய்யாம இருக்கும் சோம்பேறித்தனத்தை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாலஞ்சு பேர் இருக்கனுங்க, அதுல யாரைச் சொல்ல???

29. உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

எல்லாத்தையும் பார்த்த பின்னாடி தான் சொல்லுறேன், எல்லாமே கிடைக்கும் சிங்கப்பூர் தான்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

அடுத்த ஆளுக்கு தொந்தரவு இல்லாம இருக்கத்தான் ஆசை, ஆனா....?

31. மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அந்தம்மா வந்த பின்னாடிதான அவுகளுக்கு எது பிடிக்காதுன்னு பாத்து, அதைத் தனியாப் போய்ச் செய்ய வேண்டியது தான்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நல்லா வேலை செய்யுற வால்(ழ்)வை, நாம தான் தப்பா பயன்படுத்தி துருப்பிடிக்க வச்சுடுறோம்.

.

20 comments:

நட்புடன் ஜமால் said...

ஊரிலிருந்து வந்தவுடன்

தொடர் பதிவா!

பேஷ் பேஷ்

இருங்கோ படிச்சிப்போட்டு வாறன்

நட்புடன் ஜமால் said...

\\தூரத்தில இருந்தா அவுங்களோட நடவடிக்கை,

பக்கத்துல இருந்தா அவுங்களோட முகம்.
\\

புது மாதிரியான பதில்

நட்புடன் ஜமால் said...

\\10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

சொந்த ஊர்ல இல்லாம் இருக்குறதுக்கு வருத்தமா இருக்கு\\

நெகிழ்வாய் இருக்குங்க‌

நட்புடன் ஜமால் said...

\\மல்லிகைப் பூ வாசம் ரொம்ப பிடிக்கும். சீக்கிரம் பிடிக்கணும்.
\\


ஹா ஹா ஹா

குரும்பு ...

நட்புடன் ஜமால் said...

\\21. பிடித்த பருவ காலம் எது?

இன்னைக்கு மட்டும் தான்.\\



அட ...

நட்புடன் ஜமால் said...

\\அந்தம்மா வந்த பின்னாடிதான அவுகளுக்கு எது பிடிக்காதுன்னு பாத்து, அதைத் தனியாப் போய்ச் செய்ய வேண்டியது தான்.
\\

நல்ல எண்ணமுண்ணே

வேடிக்கை மனிதன் said...

//ஒரு அவியல், ஒரு பொரியல் இருக்குற நல்ல மணக்கும் சாம்பார் + ரசம் சாதம் போதும். (ஆனா கிடைக்க மாட்டேங்குதே. ஆங்ங்ங்ங்ங்ங்)//

யோவ் வாரவாரம் சாம்பாரும் ரசமுமா சாப்ட்டு சாப்ட்டு நாக்கு செத்துபோச்சு அப்படின்னு சொல்லி பிரியாணியும், நண்டும் சமைச்சு குடுங்கன்னு என்னனை சாவடிசுட்டு, இங்க வந்து என்ன பேச்சு பேசுற,

அண்ணே நீங்க அப்பாவி முருகு இல்ல
அடப்பாவி முருகு

வால்பையன் said...

//நல்லா வேலை செய்யுற வால்(ழ்)வை, நாம தான் தப்பா பயன்படுத்தி துருப்பிடிக்க வச்சுடுறோம்.//

நீங்க ஒரு நல்ல ப்ளம்பர்னு நிறுபிச்சிடிங்க!

வேடிக்கை மனிதன் said...

//ஆமாங்க. இப்ப தான் மூணு மாசமா (கம்ப்யூட்டரைப் பார்த்தே கண் அவிஞ்சு போச்சு)//

வயசாயிடுச்சுன்னு ஒத்துக்கங்கன்ணே

தீப்பெட்டி said...

அழைப்பை எற்று உடன் பதிலளித்தமைக்கு நன்றி..
எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது..

//கோழி கிண்டும் கையெழுத்தை வச்சே எல்லாப் பரிச்சையிலும் பாஸ் பண்ணி வந்தவனாக்கும்)//

இது நம்ம ஆளு


//நல்லா வேலை செய்யுற வால்(ழ்)வை, நாம தான் தப்பா பயன்படுத்தி துருப்பிடிக்க வச்சுடுறோம்//

பெரிய உண்மைய சிம்பிளா சொல்லிட்டீங்க..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.//
sollavae illa.

இராகவன் நைஜிரியா said...

அப்பாவி பெயர் காரணம் - படம் வரைந்து விளக்குக?

ஊரில் இருந்து புல் ஃபார்மில் வந்திருக்கின்ற மாதிரி இருக்கு..

நேற்று ஒரு இடுகை
இன்று சங்கிலித் தொடர் இடுகை...

வெரி குட்... கீப் இட் அப்.

நான் போனாப் போகுதுன்னு விட்டாலும், யாரவது உங்களை மாட்டிவிட்டுறாங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

இராகவன் நைஜிரியா said...

// இப்ப போயிருச்சு, ஏன்னா, ஏதாவது கோணாங்கி தனம் பண்ணி வீட்டுல மாட்டிக்கிட்டா, ஆமா முருகன் சாமி பேரை வச்சா, அந்த முருகன் சாமி புத்திதான இருக்கும்ன்னு சொல்லி தப்பிக்க முடியுது. //

முருகன் வள்ளியைத் தேடி போகும் போது அண்ணன் கணேசனைத் தான் துணைக்கு கூப்பிட்டாராம். .... !!!!!! :)

அப்பாவி முரு said...

நட்புடன் ஜமால் said...
\\தூரத்தில இருந்தா அவுங்களோட நடவடிக்கை,

பக்கத்துல இருந்தா அவுங்களோட முகம்.
\\

புது மாதிரியான பதில்

வாங்க ஜமால் அண்ணா.,

***********************************

வேடிக்கை மனிதன் said...
//ஆமாங்க. இப்ப தான் மூணு மாசமா (கம்ப்யூட்டரைப் பார்த்தே கண் அவிஞ்சு போச்சு)//

வயசாயிடுச்சுன்னு ஒத்துக்கங்கன்ணே

அமாம் சரவணன் எனக்கு வயசாயிடுச்சு. இப்ப திருப்தியா?

**********************************

வால்பையன் said...
//நல்லா வேலை செய்யுற வால்(ழ்)வை, நாம தான் தப்பா பயன்படுத்தி துருப்பிடிக்க வச்சுடுறோம்.//

நீங்க ஒரு நல்ல ப்ளம்பர்னு நிறுபிச்சிடிங்க!

வாங்க வால்.,

பொழப்பே அதுதானே.,

***********************************

தீப்பெட்டி said...
அழைப்பை எற்று உடன் பதிலளித்தமைக்கு நன்றி..
எல்லாவற்றையும் ரசிக்க முடிந்தது..

சந்தோசம் தானே கணேஸ்.

***********************************

ஸ்ரீதர் said...
//காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.//
sollavae illa.

வாங்க ஸ்ரீதர்.,

எங்கிட்டயே சொல்லாமத்தான் செஞ்சுட்டாய்ங்க...

***********************************


இராகவன் நைஜிரியா said...

முருகன் வள்ளியைத் தேடி போகும் போது அண்ணன் கணேசனைத் தான் துணைக்கு கூப்பிட்டாராம். .... !!!!!! :)

அண்ணே வாங்கண்ணே.,

ஊருக்கு போகும் போது நான் ஒரு அட்ரஸ் தாரேன். எனக்காகப் போய் பாருங்க, பேசுங்க. ப்ளீஸ்.

தீப்பெட்டி said...

இராகவன் நைஜிரியா said,
//முருகன் வள்ளியைத் தேடி போகும் போது அண்ணன் கணேசனைத் தான் துணைக்கு கூப்பிட்டாராம். .... !!!!!! :)//

இராகவன் சார் என்னைய யாரும் கூப்பிடவே இல்லயே..
நம்ம முரு கூப்பிட்டா போகலாம்தான்.. ஆனா அடி விழுந்தா நீங்கதான் வரணும் காப்பாத்த..

நசரேயன் said...

//காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.//

எத்தினாவது காதலி

பழமைபேசி said...

இஃகி இஃகி!!

cheena (சீனா) said...

அன்பின் முரு

அருமையான பதில்கள்

முருகன் பண்ற தப்பெல்லாம் வேணாம் - ஒண்ணு போதும்

அழறதா - சந்தோசமா வழி அனுப்பி இருக்க வேணாமா

யூத் லுக்கிங் - ஆபீஸிலே உக்காந்து இடுகையா (பச்சயிலே பெல்டா)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - நல்லாத்தானிருக்கும்

புளூ ஆசாமியா - ஆகா ஆகா

மல்லிகைப்பூ பிடிக்குமா - அல்வா ?

குழந்தை ஆசை வந்துடுச்சே - சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து

நல்லா சமாளிக்கறீங்க

அவங்களுக்குப் பிடிக்காதத அவங்களுக்குத் தெரியாம செய்யற நல்ல குணம் உங்களுக்கு - வாழ்க

வா(ல்)ழ்வு - ம்ம்ம்ம்ம்ம்

நல் வாழ்த்துகள் முரு

அப்பாவி முரு said...

நசரேயன் said...
//காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.//

எத்தினாவது காதலி

அண்ணே கேள்வி கேக்குறது ஈஸி, ஆனா...

**********************************

பழமைபேசி said...
இஃகி இஃகி!!

வாங்கண்ணா, சிரிப்பின் அர்த்தம்.

**********************************

cheena (சீனா) said...
அன்பின் முரு

அருமையான பதில்கள்

முருகன் பண்ற தப்பெல்லாம் வேணாம் - ஒண்ணு போதும்

ஐயா வாங்க,

கோவி.கண்ணன் said...

//2. கடைசியாக அழுதது எப்பொழுது?

காதலியின் திருமணத்தன்று. ஆச்சு அஞ்சு வருசம்.//

அப்பாவி முகத்துல சோகம் அப்பி இருக்கே என்று பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன் கா'ரணம்' இதுதானா ?
:)

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB