தாய் - சேய்

மனிதன் முதலில் கற்றுக்கொள்ளும் பாடம் அழுகை, அதுவும் பிறந்த சில நொடிகளிலேயே ஆரம்பித்த அந்த அழுகைக்கு உடனடி பலன் எப்போதும் இருக்கும். பசியை ஆற்றுவது முதல் உடல் சூட்டை தக்கவைக்கத் தேவையான அணைப்பு வரை தாயின் மூலம் கிடைத்து விடும்.

ஆனால் தாயுக்கும் சேயுக்குமான இந்த உறவு, குழந்தையின் முதல் அழுகைக்கும் பல மாதங்கள் முன்னரே ஆரம்பித்துவிடுகிறது. பிறந்த பின் தன்னையே அறியாத சூழ்நிலையிலும் தன் தாயை அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்தை குழந்தையின் அந்த சின்னஞ்சிறு மூளையில் பதிந்துள்ளது பரிணாமம். தாயோடு தன் உதடுகளில் தோன்றும் வார்த்தைகளால் தொடர்பு கொள்ளும் முன்னரே, உணர்வுகளால் தொடர்பு கொள்ளும் வித்தையையும் தான் பரிணாமம் சொல்லிக்கொடுத்துள்ளது.அதன் விளைவே, தன் தாயின் கருப்பையிலிருந்து நெளிவு சுழிவோடு, தெளிவாக தான் வெளியேரும் வழியை, வேறு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தன்வழியை தானே தேர்ந்தெடுத்து தாயின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு இந்த (சிக்கல் மிகுந்த) வெளியுலகை வந்து சேர்கின்றது குழந்தை.

தன் உயிரை தானே காப்பாற்றிக்கொள்ள கட்டாயமுள்ள இரு ஜீவன்கள் தங்களது சக ஒத்துழைப்பால், மூன்றாவது ஆள் உதவி இல்லாமலேயே, தங்களது ஆழ்மனதில் பதிந்திருக்கும் பாடத்தின் வெளிப்பாடாய், தாயின் முக்கலிலும் – சேயின் முண்டலிலும், பிண்டத்திலிருந்து மனித குழந்தையாக மாறும் அந்த கடைசி நேர நிகழ்வில்(பிரசவத்தில்) தான் தாயுக்கும் – சேயுக்குமான மன ஒற்றுமையும், சொல்லில் அடங்கா சக ஈர்ப்பும் உருவாகிறது. அதுவே யாராலும் விளக்க முடியாத தாய் - சேய் பாசமாகிறது.

சுகபிரசவம் ஆனால் மட்டுமே உயிர், என்று இருந்த கடந்த தலைமுறை மக்களைப் பாருங்கள். மூன்று அல்லது நான்கு வயது வரை தாய்ப்பாலுண்டு, தாயிடமிருந்து உணவை எடுப்பதை நங்குணர்ந்த பின்னரே பால்குடி மறந்த நம் தந்தை தலைமுறையினர் தாயுடன் நடந்து கொண்டதற்கும், சுகப்பிரசவம் ஆகி, ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் தாயின் முகம் உள்ளத்தில் பதியும் முன் பால்குடி மறந்து வாழும் நம் தலைமுறையினர் தாயிடம் நடந்தது கொள்வதற்கும் உள்ள பெரும் வித்தியாசத்தை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

பெற்றோரைப் பிரியாமலே வாழ்ந்த நம் முன் தலைமுறை புண்ணியசாலி மக்கள் எங்கே?, வெறும் பணத்திற்காக தாய், தந்தையரை பிரிந்து வாழும் நாம் எங்கே?. தாயைப் பணத்திற்காக, எந்த வருத்தமும் இல்லாமல் பிரிய மனம் வந்ததன் காரணத்தை தேடி மனதினுள் ஓடினால், நமக்கே தாய் என்பவள் அக்கா, அண்ணன் போல் ஒரு உறவுமுறையாக மட்டுமே அறிமுகமாகி நினைவில் நிற்கின்றனர். இதற்கான காரணம், நினைவு தெரிவதற்கு முன்னரே தாய்ப்பாலை நிறுத்துவது தானாக இருக்குமோ?

இன்றைய வேகஉணவு கலாச்சாரத்தில் சுகபிரசவம் பார்க்கத் தேவையான அளவு உடலிலும், மனதிலும் உறுதி இல்லாமல் போனதால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குறுக்கு வழியில் குழந்தைகள் பிறப்பதையும், அவர்கள் வெகு சில மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் குடிப்பதையும் பார்க்கையில் நம் குழந்தைகள், குடும்பத்துடன் செலவழிக்க நேரமில்லாத நம்மிடம் எப்பிடி வளரப்போகிறார்களோ?, கடைசி காலத்தில் எப்படி நடத்தப்போகிறார்களோ? என எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!?

14 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல ஒரு சிந்தனைங்க.

நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது போல் நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் பலதை இழக்க நேரிடும்

Rajeswari said...

பெற்றோரைப் பிரியாமலே வாழ்ந்த நம் முன் தலைமுறை புண்ணியசாலி மக்கள் எங்கே?, வெறும் பணத்திற்காக தாய், தந்தையரை பிரிந்து வாழும் நாம் எங்கே?. தாயைப் பணத்திற்காக, எந்த வருத்தமும் இல்லாமல் பிரிய மனம் வந்ததன் காரணத்தை தேடி மனதினுள் ஓடினால், நமக்கே தாய் என்பவள் அக்கா, அண்ணன் போல் ஒரு உறவுமுறையாக மட்டுமே அறிமுகமாகி நினைவில் நிற்கின்றனர். //

உண்மை கலந்த வேதனை...
நல்ல பதிவு

தீப்பெட்டி said...

நாமிழந்தது இருக்கட்டும் ஒருபுறம்..

நாளை நமது வாரிசுகள் எவற்றையெல்லாம் இழக்கப் போகிறார்களோ..

வாழ்க்கை சுழற்சி முறையில் மீண்டும் நவீன கற்காலத்திற்கு போய்க் கொண்டிருக்கிறதோ?!..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!? //

ம்ம்ம் வாங்குறாங்களே!

கோவி.கண்ணன் said...

//தேவையான அளவு உடலிலும், மனதிலும் உறுதி இல்லாமல் போனதால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குறுக்கு வழியில் குழந்தைகள் பிறப்பதையும்,//

இது கொஞ்சம் தவறான தகவல்.

பிறப்பு உறுப்பு வழி குழந்தை பெற்றுக் கொள்வதை மகிழ்வான மகப்பேறு (சுகப் பிரசவம்) என்று சொல்ல முடியாது முரு. அருகில் இருந்து பார்த்தவன் என்பதால் உணர்ந்தே சொல்கிறேன். குழந்தை வெளியே வர கடினப்பட்டால் பிறப்பு உறுப்பை பெறிதாக்க தற்காலிகமாக வெட்டிவிட்டு குழந்தை பிறந்ததும் தைக்கிறார்கள். அதன் வலியை உணர்ந்தவர்கள் 10 குழந்தைகளைக் கூட அறுவை மருத்துவ முறையில் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.

அறுவை மருத்துவம் மூலம் தற்பொழுதெல்லாம் தேவையான அளவு மட்டுமே அறுவை செய்து இலகுவாக குழந்தையை வெளியே எடுத்துவிடுகிறார்கள். காயங்களும் 10 நாட்களுக்குள் ஆறிவிடுகிறது.

எந்தவகை மகப்பேறு சிறந்தது என்பது பெண்களின் உடலமைப்பைப் பொறுத்தது. எது சரி என்று ஆண்கள் சொல்லிவிட முடியாது.

தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பு மகப்பேற்றில் கிடையாது தாய்பாலில் தான் உள்ளது.

வால்பையன் said...

//தான் வெளியேரும் வழியை, வேறு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தன்வழியை தானே தேர்ந்தெடுத்து//

எங்க விடுறாங்க,
இப்பெல்லாம் ஒன்லி சிசரேரியன் தானாம்!

வால்பையன் said...

//பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!?//

துரை என்னாமா கேள்வி கேக்குது!

வேடிக்கை மனிதன் said...

//இன்றைய வேகஉணவு கலாச்சாரத்தில் சுகபிரசவம் பார்க்கத் தேவையான அளவு உடலிலும், மனதிலும் உறுதி இல்லாமல் போனதால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குறுக்கு வழியில் குழந்தைகள் பிறப்பதையும்,//

அறுவை சிகிச்சையில் சில சிக்கள்கள் உண்டு, ஒரு குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்து ஐந்து ஆண்டுகள் கழித்தே இன்னொரு குழந்தையை ஒரு பெண் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் இரண்டு குழந்தைக்கு மேல் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற உடல் ஒத்துழைக்காது.அதனால் எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் அறுவை சிகிச்சையை விரும்புவது இல்லை.

தாய்பாலில் ஒரு குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அத்தனை சத்துக்களும் ஒருங்கே கிடைக்கப்பெறுவதால் அதை தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வருடமாவது கொடுப்பது நல்லது.
தாய்பாலோடு பண்பாட்டையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தை கண்டிப்பாக தாயை கூட கவணிக்கமாட்டார்கள் என்பது நிதர்சனம்

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான சிந்தனை.

பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. ஆனால் வாழ்க்கைக்கு பணம் தேவைப் படுகின்றது.

நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் தேவைகள் குறைவு. இப்போது நம் தேவைகள் மிக மிக அதிகம். எப்போது தேவைகள் அதிகரிக்கன்றதோ, அப்போது பணம் தேவைப் படுகின்றது.

வாழ்க்கை முறையில் மாற்றம் பணத்தேவைகளை அதிகரித்து விடுகின்றது..

அப்பாவி முரு said...

// நட்புடன் ஜமால் said...
நல்ல ஒரு சிந்தனைங்க.

நீங்கள் கடைசியில் சொல்லியிருப்பது போல் நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் பலதை இழக்க நேரிடும்//

நினைச்சு பார்க்கவே பாவமா இருக்கு

******************************************************************
// Rajeswari said...
பெற்றோரைப் பிரியாமலே வாழ்ந்த நம் முன் தலைமுறை புண்ணியசாலி மக்கள் எங்கே?, வெறும் பணத்திற்காக தாய், தந்தையரை பிரிந்து வாழும் நாம் எங்கே?. தாயைப் பணத்திற்காக, எந்த வருத்தமும் இல்லாமல் பிரிய மனம் வந்ததன் காரணத்தை தேடி மனதினுள் ஓடினால், நமக்கே தாய் என்பவள் அக்கா, அண்ணன் போல் ஒரு உறவுமுறையாக மட்டுமே அறிமுகமாகி நினைவில் நிற்கின்றனர். //

உண்மை கலந்த வேதனை...
நல்ல பதிவு//

நன்றிங்க ராஜேஸ்வரி...

****************************************************************


தீப்பெட்டி said...
நாமிழந்தது இருக்கட்டும் ஒருபுறம்..

நாளை நமது வாரிசுகள் எவற்றையெல்லாம் இழக்கப் போகிறார்களோ..

வாழ்க்கை சுழற்சி முறையில் மீண்டும் நவீன கற்காலத்திற்கு போய்க் கொண்டிருக்கிறதோ?!..

கிட்டத்தட்ட கற்காலமே தான். கிடைப்பது எல்லாம் எனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்துவிட்டது. குடும்பத்திற்குள்ளேயே பொதுவுடமை
அழிந்துவிட்டது. அப்பா கற்காலம் தானே??

அப்பாவி முரு said...

ஜோதிபாரதி said...
பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!? //

ம்ம்ம் வாங்குறாங்களே!

ஐ..எங்க கிடைக்குது?

அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் வாங்கும் பணத்தை எங்க அள்ளுறது????

**************************************************************************

கோவி.கண்ணன் said...

//அறுவை மருத்துவம் மூலம் தற்பொழுதெல்லாம் தேவையான அளவு மட்டுமே அறுவை செய்து இலகுவாக குழந்தையை வெளியே எடுத்துவிடுகிறார்கள். காயங்களும் 10 நாட்களுக்குள் ஆறிவிடுகிறது.//

அபாயகரமான சூழ்நிலையின் போது அறுவை சிகிச்சை செய்தால் பரவாயில்லை. தற்காலத்தில் தொண்ணுறு சதம் அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறதே ஏன்?


//எந்தவகை மகப்பேறு சிறந்தது என்பது பெண்களின் உடலமைப்பைப் பொறுத்தது. எது சரி என்று ஆண்கள் சொல்லிவிட முடியாது.//

ஆரம்பத்தில் இருந்து வீட்டு வேலைகள் அல்லது முறையான உடற்பயிற்சி செய்திருந்தால் எந்தவகை உடலமைப்பு உடையவர்களும் சுக பிரசவத்திற்கு முயற்சிக்கலாம்!!

//தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பு மகப்பேற்றில் கிடையாது தாய்பாலில் தான் உள்ளது.//

தாய்பால் கண்கூடு!!

********************************************************************

வால்பையன் said...
//தான் வெளியேரும் வழியை, வேறு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே தன்வழியை தானே தேர்ந்தெடுத்து//

எங்க விடுறாங்க,
இப்பெல்லாம் ஒன்லி சிசரேரியன் தானாம்!

அதான் கவலையாக்கீது....

////பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா!?//

துரை என்னாமா கேள்வி கேக்குது!//

எனக்கு கேக்க மட்டுந்தான் தெரியும்!!

ஆ வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

******************************************************************

வேடிக்கை மனிதன் said...

தாய்மார்கள் குழந்தைக்கு இரண்டு வருடமாவது கொடுப்பது நல்லது.
தாய்பாலோடு பண்பாட்டையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தை கண்டிப்பாக தாயை கூட கவணிக்கமாட்டார்கள் //

அதான் நடக்குது!!

******************************************************************
இராகவன் நைஜிரியா said...

இப்போது நம் தேவைகள் மிக மிக அதிகம். எப்போது தேவைகள் அதிகரிக்கன்றதோ//

முடிவில்லாத தேவைகளின் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இயல்பான முறையில் பிரசவங்கள் குறைந்து போனதற்கு இன்றைய வாழ்க்கை முறையும் ஒரு முக்கிய காரணம். வேலைக்குப் போகும் தாயால் குழந்தைக்கு தேவையான கவனிப்பைத் தர முடிவதில்லை. பணத்தால் எல்லாமும் கிடைக்காது என்றாலும் உயிர் வாழ அது தேவை.

iniyavan said...

அன்பு நண்பருக்கு,

இன்றுதான் நீங்கள் என்னை அறிமுகப்படுத்திய பதிவை படித்தேன். மிக்க நன்றி.

தாமதமாக எழுதியதற்கு மன்னிக்கவும்.

கார்க்கிபவா said...

ம்ம்.. உண்மைதான்

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB