”இந்த சரித்திரம் நமக்கு சொல்லிக் குடுத்ததைப் பாத்தோம்ன்னா, நாம வாழ்றதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம், எத்தனைப் பேரை வேணும்னாலும் கொல்லலாம். Can… can....” - இது ஒரு திரைப்பட வசனம்.
தமிழ்நாட்டு மக்களின் மனநிலை மேலே படித்த வசனத்துடன் மிக அருகாமையில் ஒத்துப்போகிறது என்றால் மிகையல்ல என்றே நினைக்கிறேன். இந்திய தேர்தலையும், அதன் முடிவுகளையும் பற்றித் துளிகூட கவலையில்லாமலே தனது நாட்களை நகர்த்துகிறார்கள். மத்திய அமைச்சர் ப. சி யின், 100 சி + 400 சி வெற்றியைக்கூட சந்தோசமாகப் பேசி சிலேகித்துத் தான் போனார்கள்.
அருகிலிருக்கும் நாட்டில் நடக்கும் அபாயகரமான அழிவுகளை பெரும்பாலான ஊடகங்கள் உண்மையாக வெளியிடவில்லை. அப்படி வெளியிட்ட ஊடகங்களும் மக்களை உண்மையில் போய் சேரவில்லை. தகவல் கிடைத்த மக்களும் அழிவிற்காக கவலைப்படவும் இல்லை என்பது தேர்தல் முடிவு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன.
அடுத்ததாக சாலைப் போக்குவரத்தில் நம் மக்களின் நாசகர நடவடிக்கைகளைப் பார்த்தால் உள்ளம் பதறிப்போகிறது. வெளியூர் பயணங்களுக்கு, பெரும்பாலும் நான் தேர்ந்தெடுத்து கொண்டது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையே. ஏனெனில், அப்பேருந்துகளில் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் 50-60 கிமீ வேகத்திலேயே பாதுகாப்பாக பயணிக்கின்றன. எல்லோருக்கு அதுதான் தேவையானாலும், உடன் பயணித்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை, அரசு பேருந்து ஓட்டுனர்களை திட்டி தீர்க்கிறார்கள்.
கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார். அவரை இரண்டு கால்களிலும் வண்டியோட்டச் செய்ய ’கால்’மணி நேரம் மண்டையைக் கழுவ வேண்டியிருந்தது.
இந்த மாதிரியான சம்பவங்களை தொகுத்து மொத்தமாகப் பார்க்கையில், மக்களின் மன ஓட்டத்தை மிக நுட்பமாக கவனித்தே இந்த வசனத்தை எழுதி, படித்து பயன்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த ஆபத்தான அட்வன்சரிஸ்ட் வாழ்க்கை வாழ்ந்து வயதாகி மடிந்தாலும், பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை?
20 comments:
welcome back!
நாம என்ன தான் பொறுமையா இருந்தாலும், பின்னாடி வர்றவங்க இடிச்சிட்டு போயிருவாங்களே பரவாயில்லையா!
நல்லா ஓய்வெடுத்துட்டு ஃபுல் ஃபார்ம்ல வந்திருக்கீங்க போல தெரியுது..
ஆட்டம் ஆரம்பிக்கட்டும்..
உங்களுக்கு ஒரு தொடர்பதிவு அழைப்பு இருக்கிறது..
வந்து தொடருங்கோ...டருங்கோ.. ருங்கோ.. ங்கோ..கோ.. ..
//கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார். அவரை இரண்டு கால்களிலும் வண்டியோட்டச் செய்ய ’கால்’மணி நேரம் மண்டையைக் கழுவ வேண்டியிருந்தது.//
இரண்டு காலை பயன்படுத்தாமல் இருப்பதில் ஒரு பாதுகாப்பு உள்ளது. ஏனெனில் எந்தக்காலை க்ளெட்சை அழுத்த எந்த காலை ப்ரேக்கை அழுத்த என்ற பிரச்சனை இருக்காது. சடர்ன் ப்ரேக் போட வேண்டிய நேரத்தில் இந்த தடுமாற்றம் இருந்தால் அம்பேல் தான்.
சிங்கையில் இரு பாதங்களையும் பயன்படுத்தும் படி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை, அவ்வாறு பயன்படுத்துவதுமில்லை. :)
//பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை?//
ஒரு பக்கம் அதை பேராசை என்றாலும் அதையும் பயன்படுத்துவர்களின் ஏழ்மையின் அவலத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. என்ன ஏழ்மை ? அவன் தண்ணி அடிக்க, கூத்தடிக்கத் தானே அவ்வாறெல்லாம் செய்கிறான் என்றும் சொல்லலாம். அரசியல்வாதி ரேஞ்சுக்கு ஊழல் செய்ய அவனுக்கு வாய்பில்லாத போது கிடைக்கிறதை சுருட்டும் மனநிலை என்று தான் சொல்ல வேண்டும், சின்ன திருட்டு என்றாலும் பெரிய திருட்டு என்றாலும் அது திருட்டு தானே. மொத்தமாக சமூக மனநிலை, இதில் ஒரு சிலரின் செயல்கள் மட்டுமே குற்றமாக தெரிவதற்குக் காரணம் அந்த செயல்மட்டும் தவறு என்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட சமூக மனநிலையின் பிரதிபளிப்புதான்.
:) என்ன நான் சொல்வது ?
சிங்கம் சின்னாளபட்டியில் இருந்து சிங்கைக்கே ரிட்டர்னா?
well
come
back
well
come
back
வெல்கம் பேக்....
தம்பி முரு ஆரம்பமே சூப்பர். அடுத்த வாரம் இந்தியா போகின்றேன்... இப்ப இப்படி எழுதி வயத்தில புலிய கரைக்கின்றீர்களே...
எல்லாம் அவன் செயல்...
vaanka boss.welcome.
நாம என்ன தான் பொறுமையா இருந்தாலும், பின்னாடி வர்றவங்க இடிச்சிட்டு போயிருவாங்களே பரவாயில்லையா!
அந்த வேகத்தை சொல்லிக்குடுக்கறதையும், அதை நியாயப்படுத்துறதையும் நிப்பாட்டினாலே எல்லாம் சரியாகும்.
_______________________________________________
தீப்பெட்டி said...
நல்லா ஓய்வெடுத்துட்டு ஃபுல் ஃபார்ம்ல வந்திருக்கீங்க போல தெரியுது..
ஆட்டம் ஆரம்பிக்கட்டும்..
வாங்க தீப்பெட்டி...
முடிஞ்சளவுக்கு ஆடுவோம் வாங்க.,
_______________________________________________
கோவி.கண்ணன் said...
இரண்டு காலை பயன்படுத்தாமல் இருப்பதில் ஒரு பாதுகாப்பு உள்ளது. ஏனெனில் எந்தக்காலை க்ளெட்சை அழுத்த எந்த காலை ப்ரேக்கை அழுத்த என்ற பிரச்சனை இருக்காது. சடர்ன் ப்ரேக் போட வேண்டிய நேரத்தில் இந்த தடுமாற்றம் இருந்தால் அம்பேல் தான்.
கோவியண்ணா., நல்லாத்தானிருக்கு உங்க ஐடியா!!
_______________________________________________
கார்க்கி said...
சிங்கம் சின்னாளபட்டியில் இருந்து சிங்கைக்கே ரிட்டர்னா?
ஆமாங்க கார்க்கி... பேக் டூ பெவிலியன்.
________________________________________________
நட்புடன் ஜமால் said...
well
come
back
என்ன ஜமால் அண்ணா.,
ரெட்டை வரவேற்ப்பு., ஏதும் விசேசமா???
_______________________________________________
இராகவன் நைஜிரியா said...
வெல்கம் பேக்....
தம்பி முரு ஆரம்பமே சூப்பர். அடுத்த வாரம் இந்தியா போகின்றேன்... இப்ப இப்படி எழுதி வயத்தில புலிய கரைக்கின்றீர்களே...
எல்லாம் அவன் செயல்...
அண்ணே உங்களை யாராவ்து தடுக்க முடியுமா?
தைரியமா களத்தில இறங்குங்க. உங்க பின்னாடி நாங்க இருக்கோம்.
______________________________________________
ஸ்ரீதர் said...
vaanka boss.welcome.
வாங்க ஸ்ரீ...
wel come back
வருக வருக
பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை
/////
வாங்க வாங்க
நானும் இப்பத்தான் வந்தேன்
nice
ரொம்ப பயப்படாதீங்க,
பழக்கமானால் நீங்கள் கூட அப்படி வாகனம் ஓட்டலாம், சாதரண விசயம்தான்.,
வாழ்த்துக்கள்
Welcome Back Muru
//
கடைசியாக ஊர் திரும்ப சுமோ காரெடுத்து விமான நிலையம் நோக்கி வரும்வழியில் சுமோ டிரைவர் இடது காலை மடித்து வைத்துக்கொண்டு ஒற்றைக்கால் கிளட்ச்சை பயன்படுத்தாமலேயே 80-120 கிமீ வேகத்தில் வண்டியோட்டினார்.
//
ஐயோ கேட்கவே கலவரமா இருக்கே ?
இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா?
மற்றவர்களின் உயிர் மீது இவங்களுக்கு அக்கறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
//
பிணத்தைப் புதைக்கையில் போட்டிருக்கும் துணி புதிதாக இருந்தால் அதைக் கிழித்தே புதைப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். போகும் போது நல்ல துணியோடு கூட போக முடியாத போது தேவையா?, இந்த வீணான அட்வன்சர் வாழ்க்கை
//
ஆமா ஆமா நூற்றுக்கு நூறு உண்மைங்க!
//
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.
//
புது குறள் கூட அற்புதம். கையாண்ட விதமும் அருமை :)
//"ஐ அம் பேக்..."//
தலைப்புல ஒரு "கு"வ சேர்த்தால் அர்த்தம் வேற சாமியோவ்! :P
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.