மீண்டும் விளக்கம்`கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனம்` என்ற எனது முந்தய இடுகையில் கவிஞர் தாமரை அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்திருந்தேன். அதற்கு இரு வேறு விதமான கருத்துகளுடன் பல விமர்சனங்கள் வந்திருந்ததன், வந்து கொண்டிருக்கின்றன.

முதலில் எனது இந்த இடுகைக்கு `மிக நாகரீகமான முறையில் விவாதத்தில் கலந்து கொண்டு பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்`.

பின்னூட்டத்தில் எனது கருத்துகளை ஒத்துக்கொண்டவர்கள் எல்லாம் ஓரிரு வரிகளில் தங்களது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். என்னுடன் முரண் கருத்து கொண்ட நண்பர்களெல்லாம் மிகப் பெரிய அளவில் தங்களது எதிர் கருத்தை பதிவு செய்தனர்.

சில ஆதரவு கருத்து கொண்ட இடுகைகளும், சில எதிர்ப்பு கருத்து கொண்ட இடுகைகளும் எழுதப்பட்டது, ஆனால் எல்லோருக்கும் முடிந்த அளவுக்கு பதில் சொல்லிவிட்டேன்.

பலர் ஏன், பாரதி கோபப்படவில்லையா?, பாரதிதாசன் கோபப்படவில்லையா?, ஏன், ஆழமான மனத்துயரில் இருந்த கண்ணகி சாபமிட்டது போல், அதனைவிட மோசமான மீளாத்துயரில் இருக்கும் நாங்கள் எங்களை இச்சூழ்நிலைக்குத் தள்ளியவர்கள் மேல் சாபம் இடக்கூடாதா?, எனக் கேட்டிருந்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, மக்களின் மனத்துயரை போக்கி மக்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சொல்ல வேண்டிய கடமை தலைவர்களுக்கும், கலைஞர்களிக்குமே உள்ளது. இவர்களின் பேச்சுகளையும், உரைகளையும் கேட்க்கும் போதும், எழுத்துக்களை படிக்கும் போதும் ஏதாவது ஒரு வரியில் அல்லது ஏதாவது ஒரு வார்த்தை மக்களின் விடுதலை வேட்கை உணர்ச்சியைத் தூண்டி மக்களைச் சோர்விலிருந்து மீட்க வேண்டும்.

அதைவிடுத்து, தப்பான ஒரு வரியோ அல்லது ஒரு வார்த்தையோ, பறவைக் கூட்டத்தில் கல்லெறிந்து கலைப்பதைப் போல், சோர்ந்து கிடக்கும் மக்களை சிதறச் செய்யக்கூடாது என்பதே எனது எண்ணம்.

அதைத்தான் எனது முந்தைய இடுகையில் வெளிப்படுத்தியிருந்தேன், இந்த இடுக்கையிலும் அதையேத் தான் வெளிப்படுத்துகிறேன்.
நன்றி...நன்றி...நன்றி.

11 comments:

நட்புடன் ஜமால் said...

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ...

தீப்பெட்டி said...

தாமரையின் கவிதை வருங்கால தலைமுறையினருக்கு இன்றைய தமிழ்மக்களின் மனக்குமுறலையும் இந்திய ஏகாதிபத்தியத்தின் மீதான கோபத்தையும் உணர்த்தும் விதமாகவே பாடபட்டதாக கருதுகிறேன். (நமக்கு அல்ல.. நமது சந்ததியினருக்கு)

கண்ணகி துயரத்தால் மதுரை அழியட்டுமென சாபமிட்டிருக்கலாம். ஆனால் அழித்ததாக கூற இயலாது. இளங்கோவடிகள் பாடலில் அழித்தாக கூறுவதன் நோக்கம் கண்ணகியின் மனநிலை அத்தகையதாக இருந்தது என்பதே. அல்லது கோவலனை களங்கப்படுத்தி கண்ணகியை கைம்பெண்ணாக்கிய அன்றைய சமுதாயத்தின் மீதான இளங்கோவின் கோபமாகவும் இருக்கலாம்.

இளங்கோ சமண சமய துறவி என்பதையும் நினைவுகூறல் நல்லது. துறவியின் சமுதாயத்தின் மீதான கோபம் கவனிக்கப்பட வேண்டியது.

இதை இன்றைய சூழலில் பார்ப்பதைவிட 150 ஆண்டுக்கு பிற்பட்ட சூழலில் பார்த்தால் இன்றைய தமிழ் மக்கள், ஈழமக்களுக்கிழைக்கப்பட்ட துரோகத்தால் எத்தகைய மனஉளைச்சலுக்கு உள்ளானார்கள் எனபதற்கு சரியாக மேற்கோள் காட்டப்படும் கவிதை..

தாமரை காலத்தை வெல்லும் கவிதைகளைப் படைப்பாராயின் அவரது இந்த கவிதையும் இளங்கோ, பாரதி வரிசையில் வைக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படும்.

இல்லையெனில் காற்றோடு காற்றாக கலந்து விடும் ஈழ மக்களின் அழுகுரலோடு..

Anonymous said...

முற்றிலும் சரி...
சாபமிட்டால் நடந்துவிடுமா?
தமிழ் மக்களை சாபமிடுவதற்கு முன்பே கதறும் தமிழ்த் தாய்மார்கள் சிங்களவனை தூற்றி சாபமிட்டிருப்பார்கள். அவர்கள் சாபம் என்னவோ பலித்த மாதிரி தெரியவில்லை.
நடந்தவையை மறக்க முயற்சி செய்து இதற்கு மேல் நடக்கப் போகும் நிகழ்வுகளை நல்லதாக்க எல்லோரும் நினைத்தாலே போதும்.

கலையரசன் said...

எத்தனை தடவைதான் வெளிபடுத்துவ?
முடியல.. விட்டுடுங்க!!

வெண்காட்டான் said...

தாமரை காலத்தை வெல்லும் கவிதைகளைப் படைப்பாராயின் அவரது இந்த கவிதையும் இளங்கோ, பாரதி வரிசையில் வைக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படும்.//
appa entha kaalathilayum avavuku viduthu kidayaathu.

ஆ.ஞானசேகரன் said...

நீங்கள் சொல்வது சரி என்றாலும். அது ஒரு கோபத்தின் வெளிபாடுதான். நீண்ட கவியா இருப்பதால் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. பாரதிபோல ஒரு வரியில் சொல்லியிருந்தால் தாங்களுக்கு வந்த கோபம் இருக்காது என்றே தோன்றுகின்றது.

எதுவாயினும் கோபதின் வெளிப்பாடாக இருப்பதால் விட்டுவிடலாம் என்றே தோன்றுகின்றது முரு.....

வால்பையன் said...

//தப்பான ஒரு வரியோ அல்லது ஒரு வார்த்தையோ, பறவைக் கூட்டத்தில் கல்லெறிந்து கலைப்பதைப் போல், சோர்ந்து கிடக்கும் மக்களை சிதறச் செய்யக்கூடாது என்பதே எனது எண்ணம்.//


சொர்கத்திலும் குறை காணும் இளைஞனின் மனசு என்று ஒரு வரி அப்பு பட பாடலில் வரும்.

எதெற்கடுத்தாலும் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உடம்பை கெடுத்து கொள்ளாதீர்கள்,

கொலையே செய்வதாகினும் தீர யோசித்து முடிவு செய்து செய்ய வேண்டும்!

நீங்கள் சரியாகவே சொன்னாலும் அதை தவறாக புரிந்து கொள்ள நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் சொர்க்த்தில் குறை காண்பவர்கள்.

சொர்க்கம்=இந்தியா!

Unknown said...

சுவாலை கொண்டெரிந்த 'தீப்பெட்டி'யின் கருத்தோடே நான் ஒத்துப்போகிறேன்.

அப்பாவி முரு said...

நன்றி நண்பர்களே...

வால்பையன் said...

தமிழ்மணத்தில் இணையவில்லை அதனால் தான் மன்னிக்கவும்.

Cuddalore J. Shanthakumar said...

அன்பு சகோதர உன்னை பார்த்து கோபப் படுவதா இல்லை வெட்கி தலை குனிவதா.
ஒரு தமிழனாக உன்னால் இந்த கட்டுரை எப்படி எழுத முடிந்தது.உன்னால் இப்படி விமர்சனம் தான் செய்ய முடியவில்லை,செய்பவர்களை ஏன் இப்படி குத்தம் கண்டுபிடிகிறாய்.நீ ஒன்றை எப்போதும் நினைவில் வைத்துக்கொள் நாம் திராவிடர்கள் அவர்கள் ஆரியர்கள். ஒரு கருத்தை ஆதரிக்காமல் இப்படி நம்மக்குள் வாக்கு வாதம் செய்வதால் தான் இன்னும் நம் இனத்துக்கு விடிவு கிடைக்காமல் இருக்கிறது.இன்றும் என்றும் நமக்கெல்லாம் ஒரே தேசிய தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் தான்.இன்னும் தமிழின தலைவர் என்று சொல்லி நம்மை எல்லாம் ஏமாற்றி கொண்டிருக்கும் கலைஞர் அவர்களை நம்பினால் நாளை தாய் தமிழகத்தையே இழக்கும் நிலை கண்டிப்பாக வரும்.தயவு கூர்ந்து இந்த கட்டுரையை நீக்குங்கள்,இன்ன உணர்வை வளர்க பாடுபடுங்கள்.ஒற்றுமையை இருப்போம் தமிழர்கேன்று ஒரு நாட்டை உருவாக்குவோம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB