5S படிசீங்களே, 5C தெரியுமா? 5B தெரியுமா?நம்ம நண்பர் தாமிரா, புத்திசாலித் தனமா வேலை செய்ய 5S பத்தி தெளிவா சொல்லிக் கொடுத்தார்.,


ஆனால், இங்க நல்ல அழகான., புத்திசாலியான பொண்ணை கல்யாணம் பண்ணனும்னா உங்கட்ட 5C இருக்கணும்னு பொண்ணுங்க எதிர்பார்த்தாங்க, சரி நமக்கு தான் கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறன்ங்களே, சீக்கிரம் இந்த 5C - யை ரெடி பண்ணுவோம்முனு தேடிக்கிட்டுஇருந்தேன். அது என்னன்னா..


1. Car.,

2. Condo.,

3. Cash.,

4. Career.,

5. Credit Card ( Gold)


இதுகளை தேடி ஓடிக்கிட்டு இருக்கயில, தலையில இடி எறங்குன மாதிரி ஒன்ன சொன்னாங்க பாருங்க., இந்த பொண்ணுங்க 5C- ல இருந்து 5B- க்கு அப்- கிரேட் பண்ணிக்கிட்டங்கலாம். அது என்னன்னா...1. BMW., (சாதா கார் இல்லையாம், BMW தான் வேணுமாம்)2. BUNGALOW.,( காண்டோ வீடு பத்தாதாம், தனி பங்களா வேணுமாம்)3. BANK.,( பணம் பத்தாதாம், பாங்கே வேணுமாம்)4. BOSS.,( கேரியர் மட்டும் பத்தாதாம். மொதலாளி தான் வேணுமாம்)5. BILLIONAIRE...( கடன் அட்டை எல்லாம் பத்தாதாம், பில்லியனர் தான்

வேணுமாம்)இந்த 5B யை தாண்டி எனக்கெல்லாம் எங்கங்க கல்யாணமெல்லாம்...


நண்பர் தாமிரா-விடம் தான் ஐடியா கேட்கணும்...

13 comments:

இராகவன் நைஜிரியா said...

//2. Condo., //

பாத்து போடுப்பா..

ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.. என்னன்னு புரியாம.. அப்புறமா புரிஞ்சது..

இராகவன் நைஜிரியா said...

5C இல் இருந்து 5B க்கு அப்கிரேட் ஆனது ரொம்ப பெரிசு...

உன் கஷ்டம் எனக்கு புரியுது.. ஆனா புரிய வேண்டியவங்களுகு புரியலயே..

என்னப்பா பண்ணுவேன்...

இராகவன் நைஜிரியா said...

// நண்பர் தாமிரா-விடம் தான் ஐடியா கேட்கணும்... //

இதுக்கும் சிக்ஸ் சிக்மா உபயோகப்படுமான்னு பாருங்க..

99.97% சக்ஸஸ் ரேட் இருக்கணும்.. ஆமா சொல்லிபுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

Me the first?

அப்பாவி முரு said...

அண்ணே., வாங்கண்ணே.

என்னைக்கி உங்களை பாராட்டி பதிவு எழுதினோமோ, அதிலிருந்து நீங்க தமிழிஷ்- ல ஓட்டு போடுறதே இல்லையே ஏன்?

அப்புறம், உங்களுடைய விருதை கிரீடமா வைச்சிருக்கேன் பாத்தீங்களா?

இராகவன் நைஜிரியா said...

// muru கூறியது...
அண்ணே., வாங்கண்ணே.

என்னைக்கி உங்களை பாராட்டி பதிவு எழுதினோமோ, அதிலிருந்து நீங்க தமிழிஷ்- ல ஓட்டு போடுறதே இல்லையே ஏன்?

அப்புறம், உங்களுடைய விருதை கிரீடமா வைச்சிருக்கேன் பாத்தீங்களா //

ரொம்ப சந்தோஷம் தம்பி.

தமிலிஷ்- ல நம்ம ஓட்டுக்கு மதிப்பு கிடையாதாம்.

மதிப்பு இல்லாத ஓட்டு போடறதும் ஒன்னு, போடாததும் ஒன்னு.. அதனால் தாங்க குறைச்சிகிட்டேன்..

நட்புடன் ஜமால் said...

\\இந்த 5B யை தாண்டி எனக்கெல்லாம் எங்கங்க கல்யாணமெல்லாம்...\\

நிச்சியம் நடக்கம்

கவலைப்படக்கூடாது - அண்ணன் இருக்கன்ல - என்ன

நட்புடன் ஜமால் said...

\\பிளாகர் இராகவன் நைஜிரியா கூறியது...

//2. Condo., //

பாத்து போடுப்பா..

ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.. என்னன்னு புரியாம.. அப்புறமா புரிஞ்சது..\\

நல்லா கிளப்புறாங்கப்பா ...

அப்பாவி முரு said...

ஓட்டை பத்தி விடுங்கள்.,

ப்ளாக் ஆரம்பித்த போதே கட்டுக் கோப்பாய் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தே, பின் எழுத ஆரம்பித்தேன். நமக்கு மற்றவர்களை விட நம்முடைய வட்டத்துக்குள் இருப்பவர்கள் தான் முக்கியம், அவர்கள் மனம் கோணாமல் இருந்தால் போதும். எனவே முடிந்தளவு வருகையை பதிவு (பின்னுட்டம் ) செய்யவும்.

அப்பாவி முரு said...

/// அதிரை ஜமால் கூறியது...
\\இந்த 5B யை தாண்டி எனக்கெல்லாம் எங்கங்க கல்யாணமெல்லாம்...\\

நிச்சியம் நடக்கம்

கவலைப்படக்கூடாது - அண்ணன் இருக்கன்ல - என்ன///

வாங்க... ஜமால்.,

ஆறுதலுக்கு நன்றி...

இராகவன் நைஜிரியா said...

நண்பரே ..

வலைப்பதிவை மாற்றினால் சொல்லக்கூடாதா.. நான் கீழே கொடுத்த லிங்கை புக் மார்க் பண்ணி வைத்திருந்தேன்..

http://kalaigan.blogspot.com/

அதை ஓப்பன் செய்தால் Blog not found என்று மெசெஜ் வருகின்றது.

அப்புறம் ஒருவழியா தேடி கண்டு பிடிச்சு.. இங்க வந்து சேர்ந்தேன்..

http://abbaavi.blogspot.com/

இப்படியெல்லாம் படுத்த கூடாது... புரிஞ்சுதா...

நிஜமா நல்லவன் said...

:))

priyamudanprabu said...

என்கிட்ட ரெண்டுமே இல்லைங்க..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB