ஜப்பானிலுள்ள ஒரு பல் பொருள் விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஊற்று காட்டும் வித்தையை பாருங்கள் நண்பர்களே,
ஜப்பானியர் தொழில் நுட்பத்தில் மிக உயரத்திற்க்கு சென்றாலும், பொருள்களின் தரத்தில் சிறு பிழையும் விடுவதில்லை
என்னுடைய சிங்கை அனுபத்தில் நான் ஜப்பானியரிடம் வேலை செய்ததில்லை, ஆனால் என் உற்பத்தி பொருள்களில் சில ஜப்பானுக்கு செல்லும்.
ஒரு முறை, என்னுடைய உற்பத்தி பொருளில் சிறு காயம் (Cosmetic Defect) பட்டுவிட்டது, நான் என்னுடய மாதிரி அளவீடுகளை வைத்து பார்த்தபின்னும் எனக்கு சரியாக படவில்லை. எனவே, நான் எனது தரகட்டுப்பாட்டு பொரியாளரை அழைத்து சந்தேகம் கேட்டதும், அவர் அந்த காயத்தை பார்த்து சிறு குழப்பத்திற்க்கு பின், இது ஜப்பானுக்குப் போகிண்ட்றது என்றால் வேண்டாம், மாறாக இது ஜப்பானுக்கு இல்லை எனில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்.
அந்த சிறு காயத்தைப் பற்றிய ஜப்பானியரின் கவலை தான், இன்று அவர்களை மற்றவர்களிடமிருந்து மிக உயரத்திற்க்கு இட்டுச்சென்றுள்ளது.
4 comments:
அருமை! மிக நன்றாக உள்ளது. இந்த வீடியோ எனக்கு டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்குமா?
சிறப்பான செய்தி ...
அருமை! மிக நன்றாக உள்ளது. இந்த வீடியோ எனக்கு டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்குமா?//
வாங்கண்ணே... உங்களுக்கில்லாத்தா...
இந்தா அனுப்பி வைக்கிறேன்.
// நட்புடன் ஜமால் கூறியது...
சிறப்பான செய்தி ...//
வாங்க ஜமால்...
சிங்கையில் One Raffles Link / Suntec city போகும் வழியில் இதே போல நீரில் எழுத்துக்கள் வீழும் அமைப்பு உள்ளது பார்த்தீர்களா?
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.