சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாக, நண்பரை சந்திக்க திண்டுக்கலுக்கு சென்று அவருடன் பள்ளிவாசல் (SCHOOL) அருகிலுள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திக்கொண்டே பழைய விசயங்களை பேசிக்கொண்டிருக்கயில், நண்பர் என்னை அவருடய வண்டியை கவனிக்கச் சொன்னார்.
அவருடயது, SPLENDER BIKE, அது நின்றுகொண்டிருந்த இடத்தில் வாகனங்களுக்கிடையே, மூன்று பள்ளி சிறுவர்கள் (பள்ளி சீருடையில்), கோலி விளையாடியபடி இருந்தனர். நண்பர் அவர்களை கவனிப்பத்தைப் பார்த்ததும்,
நான் “என்ன சார், இந்த வெயிலுல அதுவும் இந்த வண்டி நெருக்கடியில இந்த பசங்க கோலி வெளையாடுறாங்க?”
”இருங்க முரு, அந்த பசங்களை கண்டுக்காத மாதிரி கவனிங்க”
பொய்யாக பேசிக்கொண்டே அந்த சிறுவர்களை கவனித்தேன்.(எத்தனை க்ரைம் நாவல் படிச்சிருப்போம், நமக்கா தெரியாது?) பசங்க விளையாடுவது போல் ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் கையைவிட்டு ஏதோ செய்தார்கள்.
“என்னங்க சார், காத்தை புடுங்கி விடுறாங்களா?, அடுத்து நம்ம வண்டிதான்!”
“இருங்க முரு, பசங்க நம்ம வண்டியையும் தொடட்டும்?”
{என்னா தைரியம்?, பசங்க வண்டியில ஏதோ செய்ய்றானுங்க, இவரு அதை சும்மா பாக்க சொல்லுறாரே! என்று மனதுக்குள் குழம்பியபடி இருக்கயில்} எங்கள் முறை வந்தது, நான் கூர்ந்து கவனித்தேன்,
சிறுவர்களில் ஒருவன் கோலி விளையாடுவது போல் மெதுவாக வண்டியின் செயின் கவரில், லூப் ஆயில் விடுவதற்க்கு இருக்கும் ஒட்டையை அடைத்து இருக்கும் ரப்பர் கப்னை கழட்டி எடுத்து சட்டை பையில் போட்டுக் கொண்டனர். நான் உடனே அருகில் இருந்த வாகனங்களை கவனித்தேன், அனைத்து வாகனத்திலும் அந்த ரப்பர் கப் மிஸ்ஸிங். எல்லாம் இந்த சிறுவர்களின் கைங்கரியம்.
நமது நண்பர் சாதாரணமாக சிறுவர் கூட்டத்திலிருந்து அவரின் வண்டியில் ரப்பர் கப்பை எடுத்த சிறுவனை அழைத்தார், அச்சிறுவன் என்ன என்று கேட்பதுக்குள் மற்றவர்கள் மெதுவாக நழவினர். அருகில் வந்த சிறுவனை கடைக்கு அழைத்துவந்து ஏன் இப்படி அந்த ரப்பர் கப்களை கழட்டி எடுக்கிறீர்கள்? என்று கேட்டதும், ஆரம்பத்தில் பதில் சொல்ல மறுத்தவன் அடுத்து அதிர்ச்சியும்-ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் விசயத்தை சொன்னான். அது,
இப்படி ஒவ்வொரு வண்டியிலிருந்தும் எடுக்கும் ரப்பர் கப்களை நான்கைந்து சேர்ந்ததும், இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் ஏதெனும் ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்தால் ஒவ்வொரு கப்புக்கும் தலா இரண்டு ரூபாய்கள் தருவாராம். அதனால் தான் இப்படி விளையாட்டாக இந்த ரப்பர் கப்புகளை எடுப்பதாக சொன்னான்.
ஏன் மெக்கானிக் இந்த கப்களை இரண்டு ரூபாய் கொடுத்து வாங்குகிறார்? என்ற கேள்விக்கு அந்த சிறுவனிடம் பதில் இல்லை. ஆனால் நண்பரிடம் இருந்து பதில் வந்தது. அது
”வண்டியை ஏதாவது வேலைக்காக மெக்கானிக்கிடம் கொண்டுசெல்லும் போதெல்லாம், வேலையோடு வேலையாக இந்த ரப்பர் கப் புதிதாய் போட(போடவில்லை என்றால் செயினில் மண் படிந்து செயின் வீணாகும்) ஐந்து ரூபாய் வாங்கிவிடுகிறார். மெக்கானிக் போடும் அந்த ரப்பர் கப் இந்த மாதிரியான சிறுவர்களிடம் இரண்டு ரூபாய்க்கு வாங்கியதாகத்தானிருக்கும்” என்றவர்.
இப்படி மெக்கானிக்கிடம் ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கிய ரப்பர் கப், இந்த மாதிரியான சிறுவர்களின் மூலமாக இரண்டு ரூபாய்க்கு மீண்டும் மெக்கானிக்கின் கைக்குப் போய் மீண்டும் ஐந்து ரூபாய்க்கு நம்மிடம் வந்து கொண்டே இருக்கும்.
செயினை பாதுகாக்க போடும் ரப்பர் கப், ஐந்தும்-இரண்டுமாக நம்மிடம் செயின் போல சுத்திக்கொண்டே இருக்கும்” முடித்தார்.
அவர் விளக்கிய பின்னார், இருசக்கர வாகனங்களை பார்க்கும் போதெல்லாம் அந்த ரப்பர் கப் இருக்கிறதா என்று பார்ப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. பார்த்ததில் பெரும்பாலும் ப்ளாஸ்டிக் கப் மிஸ்ஸிங்.
என்ன கொடுமை சார் இது…
மிச்சர்கடை
4 weeks ago
3 comments:
Good Observation sir..
உலக மகாக் கொடுமை தம்பி..
முதலில் சிறு திருட்டுதான் பின்னாளில் பெரிய திருட்டாக மாறுகின்றது..
மெக்கானிக்குகள், அந்த சிறுவர்கள் மனதில் இப்பவே நஞ்சை கலக்க ஆரம்பித்து விட்டர்கள்...
எதிர்காலத்தில் அந்த சிறுவர்கள் என்னவாக ஆவார்கள் என்று எண்ணினால் மனசு சங்கடப்படுகின்றது..
அடடா....
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.