முத்துக்குமரன்களுக்கோர் எச்சரிக்கை?

முத்துக் குமரா...

தமிழ்த்தாய்-மகுடத்தின்

நன்முத்தே,

குமரா...


பெற்ற தாயின் கனவை கருக்கினாய்,

வளர்த்த (தமிழ்)தாய்க்கான

கடமையை கருக்கலாமா?

உணர்ச்சி வயப்பட லாகுமா?

உன் கடமையின் முன்

உணர்ச்சி வயப்பட லாகுமா?

எதிரிகளிடம்,

தாயும்-தமக்கையிருக்கும்நேரத்தில் தான்,

உணர்ச்சி வயப்பட லாகுமா?

எதிரி யாரென்று தெரியும்.

எதிரியின் பின்னாலிருப்பது யாரென்று தெரியுமா?

அது,

பாம்பா? பன்னியா?

கழுகா? கழுதையா?

இல்லை

இத்தனை நாள்நாம் போற்றி வணங்கிய

நம் தர்மத்தாய்-தானா?

யாரந்த நிழல்?

உலகம் உருகவில்லை,

உதவி செய்ய ஆளில்லை,

உடன்பிறப்பு நீயும் போனால்

கடைசியில்

தாயைக் காக்கவும்

நாட்டை காக்கவும்,

மானம் காக்கவும்

யாரிருப்பார்?

மரிக்கக் கூடாத

நம் (தமிழ்)தாய் மரித்தால்,

பிணத்தை புதைக்கவோ

எரிக்கவோ நீயோ நானோ

இருக்க வேண்டாமா,

பாதையில் உன்போல் எல்லோரும்

உணர்ச்சி வயப்பட்டால்

பிணம் என்னாகும்?

(தமிழ்)தாயின் பிணத்தை

கழுகு கிழிக்கலாம்,

நரி திங்கலாம்,

ஆனால்,

காமுகன் கையில் சிக்கினால்...

அய்யகோ,

அதை தடுக்க நீயோ

நானோ இருக்க வேண்டாமா...

உணர்ச்சியை குறை,

கடமையை செய்...

வாழ்வோ! தாழ்வோ!

காலத்தின் கட்டளைக்கு

கட்டுப் படுவோம்.

- முரு

2 comments:

இராகவன் நைஜிரியா said...

// உலகம் உருகவில்லை,உதவி செய்ய ஆளில்லை,உடன்பிறப்பு நீயும் போனால்கடைசியில் தாயைக் காக்கவும்நாட்டை காக்கவும்,மானம் காக்கவும்யாரிருப்பார்? //

சரியாக சொன்னீர்கள் தம்பி முரு. உயிர் என்பது விலை மதிக்க முடியாதது. அது இருந்தால் தான் நாம் நம் மக்களுக்கு உதவி செய்ய இயலும்.

நண்பர்களே, எதிர்த்து போராட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று நினையுங்கள். தயவு செய்து இது மாதிரி யாரும் செய்யாதீர்கள்.

priyamudanprabu said...

///
உணர்ச்சியை குறை,

கடமையை செய்...
///

சரியா சொன்னீங்க

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB