போலி சாமியார்களும், போலி பகுத்தறிவுவாதிகளும்!?

மதம் - இன்றைய நிலையில் மிகுந்த பிரச்சனைக்கு ஆட்படுகின்ற வார்த்தை.

மதம்- இந்த வார்த்தையை போலி சாமியார்களாலும், போலி மத பிரசங்கவாதிகளாலும் மற்றும் நம்மிடைய இருக்கும் போலி பகுத்தறிவுவாதிகளாலும் இன்று இதற்க்கு போலி முகம் மாட்டப்பட்டுள்ளது!

இந்து மதம் தோன்றியது எப்போது?- இதற்கான பதில் ஆன்மீகத்தில் இருப்பவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என யாராலும் கூறமுடியவில்லை.

இயற்கையாக மனிதன் தோன்றியதிலிருந்து இந்து மதம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். ஐந்தறிவு மிருகத்திற்கும், ஆறறிவு மனிதனுக்கும் இடைப்பட்ட வாழ்கை வாழ்ந்த போது ஏற்பட்ட வெளிஉலக குழப்பங்கள் மற்றும் பயம் ஒழிய மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்து,

ஏன் என்ற பகுத்தறிவால் நாகரீகம் தோன்றியது, நாகரீகத்தில் பதில் இல்லாத கேள்விகளுக்கான (மரணம் என்றால் என்ன?, மரணத்தின் பின்னால் என்ன? அமைதியான, அன்பான மனநிலையில் வாழ்வது எப்படி?) விடை கானவே மதம் தோன்றியது.

நாகரீகத்தின் வளர்ச்சியாகத்தான் மதம் தோன்றியது. மதம் மனிதனிடம் போதித்து என்ன? தனி மனித ஒழுக்கம். அந்த தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க தியானம், பிரசங்கம், தான தர்மம், எளிய வாழ்க்கை என்றாக்கியது.

இந்த நிலைவரை பகுத்தறிவும், மதமும் ஒன்றாக இணைத்து மிருகத்தை மனிதனாக்கியது. அந்த பகுத்தறிவு மதத்தில் குறை காணவில்லை.
மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுக்குள் வைப்பது மதமன்றி வேறென்ன?. உண்மையில் மதங்கள் போதிப்பது அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை,ஆசையை ஒழிப்பது என்பதே ஆகும்.


ஆனால் மதமே இல்லை என்று தந்தை பெரியார் முழங்க காரணம் என்ன?

தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த, இருக்கின்ற ஜாதி வேறுபாட்டை ஒழிக்கவேண்டியே கடவுள் மறுப்பை ஆரம்பித்தார் தந்தை பெரியார்.

ஆனால் ஆண்டுகள் பலவாகியும் இந்த ஜாதி அமைப்பை குறைக்கவும் முடியவில்லை- குலைக்கவும் முடியவில்லை!

ஆனால் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல் இன்னும் ஜாதியிளிருக்கும் உட்பிரிவுகளை கண்டுபிடித்து பிரசவம் பார்க்கிறார். இது தான் பெரியார் ஆசைப்பட்ட ஜாதி,மத ஒழிப்பு நடவடிக்கைகளா?


பெரியார் தன்னுடைய காலத்திலே, அருள் முருக கிருபானந்த வாரியார் என்ற மதவாதிக்கு எதிர்ப்பும் சொன்னதில்லையே ஏன்?

தந்தையின் எண்ணத்தை(ஜாதி ஒழிப்பு என்பதே மத ஒழிப்பு ஆனதை) , ஆசையை புரிந்து கொள்ளவே இல்லை பின் எப்படி அதை நிறைவேற்றுவது.
தந்தையின் முதல் சீடன் அறிஞர் அண்ணா கடவுள் இல்லை என்றிருந்தவர் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று முழங்க என்ன காரணம்? யாரந்த ஒருவன்? மரண படுக்கையிலிருக்கும் போது அன்பர் ஒருவர் அண்ணாவின் நெற்றியில் பூசிய திருநீரை மறுக்கவில்லையே என்ன காரணம்,? அறிஞருக்கு மரண படுக்கையில் ஏன் இந்த மாற்றம்?


இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட, மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடி பொடிகளுடன் மோதிரம் வாங்கிக்கொள்கிறார்களே என்ன காரணம்?

ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். இரண்டும் மக்களை முன்னேற்ற பாடுபடவேண்டுமே அன்றி, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது? என்று கலைஞர் வேலூர் தங்க கோவிலில் முழங்க காரணம் என்ன?

மூட நபிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?

நண்பர்களே சிந்தியுங்கள் போலி பகுத்தறிவாளர்களின் பேச்சை கேட்காமல் உங்களுக்குள் ஒழுக்கத்தை கொண்டுவந்து அமைதியை பரப்புங்கள்.


அதே நேரத்தில், கஜினி முஹம்மது, மற்றும் பலர் அணி அணியாக படை எடுத்துவந்து கொலை, கொள்ளை, கோவில்கள் இடித்து உடைத்தபோதும், (அதில் கஜினி முஹம்மது மட்டும் சிறப்பு, ஏனெனில் தன் படை எடுப்பில் ஒருமுறை குஜராத் சோமநாதர் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்கையில் தடுத்த ஐம்பதாயிரம் மக்களை வெட்டிக் கொன்றது மட்டுமில்லாது, சிறந்த கட்டிடக்கலை முறைப்படி அந்தரத்தில் மிதக்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்த சிவ லிங்கத்தை, சுற்று சுவர்களை இடித்து லிங்கம் கீழே வந்தவுடன் அதை எடுத்து கோவில் வாசலில் போட்டுடுடைத்தவன்) இந்தியா முழுக்க ஒவ்ரங்கசீப்பின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போதும் இல்லாத ஒரு புதிய விஷயம் தற்பொழுது நாடு முழுதும் பரவி வருகிறதே ஏன்?
புது புது கோவில்களும், புது புது பழக்க வழக்கங்களும். ஏன் இந்த விரிவாக்கம்?


நமது தமிழ்நாட்டில் எப்பொழுதும் வீடுகளில் ஒரு தனி பூஜை அறை, சின்ன வீடுகளில் ஒரு மூலையில் சிறு படம், அல்லது சுவற்றிலே விளக்கு மாடம் அல்லது ஒரு சானுக்கு ஒரு மஞ்சள் வட்டம் அதில் ஒரு குங்கும பொட்டு வைத்து அதை அமைதியாக, மனமுருக வேண்டிக்கொள்வார்கள். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கோவில் மட்டும் இருந்தது. அப்போது தனி மனிதனிடமும் சரி, வீட்டிலும் சரி, ஊரிலும் சரி அமைதி குடி கொண்டிருந்தது.

ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் புது புது கோவில்கள், பெரிய பெரிய மண்டபங்கள், ( அதே நேரத்தில் பழமை வாய்த்த கோவில் கட்டிடங்களை காணாமல் விட்டுவிட்டனர்) ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலம் என எல்லாம் இருந்து மக்களிடையே மன அமைதி இலையே என்ன காரணம்?

நமது மனம் அமைதியடைய கோவில் கட்டுகிறோமா, இல்லை பிறர் மனம் நோக கட்டிகிறோமா?

மனைவியை, காளி தேவியாக பார்த்த ராமகிருஷ்ணர்,

சகோதரர்களே...சகோதரிகளே...என்று சிகாக்கோ மாநாட்டில் முழங்கிய விவேகானந்தர்,

போன்றோர் செய்த மத தொண்டு...

இன்று நீங்கள் அரசாங்க இடங்களை ஆக்கிறமித்து புது புது கோவில் கட்டுவது, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது ( சிலையை முழுவதுமாய் கரைப்பதுமில்லை, அடுத்தநாள் கை போன பிள்ளையார், கால் போன பிள்ளையார், தும்பிக்கை இல்லாத பிள்ளையார் என பார்க்கலாம்) என செய்யும் மத தொண்டு, இதில் எந்த மதத்தொண்டு மக்களை அமைதியாக சந்தோசமாக வாழவைத்தது, வைக்கிறது என்று சிந்தியுங்கள்.

போலி மததொண்டை விடுங்கள். மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும்,.

ஆனால் இன்று மனிதனை மீண்டும் மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்.

29 comments:

Unknown said...

EXCELLENT.

தீப்பெட்டி said...

//போலி மததொண்டை விடுங்கள் மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும், ஆனால் இன்று மனிதனை மீண்டு மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்//

நாம் வெட்கப்படவேண்டிய விசயம் இது. பாமர மக்களைவிட படித்த மேல்தட்டு மக்களிடம் இவை வேரூன்றி இருக்கிறது.

மனிதம் தழைத்தோங்க மக்களின் மனோபாவம் மாறவேண்டும்.

Anonymous said...

இவங்களைப் பற்றி சொல்ல என்ன இருக்குதென்று இன்னமும்?

வால்பையன் said...

//இயற்கையாக மனிதன் தோன்றியதிலிருந்து இந்து மதம் இருப்பதாகவே நான் உணர்கிறேன்.//

அதாவது முன்முதற் கடவுளிலிருந்து கிளையாக இருக்கும் அல்ப சில்ப கடவுள்களும் இருந்ததாக உணர்கிறீர்கள் சரியா?

அது என்ன இந்து மதம் மட்டும் இருந்தது!
மற்ற மதங்கள் பிறகு ஏன் உருவாகியது?
மற்ற மதங்கள் உருவானது போல் இந்து மதமும் ஏன் உருவாகியிருக்க கூடாது?

வால்பையன் said...

//இன்றுவரை மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுக்குள் வைப்பது மதமன்றி வேறென்ன?. //

நல்லா காமெடி பண்றிங்க!

மதம் மனிதனை கட்டுக்குள் வைக்குதா?

இன்று நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் காரணமே இந்த மதம் தான்!

வால்பையன் said...

//மதங்கள் போதிப்பது அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை,ஆசையை ஒழிப்பது என்பதே ஆகும்.//

அதெல்லாம் சக மதத்துகாரனுக்கு அடுத்து மதக்காரன் வந்தால் குத்து வெட்டு தானாம்!

வால்பையன் said...

மதமே இல்லை என்று தந்தை பெரியார் முழங்க காரணம் என்ன?//

இல்லைங்கிறத இல்லைன்னு தானே சொல்லமுடியும்!

வால்பையன் said...

//ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். //

முடியல
அழுதுருவேன்!

வால்பையன் said...

அப்பாவி மாதிரி இருந்துகிட்டு! ஒரு முழு இந்துத்துவா வாதியா எழுதியிருக்கிங்க!

மத நல்லிணக்கம் வேணும்னு சொல்ற அதே நேரத்துல இந்து மதம் தான் எல்லாவற்றிற்கும் முன்னோடி என சைட்ல சங்கு ஊதியிருக்கிங்க!

பத்தாதுக்கு இஸ்லாமிய படையெடுப்பை சாடியிருக்கிங்க! ஒளரங்கசிப் காலத்தில் இந்தியா எங்கும் இஸ்லாமிய மதம் கட்டாயமாக திணிக்கப்பட்டதாக ஹிண்ட்ஸ் கொடுத்துறிக்கிங்க!

மதத்தை விட மனிதமே முக்கியம்! எப்பொழுது என் மதம் சிறந்ததுன்னு உள்மனதில் ஒரு எண்ணம் வருதோ! அப்பவே நீங்க முழுசா அந்த மதவாதியா மாறிவிடுகிறீர்கள்!
பிறகு கண்கள் கட்டப்பட்ட குதிரை தான்! யார் என்ன சொன்னாலும் ஏரவா போகுது!

அப்பாவி தமிழன் said...

மாத்தி மாத்தி அடிக்கறீங்களே

அப்பாவி முரு said...

அண்ணே வால்ஸ்.,

எனக்கு தெரியும் நீங்க வருவீங்கன்னு.,

//அது என்ன இந்து மதம் மட்டும் இருந்தது!
மற்ற மதங்கள் பிறகு ஏன் உருவாகியது?
மற்ற மதங்கள் உருவானது போல் இந்து மதமும் ஏன் உருவாகியிருக்க கூடாது?//

அண்ணே எனக்கு ஓரளவுக்கு தெரிஞ்ச மதம் இந்து மதம் தான்,. அடுத்து நம்ம விவசாயிகளெல்லாம் கும்பிடுரதெல்லாம் இயற்கையத்தான். அதை வச்சுதான் நான் சொல்லுறேன். அடுத்தாள் யாரும் சொன்னதை வச்சு சொல்லலை.


//நல்லா காமெடி பண்றிங்க!

மதம் மனிதனை கட்டுக்குள் வைக்குதா?

இன்று நடக்கும் எல்லா சண்டைகளுக்கும் காரணமே இந்த மதம் தான்!//

காமெடியாயிப்போச்சு இந்த போலி மதவாதிகளால். சண்டையில்லாத மத சம்பந்தப் பட்ட எத்தனியோ அமைப்புகள் அமைதியா மதப்பிரசங்கம் பண்ணுறது உங்களுக்கு தெரியலையா?


////ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். //

முடியல
அழுதுருவேன்!//

இது முழுக்க முழுக்க கலைஞரோட வார்த்தைகள்.

வால்பையன் said...

இது முழுக்க முழுக்க கலைஞரோட வார்த்தைகள். //

கலைஞர் சொன்னா கடவுள் சொன்ன மாதிரியா அப்படியே ஏத்துக்கனுமா?

அப்பாவி முரு said...

// வால்பையன் said...
அப்பாவி மாதிரி இருந்துகிட்டு! ஒரு முழு இந்துத்துவா வாதியா எழுதியிருக்கிங்க!//

நான் அப்பாவிதான். என்னோட இந்துத்துவம் என்னோட மூக்கு வரை மட்டும் தான். அதை வச்சு யாரையும் நான் கிண்டல் பண்ணுறதோ, மட்டமா பேசுறதோ இல்லை.

//பத்தாதுக்கு இஸ்லாமிய படையெடுப்பை சாடியிருக்கிங்க! ஒளரங்கசிப் காலத்தில் இந்தியா எங்கும் இஸ்லாமிய மதம் கட்டாயமாக திணிக்கப்பட்டதாக ஹிண்ட்ஸ் கொடுத்துறிக்கிங்க//

அண்ணே நான் சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அன்னைக்கி கத்தி, வாளை பார்த்து அமைதியா இருந்தவங்க, இன்னுக்கு கொஞ்சம் சுகந்திரம் கிடைச்சதும் கிடைக்கிற கொஞ்ச நிலத்திலையும் கோவில் கட்டுறதை தப்புன்னுதான் நானும் சொல்லுறேன்.

அப்பாவி முரு said...

// வால்பையன் said...
இது முழுக்க முழுக்க கலைஞரோட வார்த்தைகள். //

கலைஞர் சொன்னா கடவுள் சொன்ன மாதிரியா அப்படியே ஏத்துக்கனுமா?//

உங்களை ஏத்துக்கச் சொல்லவில்லை.
எந்தளவுக்கு கடவுள் மறுப்பு பேசிய ஆள்கூட, எந்தளவுக்கு மாறிவிட்டார் என உதாரணம் மட்டுமே.

போலி பகுத்தறிவுவாதி!!!!

வால்பையன் said...

//உங்களை ஏத்துக்கச் சொல்லலை. எவ்வ்ளோ எதுத்து பேன ஆள், இன்னிக்கி எந்தளவுக்கு மாறிப்போயிருக்கார் என்பதற்கான உதாரணம் மட்டுமே! //

இந்துமதம் மெஜாரிட்டியாக உள்ள ஊரில் கருணாநிதி சரணம் அய்யப்பா கோஷம் போட்டாலும் ஆச்சர்யபட தேவையில்லை!

கருணாநிதி மட்டும்மல்ல அனைத்து அரசியல்வாதிகளின் பேச்சையும் ஓடும் தண்ணியில தான் எழுதி வைக்கனும்!

அப்பாவி முரு said...

// வால்பையன் said...

இந்துமதம் மெஜாரிட்டியாக உள்ள ஊரில் கருணாநிதி சரணம் அய்யப்பா கோஷம் போட்டாலும் ஆச்சர்யபட தேவையில்லை!

கருணாநிதி மட்டும்மல்ல அனைத்து அரசியல்வாதிகளின் பேச்சையும் ஓடும் தண்ணியில தான் எழுதி வைக்கனும்!//

இதற்குத்தான் பெரியார் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டாம். ஓட்டுக்காக கொள்கையில் வளைந்து கொடுக்க வேண்டியிருக்குமென சொன்னார்.

யார் கேட்டா..

Anonymous said...

மதமான பேய் பிடியாதிருக்க வேணும் ' என்று வள்ளலார் சொன்னாரே அதை
எடுத்துக்கலாமா வேணாமா?

அப்பாவி முரு said...

// anburaja said...
மதமான பேய் பிடியாதிருக்க வேணும் ' என்று வள்ளலார் சொன்னாரே அதை
எடுத்துக்கலாமா வேணாமா?//

பேய் பிடியாதிருக்கத் தானே கேட்டிருக்கார்.எடுத்துக்கத் தான் வேணும்.

வஜ்ரா said...

//
அப்பாவி மாதிரி இருந்துகிட்டு! ஒரு முழு இந்துத்துவா வாதியா எழுதியிருக்கிங்க!

மத நல்லிணக்கம் வேணும்னு சொல்ற அதே நேரத்துல இந்து மதம் தான் எல்லாவற்றிற்கும் முன்னோடி என சைட்ல சங்கு ஊதியிருக்கிங்க!

பத்தாதுக்கு இஸ்லாமிய படையெடுப்பை சாடியிருக்கிங்க! ஒளரங்கசிப் காலத்தில் இந்தியா எங்கும் இஸ்லாமிய மதம் கட்டாயமாக திணிக்கப்பட்டதாக ஹிண்ட்ஸ் கொடுத்துறிக்கிங்க!
//

இஸ்லாமிய படையெடுப்பை சாடுபவன் எல்லாம் இந்துத்வாவாதியா ?

என்ன கொடுமை சரவணன் இது.

இஸ்லாம் என்ற சொல்லைப்பார்த்தே மூச்சா போய் விடுவீர்கள் போலிருக்கே...

இஸ்லாமியப்படையெடுப்பினால் இந்தியா அழிந்தது என்பது வரலாறு.
அதைச் சொல்வதனால் இன்றைய இந்திய இஸ்லாமியர்களை யாரும் குறை கூறவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் நீங்கள் தான் இன்னும் இஸ்லாமியர்களை படையெடுத்து வந்த வந்தேரிகளாகக் கருதுகிறீர்கள் என்று பொருள்.

வால்பையன் said...

நல்லாயிருக்கு உங்க மத நல்லிணக்கம்!

சண்டை போட எனக்கு நேரமில்லை!

எல்லாத்தையும் எழுதி வையுங்க பொறுமையா வர்றேன்!

Renga said...

அப்பாவிமுரு மற்ற பதிவர்களை போல (கார்கி - விஜய் ரசிகர், லக்கி - DMK etc. ) நீங்களும் வெளிபடையாகவே BJP யை ஆதரிக்கலாம். இது உங்களுடைய முழு உரிமை. அதை விட்டு ஏன் இந்த முகமுடிஎல்லாம்

அப்பாவி முரு said...

// Renga said...
அப்பாவிமுரு மற்ற பதிவர்களை போல (கார்கி - விஜய் ரசிகர், லக்கி - DMK etc. ) நீங்களும் வெளிபடையாகவே BJP யை ஆதரிக்கலாம். இது உங்களுடைய முழு உரிமை. அதை விட்டு ஏன் இந்த முகமுடிஎல்லாம்//


நேரடியாக கேட்ட்தற்கு நன்றி ரங்கா. நான் பி.ஜே.பியை ஆதரிப்பவனாய் இருந்தால் ஏன் திடீர்கோவில்களை எதிர்க்க வேண்டும். சரியா படிங்க சார்.

வால்பையன் said...

//ஏன் திடீர்கோவில்களை எதிர்க்க வேண்டும். சரியா படிங்க சார். //

உள்குத்து இருக்குது அண்ணே!
தீடீர் கோவில்களை இடியுங்கள் என்றால்!
பாராம்பரியம் மிக்க இந்து கோவில்களுக்கு மட்டுமே இடம். மற்ற மதத்தவருக்கு கோவில் கிடையாதுன்னு அர்த்தம்!

மொத்தமா இருக்குற கோயிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்னு சொன்ன அது மனிதம்!

நீங்க சொன்ன மாதிரி சொன்னா அது தான் இந்துத்துவா!

அப்பாவி முரு said...

பழைய கோவில்கள் சிதிலமைடைஞ்சுகிட்டு இருக்கப்ப, புதுக் கோவில் கட்டுறதை முட்டாள் தனம்ன்னு நான் சொல்லுறேன்.

கோவிலே இருக்கக்கூடாதுன்னு நீங்க சொல்றீங்க.

அடுத்து நான் அடுத்த மதத்தை பத்தி பேசவரவில்லை. கஜினியை உதாரணம் காட்டியது கூட அன்னைக்கி அமைதியா இருந்திட்டு, இன்னைக்கு ஏன் புதுசு புதுசா கோவில்களை கண்டுபிடிக்கிறீங்கன்னுதான் கேட்க்க மட்டுமே.

உள்குத்தெல்லாம் கிடையாது.

வால்பையன் said...

//அன்னைக்கி அமைதியா இருந்திட்டு, இன்னைக்கு ஏன் புதுசு புதுசா கோவில்களை கண்டுபிடிக்கிறீங்கன்னுதான் கேட்க்க மட்டுமே.//

இது எல்லா மதத்துலயும் உண்டே!

அ.மு.செய்யது said...

//
Vajra said...
இஸ்லாமியப்படையெடுப்பினால் இந்தியா அழிந்தது என்பது வரலாறு.//



சிரிப்பொலி சேனல் பாக்குற மாதிரி இருக்குதுண்ணே !!!!

சி தயாளன் said...

மதம் ...கிட்டத்தட்ட யானைக்கு மட்டுமில்லை..மனிதனுக்கும் அதிகமாகவே பிடித்து விட்டது

இந்தியா வந்த போது கவனித்தவை..நீங்கள் சொன்னது போல் பெரிய புராதன கோயில்களான தஞ்சை பெரிய கோவில் போன்றவை ஒழுங்கான பராமரிப்பு இல்லாமல் இருக்கு. யாழ்ப்பாணத்தில் முன்பு கோயில் உள்ள இடம் என்றால் அங்கே உண்மையாகவே தூய்மையும் அமைதியும் தெய்வீக மணமும் நிரம்பி வழியும்...ஆனால் உங்கள் இந்தியாவில்...கோயிலுக்கு முன்பாகவே சாராயக் கடை....

Prabhu said...

எல்லாம் அரசியலுக்காக. மதவாதிகளும் அரசியல் பண்ணினா என்ன செய்யுறது. எங்க காலேஜ ஒரு மதத் தலைவன் அபகரிக்க பாத்தான். அதுக்கு பகுத்தறிவு பேசுற ஒரு அரசியல் கட்சியின் பெரிய புள்ளியின் சப்போர்ட் வேற!

Rajeswari said...

மதத்தை பற்றிய ஓர் நல்ல ஆய்வு.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB