சீனாவுடனான போர்களத்திற்கு
சீனியர் நடிகர்களை
அனுப்பிடுவான்.,
கார்கிலில் களேபரமானால்
காத்திராமல் கோடிகள்
கொடுத்திடுவான்.,
இனத்திர்க்கொரு அழிவென்றால்
கட்சிஎனும் போர்வைக்குள்
ஒளிந்திடுவான்,
தன்மான தமிழன்.
*****************************************
ஈழம் வழி, இந்தியாவிலும்
நுழையும்!?
இன அழிப்பு!
தன்மான தமிழன்!?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
//ஈழம் வழி, இந்தியாவிலும்
நுழையும்!?
இன அழிப்பு!//
சாபம் விடாதீங்க அப்பாவி...
இனி அழுது புரள்வதைவிட அரற்றி தூற்றுவதை விட
ஆக வேண்டியதைப் பார்ப்போம்..
அடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்போம்..
இனி ஆகவேண்டியது என்ன இருக்கு தீப்பெட்டி :(((((((((
எதுவுமே முடிவல்ல ...
கஷ்டம் தான்
வருத்தம் தான்
துவண்டு கிடக்க இயலாது ...
இப்பவும் ஒழிஞ்சிக்கிடாங்களே?
// இனி ஆகவேண்டியது என்ன இருக்கு தீப்பெட்டி :((((((((( //
இன்னும் எவ்வளவோ இருக்கு சுப்பு சார்...
இந்த போரில் காயம்பட்ட ஈழ மக்களுக்கும் அனாதையான குழந்தைகளுக்கும் நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும்...
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சமுதாயம் உதவிட நாம் குரல் கொடுக்க வேண்டும்..
ஈழத்தின் இளைய தலைமுறையினர் வருங்காலத்திற்கு உத்திரவாதமளிக்க நாம் நமது அரசையும் உலக சமுதாயத்தையும் நிர்பந்திக்க வேண்டும்..
நாம் தோற்றுவிட்டோம் அல்லது துரோகமிழைத்து விட்டோமென்று சொல்லி தலைகுனிந்து ஈழத்தமிழனை தனித்து விடாதீர்கள்..
அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாதது எனினும் அவர்கள் விரைந்து மீண்டு வருவதில் நமது பங்கு (தமிழிகத்தின்) கணிசமாக இருக்கலாம்..
இன்னுமிருக்கிறார்கள் மக்கள் ஈழத்தில்..
நாளை பொழுது விடியுமென்று...
//இன்னுமிருக்கிறார்கள் மக்கள் ஈழத்தில்..
நாளை பொழுது விடியுமென்று... //
அவர்களையும் முடித்து விடுவானுங்க :(((((
ஒரு ஈழம் படும்பாடு பத்தாதா நண்பரே?
//இன்னுமிருக்கிறார்கள் மக்கள் ஈழத்தில்..
நாளை பொழுது விடியுமென்று//
மிச்சமிருக்கும் மக்களையாவது உடனே காப்பாற்ற வேண்டும்....
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.