214 பேர்களின் வாக்கு யாருக்கு?

இந்தியாவை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் தேர்தல்,

ஈழப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் தேர்தல்,

உலக நாடுகளின் வளர்ச்சிக்கும் மேலான வளர்ச்சியை இந்தியாவில் உறுதிப்படுத்தும் தேர்தல்,

பொருளாதார மந்த நிலையால் இந்தியா தேங்கிவிடாமல் காக்கவந்த தேர்தல்

எனப் பலவகையிலும் இந்தியா வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவை விற்பனை சந்தையாக பாவிக்கும் நாடுகளுக்கும், இந்தியாவை மக்கள் சக்தியாக – உற்பத்திக்கு தோதான இடமாக பார்க்கும் நாடுகளுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல், தமிழகத்தை தழுவ சில மணிநேரமே உள்ளது. அபாயகரமான அரசியல்வாதிகளின் பிரச்சாரமும் நல்லவேளையாக முடிந்துவிட்டது.

ஈழத்தமிழர் படும் துன்பத்தை தடுக்கவும், அவர்களுக்கு மருத்துவ உதவிசெய்வது முதல், போரை நிறுத்துவது வரையிலான தமிழக மக்களின் உணர்ச்சிப்பூர்வ மற்றும் மனிதாபிமான கோரிக்கைகளை தமிழக – இந்திய அரசியல்வாதிகள்,

தேர்தல் தேதி அறிவிக்கும் முன் கையாண்ட விதமும்,

தேர்தலின் அனுக்கத்தில் கையாண்ட விதமும்,

தமிழகத் தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாது, அரசியல்வாதிகளின் மேலிருந்த நம்பிக்கையையும் மொத்தமாக இழக்கவைத்துவிட்டது என்றால் மிகையாகாது.


கடந்த பிப்ரவரி 20 தேதியில் நான் எழுதிய
ஓட்டு போடுவீங்களா?, மாட்டீங்களா? இதில் ஒட்டுப்போடுங்க! என்ற இடுகையில் ஆரம்பித்து வைத்த, இலங்கை பிரச்சனையில் உதவாதவர்கள், நாடாளுமன்ற தேர்தலின் நின்று ஓட்டு கேட்டால், உங்கள் வாக்கு யாருக்கு? என்ற கருத்துகணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட வேண்டிய நேரமிது. கருத்தை பகிர்ந்த 210க்கும் மேற்பட்டவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களின் விருப்பத்தை பார்க்கலாம்!!


முடிவுகளில்,

ஏதாவது ஒரு கொள்ளிக்கு வாக்களிப்பேன் என 20% பேர்கள் தெரிவித்திருந்தனர். அனேகமாக இவர்கள் ஏதாவது ஒரு கட்சிசார்புடையவர்களாகவோ அல்லது ஒரு கட்சியின் தலைமையின் தற்போதைய நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டவர் அல்லது கட்சித் தலைமையின் நடவடிக்கையால் வெறுப்புற்று, எதிர்கட்சியை ஆதரிக்கும் முடிவை எடுத்தவர்களாக இருக்கலாம். எது எப்படியோ என்னுடைய வாக்கினால்தான் இன்னார் வெற்றி பெற்றார் அல்லது தோல்வி அடைந்தார் என சொல்லிக்கொள்வதில் அலாதி ஆனந்தம் அடைபவர்கள்.


ஓட்டுப் போடபோகாமல் வீட்டிலேயே இருப்பேன்,
என 10 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். உண்மையில் தைரியசாலிகள் தான். நாடும், நாட்டு மக்களும் நாசமாக போனாலும் சரி, எனக்கு கிடைத்த ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை சந்தோசமாக அனுபவிப்பேன் எனும் மனோபாவிகளாக இருந்தால், அபாயம் நாட்டிற்குத் தான்.


போட்டியிடும் யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என 49 O -விற்க்கு வாக்களிப்பேன், என மீதம் 70 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேலானோர், வெளிநாடுகளில் பொருளாதார தஞ்சம் புகுந்து வாக்களிக்க முடியாத நிலையில் இருக்கும் தமிழர்களாக இருக்கக்கூடும். அதற்கும் மேலாக சொந்த ஊரில் 49 ஓ –வில் வாக்களிக்கும் தைரியம் இருந்து, ஒரு குறிப்பிட்ட சதவீத அளவில் வாக்களித்தால் மட்டுமே இந்தியத் திருநாட்டில்,

தமிழர்கள் இனமான உணர்வு மிக்கவர்கள் தான், ஆனால் அரசியல்வாதிகள் தான் தரம்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்தியாவுக்கும், உலகிற்கும் தமிழர்களாகிய நாம் எழுப்பும் அறைகூவலாகும்!!!

5 comments:

வால்பையன் said...

சுயேட்சை வேட்பாளுருக்கு ஒட்டு போட்டால் சந்தோசமடைவார்!

ISR Selvakumar said...

பாராளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்துவிடும். ஆனால் உங்கள் தேர்தல் இன்னும் 229 நாட்கள் இருப்பதாகக் காட்டுகிறது. ஏன் அவ்வளவு நாட்கள்?

அப்பாவி முரு said...

//r.selvakkumar said...
பாராளுமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்துவிடும். ஆனால் உங்கள் தேர்தல் இன்னும் 229 நாட்கள் இருப்பதாகக் காட்டுகிறது. ஏன் அவ்வளவு நாட்கள்?//

தேர்தல் சும்மா 8 - 9 மணி நேரம் தான்.,

ஆனால் மக்களின் நியாயமான கோவம் சீக்கிரம் தீரக்கூடியதா??

நசரேயன் said...

//தமிழர்கள் இனமான உணர்வு மிக்கவர்கள் தான், ஆனால் அரசியல்வாதிகள் தான் தரம்கெட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்தியாவுக்கும், உலகிற்கும் தமிழர்களாகிய நாம் எழுப்பும் அறைகூவலாகும்!!!//
உண்மைதான்

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷில் ஓட்டு போட்டாசுங்க..

எதோ என்னால் முடிஞ்சது செஞ்ச்சாசு..

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB