இன்னிக்கி அதிகாலைல திடீர்ன்னு பயங்கரமான கனவு. கனவு பாதி போய்க்கிட்டு இருக்கப்பவே பயந்துபோய் எழுந்துட்டேன், எந்திரிச்சா உடம்பெல்லாம் வேர்த்துப்போய், இதயம் பவுண்ட் ஆகிக்கிட்டு இருந்தது. சுத்தும் முத்தும் பார்த்த பின்னாடி தான் கனவுன்னே தெரிஞ்சு அமைதியானேன். என்ன கனவுன்னா ஸ்கூல்ல எனக்கு பாடம் சொல்லிக்குடுத்த டீச்சர் எல்லாம் குச்சியோட வந்து ’ஏன்டா, ஏதேதோ எழுதுறியே, உனக்கு எழுத்துச் சொல்லிக்குடுத்த எங்களைப்பத்தி நல்லதா நாலு எழுதக்கூடாதா?’ ன்னு குச்சியை காமிச்சு மிரட்டி கேட்க்கவே நான் பயந்து எழுந்துட்டேன்.
ஆனா காலைக்கனவு பலிக்கணுமே(இது வாலுக்காக), அதான் உடனே இந்த இடுகையை எழுதுறேன். என்னோட பால்யம் கொஞ்சம் சுவாரஸ்யமாத்தான் இருக்கும்.
இப்ப என்னோட மூணு வயசுல இருந்து ஆரம்பம்.
0 (பாலர் விடுதி):- ஒன்றை வருசம், (ஆயா பேர் – முகம் நியாபகம் இருக்கு ஆனால் பெயர் மறந்து போச்சு)
ஐய்யோ... வாழ்க்கையில் ரொம்ப சந்தோசமா இருந்த நினைவுகளில் பாலர்விடுதிக்கு (எங்கூருல பால்வாடின்னு தான் சொல்வோம்) ரொம்ப முக்கிய இடம் இருக்கு. அம்மாவால என்னைய வீட்டுல வச்சு சமாளிக்க முடியலைன்னும், அடுத்த வருசம் ஒன்னவதுக்கு அனுப்புறதுக்கு ஒரு பிராக்டிஸா இருக்கட்டும்ன்னும் தான் முதன் முதல்ல பால்வாடில கொண்டுபோய் விட்டாங்க. ஆரம்பத்துல அம்மாவை விட்டு பிரிய பயமா இருந்ததுனால பயங்கரமா அழுதேன், ஆனா அங்க இருக்குற ஆயா இதுமாதிரி அழுது அடம்பிடிக்கும் ஆயிரம் தலையை பாத்திருப்பனதால ரொம்ப ஈஸியா மெரட்டி சமாளிச்சு உக்கார வச்சுட்டாங்க. அப்புறம் பழக்கமாயிடுச்சு. ’நெறைய கேர்ள் பிரண்ட்ஸ் கிடைச்சது’.

காலையில கொஞ்ச நேரம் பாட்டு கத்துக்கணும், அம்மா பதினோரு மணிப்போல வந்து தந்திட்டு போன சாப்பாட்டை மதியம் சாப்பிட்டுட்டு, அப்பிடியே ஒரு தூக்கம் மூணு மணிவரைக்கும். கண்டிப்பாய் தூங்கிதான் ஆகணும், தூங்கலைன்னா அடி விழும். தூங்கி எந்திரிச்சதும் மூணு மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். அப்புறம் என்ன ஜாலிதான்.
ஆயா மெரட்டி உக்கார வச்சாங்களேத் தவிர மத்தபடி ரொம்ப நல்லவங்க. விளையாட நிறைய பொருள்கள் கொடுப்பாங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா நான் பத்தாவது படிக்கிறப்ப நோய்வாய்ப் பட்டு இறந்துட்டாங்க. வருத்தமாப் போச்சு.
1 வகுப்பு, (டீச்சர் பேர் – சரோஜினி டீச்சர்)
அய்யோ., அய்யோ. நான் ஒன்னாவது படிச்ச கதை ரொம்ப பெரிய கதை. டீச்சர் ரொம்ப நல்லவங்கதான், யாரையுமே அடிக்க மாட்டாங்க. ஆனா என்னைய முத வாரத்துலையே வெளுத்து விட்டுட்டாங்க. ஆமா, நாம ஒழுங்கா பள்ளிக்கூடம் வந்தாத்தானே. மொதோ நாளு அம்மா வந்து டீச்சர்கிட்ட சொல்லி விட்டுட்டு போனதும், கொஞ்ச நேரத்துலையே டீச்சருக்கு தெரியாம ஸ்கூலை விட்டு வெளியேறி வீட்டுக்குப் போற கடைத்தெருவில(சுப்ரமணியபுரம் படத்துல, ஜெய்யும், சசியும் ரிக்ஷாகாரங்களோட சண்டை போடுவாங்களே, அதே தெருதான்) எங்கயாச்சும் ஒக்காந்துக்குவேன். கடைக்கு வந்த யாராச்சும் பார்த்திட்டு போய் எங்கம்மாட்ட சொல்றதும், எங்கம்மா வந்து என்னைய கூட்டிகிட்டு போய் 11 மணிக்கு பள்ளிக்கூடத்துல திரும்ப விடுறதும் ஒரு மாசமா நடந்தது. அப்புறம் தான் டீச்சர் நம்மளை முன்னாடி உக்கார வச்சு அப்பப்ப இருக்கானான்னு பாத்துக்குவாங்க.
டீச்சர், க்,ங்,ச் சொல்லிக்குடுத்தது லைட்டா ஞாபகத்துல இருக்கு. (பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)
2 வகுப்பு, ( டீச்சர் யார், என்ன படித்தோம் என்பது ஞாபகத்தில் இல்லை)(அசிங்கமா போச்சு)
3 வகுப்பு, (டீச்சர் பேர் – ஜெசிந்தா மேரி டீச்சர்)
மூணாம் வகுப்புல என்ன படிச்சோம், என்ன செஞ்சோம் என எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனா, இந்த டீச்சர்கிட்டயும் சேட்டை பண்ணி பிரம்புல கை மாத்தி – மாத்தி பத்து அடி வாங்குனதும், டீச்சர் அவுங்களோட மூணு வயசு பொண்ணு(பேர் ’டால்’) கிளாஸுக்கு கூட்டிட்டி வந்ததும் நல்லா ஞாபகத்துல இருக்கு.
(பிரம்புல அடிச்சதை தவிர நல்ல டீச்சர் தான்)
4 – 5 வகுப்பு, (டீச்சர் பேர் – சரஸ்வதி டீச்சர்)
சரஸ்வதிங்கிற பேருக்கு ஏத்த மாதிரியே ரொம்ப நல்லா பாடம் சொல்லித்தருவாங்க, அப்ப அப்ப கதைகளும் சொல்லுவாங்க (அலிபாபாவும், நாற்பது திருடர்களும் படக்கதையை மெகா சீரியல் மாதிரி மூணு நாள் தொடர்ந்து சொன்னாங்க)
நாலாவது படிக்கிறப்ப Butterfly-க்கு ஸ்பெல்லிங் சொல்ல தெரியாததால கொண்டைக்காலுல வரி வரியா அடிச்ச அடி இன்னும் ஞாபகத்துல இருக்கு.

தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு வருத்தம், “எனக்கு கஷ்ட்டப்பட்டு சொல்லிக்குடுத்த எந்த டீச்சருக்கும் நல்லாசிரியர் விருது வாங்காமலையே ரிட்டயர் ஆகீட்டாங்களே” என்ற கவலை மட்டுமே.
ஆகா, என்னோட ஸ்கூல் டீச்சர்ஸ் கேட்டதை எழுத்தினதே இவ்வ்ளோ சுவாரசியமாய் இருக்கே, இதை அப்படியே தொடர் இடுகை ஆக்கி எல்லோரையும் உண்மையை எழுதச்சொன்னா எவ்வ்ளோ ஜாலியா இருக்கும்.
அதனால் நான் இதை பள்ளி ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தொடர் இடுகை ஆக்கி மூன்று பேரை தங்களது சுய சரிதையை எழுத அழைக்கிறேன். அவர்கள்...
1) கோவி. கண்ணன் (காலம்).,
2) கார்க்கி (சாளரம்).,
3) சரவணன்(வேடிக்கை மனிதன்)
மூணு பேருமே எந்த பாலாக இருந்தாலும் கோல் போடும் ஆசாமிகள். அதனால் மழுப்பாமல் சங்கிலித் தொடர் இடுகைக்கு புது வளையம் கோர்க்குமாறு அழைக்கிறேன். சட்ட திட்டமெல்லாம் முன்னர் வந்த சங்கிலி தொடர் இடுகைகளில் இருந்தவை தான் + உண்மையை(சொல்ல முடிந்ததை) மட்டும் சொல்ல வேண்டும்.

22 comments:
ம்...ஆசிரியர்களை மறக்காமல் இருக்கிறீர்கள்...
என்னது இன்னொரு தொடர் விளையாட்டா...அய்யகோ...:-)
நல்லாயிருக்கு உங்க அப்ரோச்!
அப்புரம் உண்மையிலேயே எழுதியிருந்தாலும் படிக்க மாட்டேன் சொல்லிட்டேன்!
அந்த டீச்சர்களுக்கு திறமை பத்தலை, அப்பவே நல்லா செமத்தியா கொடுத்துருந்தா இப்போ இந்த புள்ள இப்படி பண்ணுமா!
ம்..பரவாயில்லையே..ஆசிரியர்களை எல்லாம் மறக்காம ஞாபகம் வச்சிருக்கீங்களே....
எப்படியோ ஒரு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சாச்சா...
நல்லாயிருக்கு
ஐயோ மறுபடியும் சங்'கிலி' தொடரா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
முயற்சிக்கிறேன் !
வெரிகுட்... வெரிகுட்...
இன்னொறு சங்கிலித் தொடர் இடுகையா...
நடக்கட்டும்..
அஸ்திவாரத்தை மற்க்காத தம்பி முரு வாழ்க...
ஏறி வந்த ஏணிப் படியை மறக்காத தம்பி முரு வாழ்க...
பழைய நினைவுகளை ... எங்களை எல்லாம ஞாபகபடுத்திய தம்பி முருகானந்தா சுவாமிகள் (பேரு நல்லா பொருத்தமா இருக்கில்ல..!!) வாழ்க.
// ’ஏன்டா, ஏதேதோ எழுதுறியே, உனக்கு எழுத்துச் சொல்லிக்குடுத்த எங்களைப்பத்தி நல்லதா நாலு எழுதக்கூடாதா?’ //
அதானே... நல்ல டீச்சர்ஸ்.. கனவுல வந்து மிரட்டிட்டுப் போயிட்டாங்க..
// வால்பையன் said...
நல்லாயிருக்கு உங்க அப்ரோச்!
அப்புரம் உண்மையிலேயே எழுதியிருந்தாலும் படிக்க மாட்டேன் சொல்லிட்டேன்!
அந்த டீச்சர்களுக்கு திறமை பத்தலை, அப்பவே நல்லா செமத்தியா கொடுத்துருந்தா இப்போ இந்த புள்ள இப்படி பண்ணுமா!//
டபுள் ரிப்பீட்ட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ம்...ஆசிரியர்களை மறக்காமல் இருக்கிறீர்கள்...
ஆமாங்க லீ...
**********************************
வால்பையன் said...
நல்லாயிருக்கு உங்க அப்ரோச்!
அப்புரம் உண்மையிலேயே எழுதியிருந்தாலும் படிக்க மாட்டேன் சொல்லிட்டேன்!
அந்த டீச்சர்களுக்கு திறமை பத்தலை, அப்பவே நல்லா செமத்தியா கொடுத்துருந்தா இப்போ இந்த புள்ள இப்படி பண்ணுமா!
அண்ணே வால்.,
அவுங்க எல்லாம் அதுக்கு தான் அடிச்சாங்க, ஆனா இந்த புள்ள அதயெல்லாம் தாண்டி உசுரு புடிச்சு வந்திரிருச்சு.
உங்களௌயெல்லாம் (எழுதியே) கொல்ல...
******************************
Rajeswari said...
ம்..பரவாயில்லையே..ஆசிரியர்களை எல்லாம் மறக்காம ஞாபகம் வச்சிருக்கீங்களே....
எப்படியோ ஒரு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சாச்சா...
நல்லாயிருக்கு
கொசுவத்தியா?????
ஆவ்வ்வ்வ்வ்
என்னோட பீளிங்ஸ்மா!!!
ஐயோ மறுபடியும் சங்'கிலி' தொடரா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !
முயற்சிக்கிறேன் !
அண்ணே கிலி தொடரெல்லாம் இல்லை.
******************************
இராகவன் நைஜிரியா said...
பழைய நினைவுகளை ... எங்களை எல்லாம ஞாபகபடுத்திய தம்பி முருகானந்தா சுவாமிகள் (பேரு நல்லா பொருத்தமா இருக்கில்ல..!!) வாழ்க.
ஐ ராகவன் அண்ணன் வச்ச புது பேரு முருகானந்தா,
நல்லாதான் இருக்கு.
இந்த காலை சுத்துன பாம்பு எல்லா தமிழ் பதிவர்களையும் கொத்தணும், அதை படிச்சு எல்லோரும் சிரிக்கணும் என்பதுதான் என்னோட ஆசை!!!
ரைட்டு.. எழுதிடுவோம். கொஞ்சம் டைம் கொடுங்க பாஸ்...
பெயர் மறந்தாலும்
நிகழ்வுகள் ஞாபகம் இருக்கு
நல்ல ஞாபகசக்தி தான் தங்களுக்கு.
பரவாயில்லயே பால்வாடி யெல்லாம் ஞாபகம் வச்சு இருக்கீங்களே..
5-வதுக்கு மேல அடுத்த பாகம் எப்போ?
நல்லா இருக்கு அண்ணே
பழைய நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்துக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த நண்பர் முருவிற்கு என் நன்றி
ரைட்டு.. எழுதிடுவோம். கொஞ்சம் டைம் கொடுங்க பாஸ்...//
அது தான் கார்க்கி, நேரம் தேவையான அளவு எடுத்துகங்க, ஆனா கோவியார் பதிவு போட்டுட்டார்.
*********************************
நட்புடன் ஜமால் said...
பெயர் மறந்தாலும்
நிகழ்வுகள் ஞாபகம் இருக்கு
நல்ல ஞாபகசக்தி தான் தங்களுக்கு.
இல்லைண்ணே,
படிச்சதெல்லாம் ஞாபமில்லை,
டீச்சர் அடிச்சது தான் ஞாபகத்தில் இருக்கு.
***********************************
தீப்பெட்டி said...
பரவாயில்லயே பால்வாடி யெல்லாம் ஞாபகம் வச்சு இருக்கீங்களே..
5-வதுக்கு மேல அடுத்த பாகம் எப்போ?
ஐடியா இருக்கு எழுதணும். ஆனா இப்ப இல்லை.
**********************************
தேனீ - சுந்தர் said...
நல்லா இருக்கு அண்ணே
நன்றி சுந்தர் அண்ணே.,
***********************************
வேடிக்கை மனிதன் said...
பழைய நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்துக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த நண்பர் முருவிற்கு என் நன்றி
ஆங், இது தான் பொழைக்கிற பிள்ளைக்கு அழகு.,
http://cheenakay.blogspot.com/2007/11/5.html
என்னுடைய கொசுவத்தி
ம்ம்ம் - திரும்ப ஒரு முறை சுத்த வச்சதுக்கு நன்றி முரு
நல்லாத்தான் ப்டிச்சிருக்கே அந்தக் காலத்துலே - பேரு மறந்தாலும் ஆயா மூஞ்சி மறக்கலே இல்ல
ஐயோ.... நம்ம தோட்டத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்.... (ஹி.....ஹி.......)
ஆரம்பிச்சிடீங்களா சங்கிலி தொடரை வாழ்த்துகள்.
உங்கள் பால்ய அனுபவம், சொல்லிகொடுத்த ஆசிரியரின் ஞாபகம் நல்லா இருக்கு.... நான் படிக்கும்பொழுது பாலர் பள்ளி எல்லாம் இல்லை.. ஆனால் சும்மா போவோம்
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.