நா(ஸ்)த்தீகம்.




பெரியார், கடவுள் மறுப்பை பேச ஆரம்பித்து நூறு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. கடவுளை மறுப்பதாக வெளியே கூறித் திரிந்தாலும், அவரின் முழு நோக்கம் அல்லது மறை பொருள் யாதெனில் தீண்டாமையெனும் தீயை வளர்க்கும் ஜாதியை ஒழித்தலே ஆகும்.


எழுத்தறிவும், சரியான சிந்தனைத் திறனும் இல்லாத அன்றைய மக்களிடையே நேரடியாக ஜாதி வேறுபாடு இல்லை, எல்லா ஜாதி மக்களும் சமம் என பிரச்சாரம் செய்தாலோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் அதை செவிமடுப்பதாகத் தெரிந்தாலோ பணம் படைத்த கிராம பெரும் தனக்காரர்களால் ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பின் மூலம் பெரும்நெருக்கடி கொடுத்து அவர்தம் ஜாதி ஒழிப்பு ஆசைகளை அடியோடு அழித்துவிடுவார்கள், அதிகாரம் கொண்டவர்கள் என்பதாலேயே பெரியார் கடவுள் மறுப்பின் மூலம் ஜாதி வேறுபாட்டை ஒழிக்க நினைத்தார்.


அதற்காக இந்து மக்களின் புராண, இதிகாச கதைகளிலும், வாய்வழி தெய்வக் கதைகளிலும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அதில் பல கேள்விகளிக்கு விடை இல்லாததை மக்களுக்கு விளக்கி, குருட்டுத்தனமாக இந்து மதத்தையும், அதில் உள்ள ஜாதி வேறுபாட்டை அகற்றவும் முனைந்து சிறிதளவு வெற்றியும் பெற்றார்.


ஆனால் பெரியார் காலமாகி முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த ஜாதி வேறுபாடுகள் துளியும் அசைவில்லாமல் மக்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளதே என்ன காரணம்? உண்மையிலேயே அதை அழிக்கவே முடியாதா? என கேள்விகளை சுயமாகக் கேட்டுக் கொண்டால் கிடைக்கும் பதில், இன்றய தலைமுறை இளைஞர்களுக்கு பெரியாரின் எழுத்துகள் முழு அளவில் போய்ச் சேராதது தான், முக்கிய காரணமாகும். தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களிலும் பெரியாரின் எழுத்துகள் அடங்கிய புத்தகங்களைத் தேடினாலும் கிடைக்காத அளவிலேயே உள்ளது.


அடுத்ததாக, பெரியார் சொன்னதற்காக காலமெல்லாம் கருப்புச் சட்டடை அணிந்தவர்களும், ’ஐ’ என்பதை ’அய்’ என்று எழுதுபவர்களும், காலம் காலமாக கடவுள் மறுப்பு பேசியவர்களும் கூட தன் வீட்டு திருமணத்தின் போது சொந்த ஜாதியில் தான் பெண்/ஆண் எடுக்கிறார்கள்.


கடவுள் மறுப்பு வாதம் – விவாதத்தில் ஈடுபடும் கடவுள் மறுப்பாளர்கள், தங்கள் சொந்த நவீனக் கருத்தை முன்வைக்காமல் 1940 - 50களில் பெரியார் சொன்ன வாசகங்களை பகுதி, பகுதியாக பிரித்து சாதாரண மக்களுக்கு புரியாதபடி முன் நிறுத்துகின்றார்கள்.


இப்படிப் போனாதால் தான் கடவுள் மறுப்பு எனும் நாத்தீகம் மெல்ல, மெல்ல நாஸ்தீகம் ஆகி நிற்கிறது. யார் இனி இதை முன்னிருத்தப் போகிறார்? ஜாதியை ஒழிக்கப் போவது யார்?

25 comments:

பழமைபேசி said...

இல்லாத ஒன்னை இருக்குன்னு சொல்றவங்க இல்லன்னு சொன்னா எல்லா சரியாயிடும்!

Raju said...

பெரியாரையே, ஜாதிப் பெயரைக் கூறி குறிப்பிடும் நம் நாட்டிலாவது, ஜாதி ஒழியுறதாவது...?
:(

சி தயாளன் said...

உங்கள் வாதத்துடன் சில விதங்களில் உடன்படுகிறேன்.

உங்கள் நாட்டில் கட்சிகளும் அரசியலும் நடப்பதே சாதியை சொல்லி தானே..பிறகு எப்படி ஒழியும்..? ஒழிக்க விடுவார்கள்...?

Rajeswari said...

சாதி என்பது நம் சமூகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக புரையோடிப்போன ஒன்று..அதை ஒரு சில நூறு ஆண்டுகளில் மாற்றுவது என்பது மிககடினம்.ஆனால் முந்தைய தலைமுறையை பார்க்கும் போது,இன்று எவ்வளவோ மாறியிருக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்..முற்றிலும் மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.இன்றுவரை வந்திருக்கும் மாற்றத்தை கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது.

வால்பையன் said...

//பெரியார், கடவுள் மறுப்பை பேச ஆரம்பித்து நூறு ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. கடவுளை மறுப்பதாக வெளியே கூறித் திரிந்தாலும், அவரின் முழு நோக்கம் அல்லது மறை பொருள் யாதெனில் தீண்டாமையெனும் தீயை வளர்க்கும் ஜாதியை ஒழித்தலே ஆகும்.//


வேலியோரம் இருக்கும் மரத்தில் விஷகனிகள் வளர்கிறது. அதை சாப்பிடம் உயிரினங்கள் அதை தடுக்க அப்பப்ப கிளைகளை மட்டும் வெட்டுவீர்களா அல்லது மரத்தை வேறோடு அழிப்பீர்களா?

சாதி பாகுபாடுகளுக்கு மூலக்காரணமே கடவுளும், மதமும் தான்
கடவூலை அழிக்காமல் எங்கிருந்து இதை அழிப்பது!

அப்பாவி முரு said...

வாங்க பழமைபேசி.,

கடவுளையா? இல்லை ஜாதியையா?

******************************

டக்ளஸ்....... said...
பெரியாரையே, ஜாதிப் பெயரைக் கூறி குறிப்பிடும் நம் நாட்டிலாவது, ஜாதி ஒழியுறதாவது...?
:(

அவநம்பிக்கை வேண்டாம் டக்ளஸ் அண்ணே...

முயற்சி எடுக்கணும்.

**********************************

’டொன்’ லீ said...
உங்கள் வாதத்துடன் சில விதங்களில் உடன்படுகிறேன்.

உங்கள் நாட்டில் கட்சிகளும் அரசியலும் நடப்பதே சாதியை சொல்லி தானே..பிறகு எப்படி ஒழியும்..? ஒழிக்க விடுவார்கள்...?

ஆமாம் டொன் `லீ`

வாக்களிக்கும் போது, இனத்தானைப் பார்க்காமல் நல்லவனைப் பார்த்து வாக்களித்தால் நலம்.

ஆனா, திருமங்கலத்தில் நிப்பாட்டின மாதிரி எல்லா கட்சிக்காரனும் ஒரே ஜாதியாளை நிப்பாட்டினா?

**********************************

Rajeswari said...
வந்திருக்கும் மாற்றத்தை கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது.

அலுமினிய முலாம் பூசினதை விடுத்து, வெள்ளி முலாம் பூசியிருக்காங்க அவ்வளவுதான்.

**********************************

வால்பையன் said...

வேலியோரம் இருக்கும் மரத்தில் விஷகனிகள் வளர்கிறது. அதை சாப்பிடம் உயிரினங்கள் அதை தடுக்க அப்பப்ப கிளைகளை மட்டும் வெட்டுவீர்களா அல்லது மரத்தை வேறோடு அழிப்பீர்களா?

சாதி பாகுபாடுகளுக்கு மூலக்காரணமே கடவுளும், மதமும் தான்
கடவுளை அழிக்காமல் எங்கிருந்து இதை அழிப்பது!//

அண்ணே, அது அந்த மரத்தோட கனியா? இல்லை அதை சுற்றி படந்திருக்கும் கொடியோட விஷக் கனியா? -ன்னு நல்லாப் பாருங்க.

வேடிக்கை மனிதன் said...
This comment has been removed by the author.
வேடிக்கை மனிதன் said...

மனிதனிடம் இருந்து தான் மதங்கள் வந்தது, அதன் பின் மதங்களிலிருந்து கடவுளும் ,சாதியும் வந்தது.
ஒவ்வொரு தனிமனிதனும் கடவுள்,மத நம்பிக்கை அழிய வேண்டும் என்று நினைத்தாலொழிய சாதியை ஒழிக்க முடியாது.

தேசப்பிதாவே சாதிகள் ஒழிய வேண்டும், ஆனாலும் நாலுவர்ணப் பிரிவு இருக்க வேண்டும் என்றார். பிறகு எப்படி சாதி மதங்களை ஒழிப்பது.

அது சரி, நீங்கள் சாதி மதங்களை எதிர்ப்பவரா? முதலில் அதைச் சொல்லுங்கள்.

உங்களுக்கு உங்க சாதி அமைப்பிலே பெண் தேடுவதாக கேள்விப்பட்டேனே உண்மையா?

அறிவிலி said...

அப்போ இந்த "காலத்துல" வர்றதெல்லாம் இதப்பத்தி இல்லியா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜாதி என்பது மனிதன் தன் சுயலாபத்துக்காக வைத்துக் கொண்டான் .

இதுக்கு முக்கிய காரணம்
ம‌க்க‌ளின் அறியாமை

ப்ரியமுடன் வசந்த் said...

கலப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும்போது மட்டுமே ஜாதி ஒழியும்.....

கோவி.கண்ணன் said...

தம்பி,

பெரியாரால் சாதி அழிந்ததா இல்லையா என்று பார்பதைவிட, சாதிப் பெருமை பேசுபவர்கள் அடங்கிவிட்டார்கள் அல்லது குறைந்துவிட்டார்கள் என்று கொள்ளலாம் அல்லவா ?

முன்பு போல் யாரையும் சாதியைச் சொல்லி தாழ்த்த முடியாது. மீறினால் வன்கொடுமை சட்டம் பாயும் :)

உயர்வகுப்போ, தாழ்த்தப்பட்ட வகுப்போ ஒரு ஊரில் பெரும்பான்மை இருந்தால் அவர்கள் வைத்தது தான் சட்டம். :) யாரும் சளைத்தவர்கள் அல்ல என்றாகிவிட்டது

அப்பாவி முரு said...

// வேடிக்கை மனிதன் said...

அது சரி, நீங்கள் சாதி மதங்களை எதிர்ப்பவரா? முதலில் அதைச் சொல்லுங்கள்.//

ஜாதிபேஅரிச் சொல்லி வேறுபடுத்துவதை எதிர்ப்பவன்.

**********************************

//அறிவிலி said...
அப்போ இந்த "காலத்துல" வர்றதெல்லாம் இதப்பத்தி இல்லியா?//

அண்ணே, நான் ’உண்மை’யைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்.

**********************************

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஜாதி என்பது மனிதன் தன் சுயலாபத்துக்காக வைத்துக் கொண்டான் .

இதுக்கு முக்கிய காரணம்
ம‌க்க‌ளின் அறியாமை//

இப்ப லாபமே இல்லாமலேயே அதைப்பிடித்து வைத்திருக்கிறான்.

********************************

// பிரியமுடன்.........வசந்த் said...
கலப்பு திருமணங்கள் அதிகம் நடைபெறும்போது மட்டுமே ஜாதி ஒழியும்.....//

ஆமாம் ஒழியும்.

*********************************

// கோவி.கண்ணன் said...
தம்பி,

பெரியாரால் சாதி அழிந்ததா இல்லையா என்று பார்பதைவிட, சாதிப் பெருமை பேசுபவர்கள் அடங்கிவிட்டார்கள் அல்லது குறைந்துவிட்டார்கள் என்று கொள்ளலாம் அல்லவா ?//

அதுமட்டும் போதுமா என்பதே எனது கேள்வி

ஆ.ஞானசேகரன் said...

//இன்றய தலைமுறை இளைஞர்களுக்கு பெரியாரின் எழுத்துகள் முழு அளவில் போய்ச் சேராதது தான், முக்கிய காரணமாகும். //

இதில் ஒரு நடைமுறை சிக்கலில் இருக்கின்றது. பெரியாரிசம் பேசிகொள்பவர்கள் அதையே துருபிடித்தது போல பேசி கொண்டு செயல் வடிவம் இல்லாமல் இருப்பதுதான்...

ரெட்மகி said...

என்னைக்கு கோயில் கட்டுறதா நிறுத்திட்டு ,நூலகம்
கட்ட மக்கள் முன் வராங்களோ

அன்னைக்கு சாதியும் ஒழியும் சமத்துவமும் பிறக்கும்

(தமிழ்நாடு அரசின் சமத்துவபுரம் பயங்கரமான தமாஷ் ஐடியா )

krish said...

பெரியாரை பற்றி நம் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது என்னவென்றால்,
"பெரியாரின் இயற்பெயர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்"
ஆயிரம் பெரியார் வந்தாலும் ரத்தத்துடன் கலந்த ஜாதி ஒழியாது, ஒழிக்கவும் முடியாது. ஜாதி வெறி, மூட நம்பிக்கை ஒழிந்தால் போதும். அப்போது ஜாதி ஒழிய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

மற்ற மாநிலங்களின் ஒப்பிடும் பொழுது விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகம் என்று நினைக்குறேன் அதுக்கு காரணம் பெரியார் என்று சொன்னால் அது தான் உண்மை. :)

***
காலத்துக்கு ஏற்ப கருத்த மாத்தாமல் இருந்தால் அது குப்பையாக கருதப்படும் -:)

***

தமிழ் ஓவியா said...

அன்புத் தோழருக்கு வணக்கம்.
அருள்கூர்ந்து http://thamizhoviya.blogspot.com. வலைப்பதிவுகளை படிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

Gifariz said...

ஜாதியை ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழி தான்....

எல்லோரும் "குர்ஆன்" ஐப் படிக்க வேண்டும், விளங்க வேண்டும்

"" கடவுள் என்றொன்று இல்லை 'அல்லாஹ்' வைத் தவிர, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனுடைய (அல்லாஹ்வுடைய) தூதராவார் ""

வால்பையன் said...

// Gifarz said...
ஜாதியை ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழி தான்....
எல்லோரும் "குர்ஆன்" ஐப் படிக்க வேண்டும், விளங்க வேண்டும்
"" கடவுள் என்றொன்று இல்லை 'அல்லாஹ்' வைத் தவிர, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனுடைய (அல்லாஹ்வுடைய) தூதராவார் ""//


இதுக்கு தான் சொல்ரது முரு,
சாதிகள் ஒழியனும்னா கூடவே கடவுளும் ஒழியனும்னு, பார்த்திங்களா இங்க ஒருத்தர் வந்து பத்த் வைக்கிறார்!

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையாமா?
சியா, சன்னின்னா என்னாங்க தலைவா?
பட்டாணி,ராவுத்தர்ன்னா என்னாங்க தலைவா?

அப்பாவி முரு said...

// ஆ.ஞானசேகரன் said...

இதில் ஒரு நடைமுறை சிக்கலில் இருக்கின்றது. பெரியாரிசம் பேசிகொள்பவர்கள் அதையே துருபிடித்தது போல பேசி கொண்டு செயல் வடிவம் இல்லாமல் இருப்பதுதான்...//

செயல்வடிவம் இல்லையா???
ஆவ்வ்வ்வ்வ்.,

தமிழ்நாட்டோட ஆட்சி அதிகாரம் பெரியாரின் சீடர்களிடம் தானே ரொம்பக்காலமா இருக்கு, பத்தாதா?

*********************************

// ரெட்மகி said...
என்னைக்கு கோயில் கட்டுறதா நிறுத்திட்டு ,நூலகம்
கட்ட மக்கள் முன் வராங்களோ

அன்னைக்கு சாதியும் ஒழியும் சமத்துவமும் பிறக்கும்

(தமிழ்நாடு அரசின் சமத்துவபுரம் பயங்கரமான தமாஷ் ஐடியா )//

இருக்கிற நூலகத்தையும் சரியாப்ப் பார்த்துகிறதில்லை, இருக்கிற கோவிலையும் சரியாப் பார்த்துகிறதில்லை, இதுல புதுசா நூலகமா, வேணும்ன்னா இன்னும் கொஞ்சம் சமத்துவபுரங்களை
ஊர் தோறும் கட்டலாம், ஜாதி ஒழியும்!!

******************************

// Krishnan said...
/,
"பெரியாரின் இயற்பெயர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்"

ஜாதி வெறி, மூட நம்பிக்கை ஒழிந்தால் போதும். அப்போது ஜாதி ஒழிய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.//

ஏது மஞ்சள் துண்டைச் சொல்கிறீர்களா?

*******************************

// பித்தன் said...
காலத்துக்கு ஏற்ப கருத்த மாத்தாமல் இருந்தால் அது குப்பையாக கருதப்படும் -:)//

குப்பையாகத்தான் ஆகிருச்சு...

*********************************

// தமிழ் ஓவியா said...
அன்புத் தோழருக்கு வணக்கம்.
அருள்கூர்ந்து http://thamizhoviya.blogspot.com. வலைப்பதிவுகளை படிக்க வேண்டுகிறேன்.

நன்றி.//


ஐய்யா, தமிழ் ஓவியாவின் தொடர் வாசகன் தான். ஆனால், கருத்துகள் போரடிக்கின்றன...


******************************

கபிலன் said...

நம்ம எல்லோருக்கும் ஒரு வித்தியாசமான ஆசை. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு சொல்லுவாங்க. இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு, இதுக்கெல்லாம் நமக்கு ஜாதி தேவைப்படும். நாமும் கமுக்கமா, நம்முடைய அப்ளிகேஷன் ஃஃபார்ம்ல நிரப்பிக்குவோம். ஆனா பேச்சு வாக்குல ஜாதி ஒழியனும்னு கூச்சல் போடுவோம். எப்போ எல்லோரும் வசதி அடிப்படையில் ஓரளவுக்கு நல்ல சம நிலை அடைகிறார்களோ, அப்போது பள்ளி, கல்லூரி, வேலை அப்ளிகேஷன் ஃபார்மில் இருந்து ஜாதி என்ற பிரிவை நீக்க வேண்டும். நமக்கெல்லாம் முழு ஜாதி பெயர் தெரிந்ததே இந்த மாதிரி ஜாதி பெயரை நிரப்பும் போது தான். கடவுளை அழிப்பதின் மூலம் ஜாதி நீங்காது!

ரெட்மகி said...

நாம் கல்வி பயில ,வேலை வாய்ப்பு போன்றவற்றுக்கு
சாதி சான்றிதழ் அவசியம் .... இதுவும் சாதி நம்மிடம்
அழியாமல் இருப்பதற்கான காரணம்...

சாதியை ஒழிக்க கலப்பு திருமணம் தான் வழி
என்று பரவலான கருத்து இருக்கின்றது , ஆனால் அது
எத்தனை தூரம் உண்மை ???
கலப்பு திருமணம் செய்து கொண்டாலும் ,பிறக்கும்
குழந்தயை பள்ளியில் சேர்க்க மீண்டும் எதாவது
ஒரு சாதி முத்திரை வேண்டும் (அப்பா அல்லது அம்மாவின் சாதி )
அப்போது எப்படி சாதி ஒழியும் ???

அப்படி கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களும் ,சாதி தங்களுக்கு
வேண்டாம் என்பவர்களுக்கும் தனியே ஒரு சான்றிதழ்
அரசு வழங்க வேண்டும் ,FC,SC,BC,MBC,ST போன்று NC(NO CAST)
என்று புதியதாய் ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும் ...
அப்போது இட ஒதிக்கீடு போன்ற பிரச்சனைகள் எழும்....
அதை அரசு நடைமுறை சிக்கல்
இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் ....

அப்போது சாதி மெல்ல சாகும் ...

இல்லை எனக்கு ஒரு சாதி முத்திரை வேண்டும் ஆனால்
சாதியும் ஒழிய வேண்டும் என்பது ...
வடிவேல் சொல்வது போல் ""என்ன சின்னபுள்ளதனமா இருக்கு ""

சமத்துவபுரம் மூலம் சமத்துவம்
வந்திடினில் ,இந்நேரம் சமத்துவபுரம் உள்ள
ஊரிலேனும் சமத்துவம் மலர்ந்திருக்க வேண்டும்
ஆனால் ஒரு மாற்றமும் இல்லை.

அப்பாவி முரு said...

நன்றி கபிலன்.,

நன்றி ரெட்மகி...

அருமையான கருத்துக்கள். நடைமுறையில் உள்ளதைத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள்.

வால்பையன் said...

நான் சாதி சான்றிதழ் தரவில்லை,
தரமுடியாது என்றும் சொல்லிவிட்டேன்,
அவசியம் என்றால் கோர்ட்டில் கேஷ் போடுகிறேன், பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்!

நான் வளர்ந்த குழந்தையை நான் தான் வளர்க்க வேண்டும், மார்க் குறைவா எது கிடைக்குதோ அதை படிக்கட்டும், டாக்கருக்கு தான் படிக்கனும் அதுக்கு தாழ்ந்த சாதி சான்றிதழ் இருந்தால் போதும் என்றால், எல்லோரும் தம்மை தாழ்ந்த சாதியாக அறிவிக்க சொல்லுவான்!

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB