இந்தியாவில் இந்த கம்யுனிஸ்ட் கட்சி ஆட்கள் செய்யும் அட்டகாசத்தால் கம்யுனிஸ்ட் என்ற வார்த்தையே நகைப்புக்குரியதாகி விட்டதே.
கம்யுனிஸ்ட்களே நீங்கள் ஏன் இன்னும் கட்சி நடத்துகிறீர்? தயவு செய்து சங்கமாகுங்கள்!
கட்சிக்கும், சங்கத்திற்கும் சில பல வித்யாசங்கள் உள்ளன.
கட்சி என்றால் ஒட்டு வாங்கி சில சீட் பிடித்து நாடாளு, சட்ட மன்றங்களில் தாத்தாகளோடு, தாத்தாக்களோடு உட்காரலாம்.உட்கார்ந்து பழங்கதைகளை பல்லு சுளுக்குமளவுக்கு பேசலாம்.
கட்சி என்றால் சில சீட்களுக்காக ஒரு தேசிய கட்சியின் பொது செயலாளர், சென்னை வந்து ஒரு மாநில கட்சியின் பொது செயலாளரை அவரின் வீட்டுக்கே சென்று சந்தித்து கூட்டணியை உறுதி படுத்தவேண்டி இருக்கிறது. நல்ல வேலை அம்மா வழக்கத்திற்கு மாறாக கம்யுனிஸ்ட் தோழர்களை வீட்டுக்குள் விட்டிருக்கிறார். ( இதுவே கம்யுனிஸ்ட் தோழர்களுக்கு மிகபெரிய வெற்றி தான்)
கூட்டணி உறுதியாகி விட்டது, தேர்தல் முடிந்து தோழர்கள் நின்ற தொகுதிலேல்லாம் ஒருவேளை வெற்றிபெற்றாலும், தோழர்களால் சட்டமன்றத்திலோ, பாரளுமன்றதிலோ என்ன சாதிக்க( புடுங்க ) முடியும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்றத்திலும், இரண்டாண்டுகளாக சட்டமன்றத்திலும் கூட்டணி கட்சியாகவும், கடந்த மூன்று மாதங்களாக எதிர் கட்சியாகவும் என்ன சாதிக்க (புடுங்க) முடிந்தது. இதற்க்கு முன்பாவது ஆட்சிகளையாவது கலைக்க முடித்தது. இந்த முறை அதையும் சாதிக்க (புடுங்க) முடியவில்லை . ( இங்கே புடுங்க என்பதை களைஎடுக்க என்று அர்த்தம் பண்ணவும்)
ஏன் இந்த சீட் ஆசை. அப்படி சீட்டினை வைத்து ஏதேனும் கள்ளத்தனமாக ஒரு ரூபாயாவது சம்பாரித்து இருக்கிறீர்களா எண்டாலும் இல்லையே? பின் ஏனிந்த சீட் ஆசை.
கட்சி நடத்த பல விசயங்களை மறக்க வேண்டிருக்கிறதே. மக்களையும் உங்களோடு சேர்ந்து எல்லாவற்றையும் மறக்க சொல்கிறீரே. தோழர்களை வீட்டு வாசலில் நிற்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பினார்களே அதையுமா மறப்பது. அது உங்களுக்கு அனுபவமாக இருக்கலாம், எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது.
கூட்டணி என்றாலும் ஏன் பாவம் பாரதீய ஜனதாவை மட்டும் விட்டுவிட்டீர்? அவர்களோடும் கூட்டணி வைத்து வெளியேறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வட்டமும் முழுமையாகி இருக்கும்.
கட்சி என்றால் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு பெறவேண்டும். எங்கேயும் தனியாக வெற்றிபெற முடியாது அல்லது குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளையும் பெற முடியாது. அதற்காக தான் இந்த கூட்டணி என்றால் ஏன் இந்த கட்சி என்ற கோமாளித்தனம்.
இதில் தா.பாண்டியன் இந்த கூட்டணியை ஒரு கேள்வி-பதிலில் மேலும் நம்மை கேளியாக்கியுள்ளார்.
கேள்வி- தேர்தலுக்கு பின் ஜெ. -ப.ஜ.காவுடன் சேரமாட்டார் என்று உறுதி வாங்கிவிட்டீரா?
தா.பாண்டியன் பதில்- அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதியை மக்கள் வீண்டுமானால் நம்பலாம், நாங்கள் நம்ப மாட்டோம்.
இதன் அர்த்தம் என்ன?
மேலும் அவர் கூறுகிறார்,தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் அண்ணா.தி.மு.காவுடன் உறவு கொள்வதாக கூறுகிறீர், அந்த அளவுகோலை வைத்து பார்த்தால், ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் தேர்தலை சந்திக்க வேண்டிவரும்.- தொழிலாளர் விரோத கட்சியுடன் கூட்டு சேர ஒரு காம்ரேட் வாயில் வரும் வார்த்தைகளை பாருங்கள்.
இதே சங்கம் என்றால் மக்களோடு மக்களாக, மக்களின் பிரச்சனைக்காக போராடலாம். இந்த ஓட்டு, குறைந்தபட்ச சதவீதம் என்ற பிரச்சினையே இல்லையே . கூட்டணி கட்சிக்காக நமது கொள்கைகளை விட்டுத்தர வேண்டியதில்லையே. குறிப்பாக யார் வீட்டு வாசலிலும் காத்திருக்க வேண்டியதில்லையே.
மற்ற கட்சியினர் ஆட்சிகட்டிலில் ஏறி அமர நாம் ஏன் ஏணியாக வாழவேண்டும்.மற்ற கட்சியினரை தூக்கிசுமக்கும் கழுதையாக எனிருக்க வேண்டும். எங்காவது யாராவது ஆட்சியில் தான் பங்கு தருவார்களா? பின் ஏன் இந்த கட்சி அவதாரம், அரிதாரம்.
கேவலம் இந்த ஓட்டுக்காக கம்யுனிசம் என்ற சித்தாந்தத்தை இன்றைய அரசியல் சாக்கடையில் கலக்க விட்டீரே.
கொள்கைக்காக உயிரையும் விடலாம், பிழைப்பிற்காக கொள்கையை விட்டுதரலாமா?
எல்லோருடைய மனதிலும் ஒரு கம்யுனிஸ்ட் இருக்கிறான். அதை அந்த ஆத்மாவை அழிக்காமல், கருக்காமல் அதை சுக பிரசவமாக வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிறுவயதில் கம்யுனிசம்,கம்யுனிஸ்ட் என்றால் கேட்டு, படித்து வளர்ந்ததுக்கும், கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக நமது கம்யுனிஸ்ட் தோழர்கள் அடிக்கும்
கூத்துக்களால் கம்யுனிஸ்ட் சிங்கத்தை அசிங்கப்படுத்தி விட்டார்களே?
இல்லை நான் தான் கம்யுனிஸ்ட் என்றால் கொள்கைக்காக, மக்களுக்காக என்று தப்பாக நினைத்துவிட்டேனா?
மிச்சர்கடை
4 weeks ago
5 comments:
//கேவலம் இந்த ஓட்டுக்காக கம்யுனிசம் என்ற சித்தாந்தத்தை இன்றைய அரசியல் சாக்கடையில் கலக்க விட்டீ//
சரியா சொன்னீங்க சகா.. எனக்கு கம்யூனிஸீத்தின் மீது நம்பிக்கையுண்டு. ஆனா கம்யூனிஸ்ட்கள் மீது சுத்தமா இல்ல
//கேவலம் இந்த ஓட்டுக்காக கம்யுனிசம் என்ற சித்தாந்தத்தை இன்றைய அரசியல் சாக்கடையில் கலக்க விட்டீ//
சரியா சொன்னீங்க சகா.. எனக்கு கம்யூனிஸீத்தின் மீது நம்பிக்கையுண்டு. ஆனா கம்யூனிஸ்ட்கள் மீது சுத்தமா இல்ல///
வாங்க கார்க்கி.
எல்லோருடைய மனதிலும் ஒரு கம்யுனிஸ்ட் இருக்கிறான் என்பதே என் எண்ணம்.
பார்ப்போம் நம்ம காம்ரேட்கள் இந்த கம்யுனிசத்தை இன்னும் எப்படியெல்லாம் கேவலப் படுத்துகிறார்கள் என்று
Its really shocking (but speculated)to see comrades joining hands with AIADMK...
I agree with you muru, "In everyone's heart,there is a communist", comrades have many other business to do than to bring these people out.
Anyway, you have nicely come up with your thoughts...well done.keep it up
அது மட்டுமல்ல நண்பரே,அணு ஆயுத ஒப்பந்தத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் ஆட்சியை கலைப்பார்களாம்.ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விஜயகாந்திடம் தொகுதி பங்கீடு பத்தி பேசுவாங்களாம்.
மத வெறியை எதிர்ப்பாங்களாம்.ஆனால் ஊழலில் சுப்ரீம் கோர்ட்டால் கண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பார்களாம்.மக்களை என்ன முட்டாளுங்கன்னு நெனச்சிகிட்டங்களா?
அவர்களை முட்டாளாக்க மக்கள் ரெடி......
ஓட்டுக்காக இப்படி குறுக்கொடிய பல்டி அடிக்க வேண்டியதில்லை.
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.