வாழ்ந்தவர் கோடி,
என்னை கவர்ந்த தலைவர் M. G. R
சாதாரண நடிகராக இருந்தபோதே தனக்கென தனி பாதை வகுத்துக் கொண்டு, முடிந்தளவு அதைவிட்டு வெளிவராமல் நடித்தவர்.
திரையிலும், வெளியிலும் அவரது கொள்கைகள்
* தாயிடம் (கண்ணம்மாள், பண்டரிபாய்...) மிகுந்த பாசம், தாயின் சொல்லை தட்டதாதவராகவே நடிப்பார்.
*நல்ல சுறுசுறுப்பும், துறுதுறுப்பும் கொண்டவராக இருப்பார்.
*ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு பகுத்தறிவு பாடலாவது இருக்கும்.( பாடலாசிரியர் பாடல் எழுதும் போது உடனிருந்து வார்த்தைகளை மிகமிக கவனமாக தேர்ந்தேடுத்துக்கொள்வார் )
*மது அருந்தும்படி நடிக்க மாட்டார். ( ஒளிவிளக்கில் மட்டும் மது அருந்தியவராக ஒரு பாட்டு மட்டும்)
* இ பிடித்தபடி நடிக்க மாட்டார் ( இரண்டு படங்களில் மட்டும் புகையுடன் தோற்றம்)
*எல்லா படங்களிலும் நல்லவனாக வந்து ஊருக்கு தொண்டு செய்வார்.
*கெட்டவனாக(anti hero roll) நடிக்கவே மாட்டார்,இரட்டை வேடத்தில் மட்டும் ஒருவர் நல்லவர், மற்றவர் கேட்டவர் அல்லது பயந்தவராக வந்து பின்னர் திருந்துவதாக)
*பெரும்பாலும் காதலித்தே திருமணம், (காதலித்தப் பெண்ணுடன் மிக நெருக்கமாக பாடல்கள்).
*காதலியை தவிர மற்ற பெண்களை, தாயாக, சகோதரியாக மட்டுமே பார்ப்பார்.( ஒளிவிளக்கில் மட்டும் குடி போதையில், விதவை சவுக்கார் ஜானகியை கெடுத்துவிடுவார்)
*தப்பு செய்துவிட்டால் மிக வருந்துவார்.(தாளம் பூ என்ற படத்தில், அண்ணன் அசோகன் தப்பு செய்து போலீஸ்க்கும், மக்களுக்கும் பயந்து தலைமறைவாக வீட்டுக்கு வந்து போவார், பலன் அண்ணி கற்பம். ஊர் மக்கள் வந்து அதை சொல்லி அசோகனை கேட்பார், எம். ஜி. ஆர்., அண்ணனை காப்பற்ற வேறுவழிஇல்லாமல் அண்ணியின் கற்பத்திற்கு நானே காரணம் என்று சொல்லிவிடுவார். பின்னர் ஓடி வந்து அண்ணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்)
^ வெளியில் எல்லோருக்கும் பெரும் வள்ளலாகவே திகழ்ந்தார், இன்றும் தேர்தலின் போது அண்ணா.தி.மு.காவிற்கு ஓட்டு வாங்கி தரும் வள்ளல் அவர்தானே.
^ சத்யா மூவீஸ், ஆர். எம். வீரப்பன், எம். ஜி. ஆர்., மறையும் வரை மாதம் நூறு ரூபாய் எம்.ஜி.ஆரின்., கையில் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
^1967 தேர்தலைப பற்றி காமராஜர், "நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்" என்று கூறினார். ஆனால் அன்று நடந்தது வேறு.எம்.ஜி.ஆர், உடல்நலம் இல்லாமல் அமெரிக்காவில் இருதபோது நடந்த தேர்தலில் உண்மையில் படுத்துக் கொண்டே ஜெயித்தார்!
எல்லா படத்திலும் இது போன்ற கடுமையாக உழைக்கும் கட்சி ஒன்றாவது இருக்கும்.
எம். ஆர். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டு மருத்துவமனையில்.
எம்.ஜி.ஆர் இறுதிவரை பயன்படுத்திய கார். இந்த நம்பர் ஒரு சிறப்பு வாய்ந்தது. எம்.ஜி.ஆர், முதன் முதலில் முதலமைச்சராக பதவி ஏற்றது 4.7.77 .
குழந்தைகள் மேல் மிகுந்த பாசம் கொண்டவர்.
பிரபகாரனுடன், எம்.ஜி.ஆர் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திதிருந்தால் இவரின் இன்றைய நிலைமை வேறு.
மதர் தேரசாவுடன், கடவுள் மறுப்பு கொள்கையுடயவராயினும் யாரையும் வார்த்தையால் காயப்படுத்தியதில்லை.
பின் குறிப்பு:-
பொன் மனசெல்வர் எம். ஜி. ஆருக்கு மூன்று திருமண வாழ்விலும் குழந்தை செலவம் இல்லை. இதனால் எல்லோருக்கும் மன வருத்தம் தான்., ஆனால் குழந்தை இல்லாததால் தான் அவர் கடைசிவரை தன் கொள்கை, தயாள குணம் மாறாமல் இருக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன்.
அதே போல் அவர் இறந்த அன்று பல பேர், தன் குடும்பத்து துக்க நிகழ்ச்சியாக மொட்டை போட்டுக் கொண்டனர்.
5 comments:
சூப்பர்.........வாத்தியாருக்கு சிறந்த விதத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள்.
yunmyeel m g r real boss munawar
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் !அவருடைய பாடல்கள் மூலம் நல் எண்ணங்களை நாம் அறிந்து கொள்ளலாம் .வாழ்க M.G.R..I am proud to say I am the follower of him...I love M.G.R
தயவு செய்து தலைப்பை மாற்றவும் : எம்.ஜி.ஆர். உண்மையான நாயகன் என்று.
நிறைய விஷயங்களை சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
ஒரு சில எழுத்துப் பிழைகள்.
(உதா: கற்பம் --> கர்ப்பம்)
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.