சிங்கப்பூர்- புகை சட்டங்கள்!சிங்கப்பூர் நல்ல சிங்கப்பூர் தொடரில் இன்று நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது, சிங்கப்பூர்-இல் புகை பிடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய சட்டங்கள்.
ஆரம்பத்தில் யாரும், எங்கும் (உணவு விடுதி, சாலை, வீட்டு வாசல், கட்டிடங்களுக்கு அடியில் உள்ள உட்காருமிடம், pub என எங்கும்) புகை பிடிக்கலாம், ஆனால் வெண்குழல் வத்தியின் ( சிகரெட்), கருகிய மொட்டு-வை மட்டும் கவனமாக குப்பை தொட்டியில் மட்டும் போட வேண்டும் ( சும்மா தூக்கிஎல்லாம் போடக் கூடாது, மொத தடவ மாட்டினா- S$ 200 அபராதம், ரெண்டாவது தடவ மாட்டினா கோர்ட் வழியா மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஏரியாவுல கூட்டுரவுங்களுக்கான ஸ்பெஷல் டிரஸ்ஐ போட்டு நாம ஏரியாவை ரெண்டு மணிநேரம் சுத்தம் பண்ணனும் )( அதை போட்டோ வேற எடுத்து வச்சிக்குவாங்க )


சுமார் மூன்று வருடங்களுக்கு முன் புதிய நடைமுறையை சட்டமாக்கினார்கள். என்னவென்றால், மூடிய இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, பள்ளி, பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம் + அவற்றின் எல்லைக்குள் இருக்கும் இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, காற்றோட்டமான உணவு விடுதியில் மொத்த பரப்பளவில் பத்து சதவீதத்திற்குள் மஞ்சள் கோட்டிற்குள் மட்டுமே புகை பிடிக்கலாம். ஆனால் மற்றகாற்றோட்டமான இடங்களில் பிடிக்கலாம் ஆனால் மொட்டு-வை சரியாக குப்பை தொட்டியில் மட்டும் போடவேண்டும்.


இந்த நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ( மலேசிய உட்பட )ஒரு பெட்டிக்கும் குறைவான பயன் படுத்திய புகை குச்சிகள் ( அதாவது ஒரு பெட்டியில் அதிகபட்சம் இருபது என்றால், பத்தொன்பது புகை குச்சிகள் வரியில்லாமல் கொண்டுவரலாம் ) ( சிங்கப்பூர்-மலேசியா இடையில் ஒவ்வொரு நாளும் ஐன்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தரைவழியாக இடம்பெயர்கிறார்கள், இவர்களில் பெரும்பாலும் வேலைக்காக சிங்கப்பூர் வருகிறார்கள்)( அப்படியானால் எத்தனை ஆயிரம் புகை குச்சிகள் வரி செலுத்தாமல் சிங்கப்பூர் வருகின்றது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்)

சிங்கப்பூர் நல்ல சிங்கப்பூர்
வரும் ஜனவரி முதல் புகைபிடிப்பவர்களுக்கு புதிய நடைமுறை சட்டம் அமலுக்கு வருகின்றது. எளிய முறையில் என்னவென்றால், குறிப்பிட்ட புகைபிடிக்கும் (மஞ்சள் கோட்டுக்குள்-சாம்பல் கிண்ணம் உள்ள) இடத்தில் மட்டுமே புகை பிடிக்கலாம். அதைவிடுத்து வேறெங்கு பிடித்து மாட்டினால் முதல் முறைக்கு S$ 200, அபராதம், மேலும் இனி சிங்கப்பூரில் புகைக்கும் ஒவ்வொரு புகை குச்சியிலும் வரி கட்டியதற்கான வில்லை இருக்க வேண்டும்.அது SDPC- Singapore Duty Paid Cigarette. புகை குச்சியில் எப்படி அச்சிட்டு இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தல் படமும் கொடுக்கப் பட்டுள்ளது.

பின் குறிப்பு:-

ஒவ்வொரு புகை குச்சி பேட்டியின் மேலும், புகையால் பாதிக்கப் பட்டவர்களின் புகைபடம் அச்சிடப்பட்டிருக்கும். அதில், வாய் புற்று, கழுத்து புற்று, கை மற்றும் காலில் தோல் சம்மந்தம்மான வியாதிகள் மட்டுமல்லது, பெண்களுக்கு கருகளைப்பு நடக்கவும் வாய்ப்புள்ளதால், சில ஒன்றிரண்டு மாதத்தில் குறைபிரசவத்தில் வெளிவந்த குழந்தையின் படங்களும் தாராளமாக பார்க்கலாம், ஆனால் விதிவசத்தால் குறைபிரசவ படம் போட்ட பெட்டிலிருந்து புகை குச்சி எடுத்து புகைக்கும் பெண்களையும் காணலாம்.

பின்குறிப்பு (2):-

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதே படங்கள் போட்ட மலபார் பீடி பெட்டியை சிங்கப்பூரில் நான் பார்த்தேன். அன்புமணி அவர்கள் கேட்டுகொண்டுது இதைத்தான்! ஆனால் நம்முடைய நிரந்தர தலைவலிகளில் ஒன்றான அரசியல்வாதிகள் இடையில் புகுந்து அது நடக்கவிடாமல் செய்துவிட்டனர். ஆனால் அதே பீடி தயாரிப்பாளர் சிங்கபுருக்கு மட்டும் பாதிப்பின் படம் போட்டு அனுப்புகிறார்.
வாழ்க இந்திய ஜனநாயகம்!

2 comments:

கார்க்கிபவா said...

10 ஓட்டு விழுந்திருக்கு.. ஆனா பின்னூட்டத்த காணோம்.. எப்படி சகா?

அப்பாவி முரு said...

கார்க்கி கூறியது...
10 ஓட்டு விழுந்திருக்கு.. ஆனா பின்னூட்டத்த காணோம்.. எப்படி சகா?//

அதாங்க எனக்கும் புரியல,

மேடைல ஒருசிலர் பேசக்கூடதுன்னே கைதட்டு வாங்களே- அது போலத்தான் இதுவுமா?

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB