மதம் - இன்றைய நிலையில் மிகுந்த பிரச்சனைக்கு ஆட்படுகின்ற வார்த்தை.
மதம்- இந்த வார்த்தையை போலி சாமியார்களாலும், மத பிரசங்கவாதிகளாலும் மற்றும் நம்முடைய இருக்கும் போலி பகுத்தறிவுவாதிகளாலும் இன்று இதற்க்கு போலி முகம் மாட்டப்பட்டுள்ளது
இந்து மதம் தோன்றியது எப்போது?- இதற்கான பதில் ஆன்மீகத்தில் இருப்பவர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என யாராலும் கூறமுடியவில்லை. இயற்கையாக மனிதன் தோன்றியதிலிருந்து இந்து மதம் இருப்பதாகவே நான் உணர்கிறேன்
ஐந்தறிவு மிருகத்திற்கும், ஆறறிவு மனிதனுக்கும் இடைப்பட்ட வாழ்கை வாழ்ந்த போதுஏற்பட்ட வெளிஉலக குழப்பங்கள், பயம் ஒழிய மனிதன் இயற்கையை வழிபட ஆரம்பித்து, ஏன் என்ற பகுத்தறிவால் நாகரீகம் தோன்றியது, நாகரீகத்தில் பதில் இல்லாத கேள்விகளுக்கான (மரணம் என்றால் என்ன?, மரணத்தின் பின்னால் என்ன? அமைதியான, அன்பான மனநிலையில் வாழ்வது எப்படி?) விடை காண மதம் தோன்றியது. நாகரீகத்தின் வளர்ச்சியாகத்தான் மதம் தோன்றியது.
மதம் மனிதனிடம் போதித்து என்ன? தனி மனித ஒழுக்கம். அந்த தனிமனித ஒழுக்கத்தை வளர்க்க தியானம், பிரசங்கம், தான தர்மம், எளிய வாழ்க்கை என்றாக்கியது.
இந்த நிலைவரை பகுத்தறிவும், மதமும் ஒன்றாக இணைத்து மிருகத்தை மனிதனாக்கியது. அந்த பகுத்தறிவு மதத்தில் குறை காணவில்லை.
மனிதன் தோன்றியதிலிருந்து இன்றுவரை மனிதக்குள் இருக்கும் மிருகத்தை கட்டுக்குள் வைப்பது மதமன்றி வேறென்ன. உண்மையில் மதங்கள் போதிப்பது அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை,ஆசையை ஒழிப்பது என்பதே ஆகும்.
ஆனால் மதமே இல்லை என்று தந்தை பெரியார் முழங்க காரணம் என்ன? தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த, இருக்கின்ற ஜாதி வேறுபாட்டை ஒழிக்கவேண்டியே கடவுள் மறுப்பை ஆரம்பித்தார். ஆனால் ஆண்டுகள் பலவாகியும் இந்த ஜாதி அமைப்பை குறைக்கவும் முடியவில்லை- குலைக்கவும் முடியவில்லை. ஆனால் பகுத்தறிவு பகலவனின் வழித்தோன்றல் இன்னும் ஜாதியிளிருக்கும் உட்பிரிவுகளை கண்டுபிடித்து பிரசவம் பார்க்கிறார். இது ஜாதி,மத ஒழிப்பு நடவடிக்கையா?
பெரியார் தன்னுடைய காலத்திலே, அருள் முருக கிருபானந்த வாரியார் என்ற மதவாதிக்கு எந்த எதிர்ப்பும் சொன்னதில்லையே ஏன்?
தந்தையின் எண்ணத்தை(ஜாதி ஒழிப்பு என்பதே மத ஒழிப்பு ஆனதை) , ஆசையை புரிந்து கொள்ளவே இல்லை பின் எப்படி அதை நிறைவேற்றுவது.
தந்தையின் முதல் சீடன் அறிஞர் அண்ணா கடவுள் இல்லை என்றிருந்தவர் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று முழங்க என்ன காரணம்? யாரந்த ஒருவன்? மரண படுக்கையிலிருக்கும் போது அன்பர் ஒருவர் அண்ணாவின் நெற்றியில் பூசிய திருநீரை மறுக்கவில்லையே என்ன காரணம்,? அறிஞருக்கு மரண படுக்கையில் ஏன் இந்த மாற்றம்?
இந்து என்றால் திருடன் என்று கூறியவர் கூட மஞ்சள் துண்டணிந்து கொண்டு, சாயிபாபாவை வீட்டிற்கு வரவழைத்து தன்னுடைய அடி பொடிகளுடன் மோதிரம் வாங்கிக்கொள்கிறார்களே என்ன காரணம்?
ஆன்மீகமும், பகுத்தறிவும் ஒரு வயிற்றில் வந்த குழதைகள். இரண்டும் மக்களை முன்னேற்ற பாடுபடவேண்டுமே அன்றி, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது? என்று கலைஞர் வேலூர் தங்க கோவிலில் முழங்க காரணம் என்ன?
மூட நபிக்கைகளை ஒழிக்கவேண்டுமென மேடையில் ஒலிப்பவர்கள் கூட, தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பின் வாசல் வழியே உள்ளே நுழைகிறார்களே என்ன காரணம்?
நண்பர்களே சிந்தியுங்கள் போலி பகுத்தறிவாளர்களின் பேச்சை கேட்காமல் உங்களுக்குள் ஒழுக்கத்தை கொண்டுவந்து அமைதியை பரப்புங்கள்.
அதே நேரத்தில், கஜினி முஹம்மது, மற்றும் பலர் அணி அணியாக படை எடுத்துவந்து கொலை, கொள்ளை, கோவில்கள் இடித்து உடைத்தபோதும், (அதில் கஜினி முஹம்மது மட்டும் சிறப்பு, ஏனெனில் தன் படை எடுப்பில் ஒருமுறை குஜராத் சோமநாதர் கோவிலுக்கு கொள்ளையடிக்க செல்கையில் தடுத்த ஐம்பதாயிரம் மக்களை வெட்டிக் கொன்றது மட்டுமில்லாது, சிறந்த கட்டிடக்கலை முறைப்படி அந்தரத்தில் மிதக்கும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்த சிவ லிங்கத்தை, சுற்று சுவர்களை இடித்து லிங்கம் கீழே வந்தவுடன் அதை எடுத்து கோவில் வாசலில் போட்டுடுடைத்தவன்) இந்தியா முழுக்க ஒவ்ரங்கசீப்பின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த போதும் இல்லாத ஒரு புதிய விஷயம் தற்பொழுது நாடு முழுதும் பரவி வருகிறதே ஏன்?
புது புது கோவில்களும், புது புது பழக்க வழக்கங்களும். ஏன் இந்த விரிவாக்கம்?
நமது தமிழ்நாட்டில் எப்பொழுதும் வீடுகளில் ஒரு தனி பூஜை அறை, சின்ன வீடுகளில் ஒரு மூலையில் சிறு படம், அல்லது சுவற்றிலே விளக்கு மாடம் அல்லது ஒரு சானுக்கு ஒரு மஞ்சள் வட்டம் அதில் ஒரு குங்கும பொட்டு வைத்து அதை அமைதியாக, மனமுருக வேண்டிக்கொள்வார்கள். ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு கோவில் மட்டும் இருந்தது. அப்போது தனி மனிதனிடமும் சரி, வீட்டிலும் சரி, ஊரிலும் சரி அமைதி குடி கொண்டிருந்தது.
ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் புது புது கோவில்கள், பெரிய பெரிய மண்டபங்கள், ( அதே நேரத்தில் பழமை வாய்த்த கோவில் கட்டிடங்களை காணாமல் விட்டுவிட்டனர்) ஆண்டு தோறும் விநாயகர் ஊர்வலம் என எல்லாம் இருந்து மக்களிடையே மன அமைதி இலையே என்ன காரணம்?
நமது மனம் அமைதியடைய கோவில் கட்டுகிரோமா, இல்லை பிறர் மனம் நோக கட்டிகிரோமா?
மனைவியை, காளி தேவியாக பார்த்த ராம கிருஷ்ணர்,
சகோதரர்களே...சகோதரிகளே...என்று சிகாக்கோ மாநாட்டில் முழங்கிய விவேகானந்தர் செய்த மத தொண்டு...
இன்று நீங்கள் புது கோவில் கட்டுவது, விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது ( சிலையை முழுவதுமாய் கறைப்பதுமில்லை, அடுத்தநாள் கை போன பிள்ளையார், காளி போன பிள்ளையார், தும்பிக்கை இல்லாத பிள்ளையார் என பார்க்கலாம்) என செய்யும் மத தொண்டு,
இதில் எந்த மதத்தொண்டு மக்களை அமைதியாக சந்தோசமாக வாழவைத்தது என்று சிந்தியுங்கள். போலி மததொண்டை விடுங்கள்
மிருகத்திலிருந்து மனிதனாக, மனிதனை பண்படுத்தியது பகுத்தறிவும், மதமும், ஆனால் இன்று மனிதனை மீண்டு மிருகமாக்கும் முயற்சிகள் கிட்ட தட்ட வெற்றி கண்டு கொண்டிருக்கிறது போலி பகுத்தறிவும், போலி மதவாதமும்.
4 comments:
write more. best wishes
write more. best wishes//
வாங்க டாக்டர், வருகைக்கு நன்றி.
எதோ மனதிற்கு சரிஎன்று பட்டதை எழுதினேன். மீண்டும் முயற்சிக்கிறேன்.
Good article. continue in your works.
today people put the idle on the koovam. two day before they worshipped as powerful god and made all arrangement. But two day after they put the idle on the drainage. This is what happened in fake theist side. they just want to complete their tradtion for their welfare.
In the other side fake idealigst are still follow what periyar did in his period. they didnt think new or make people as real humans. They still believe in KARUPU SATTAI KAARAN is PAGUTHU ARIVU VATHI
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.