இங்க கணுக்கால் வரை தழைய., தழைய வெள்ளை வேட்டிஅதுலயும் குறிப்பா கைலி கட்டிக்கிட்டு வெளிய வந்தா தப்புன்னுசொல்பவர்கள், மேல் பனியன் மறைக்கும் அளவுக்கு டவுசர் போட்டுக்கிட்டு வர்ற பொண்ண ஒன்னும் சொல்லுறது இல்லை...
எஸ்காலேட்டேர் முதல்ல இருந்து கடைசி வரைக்கும் உதட்டு முத்தம் கொடுத்துகிட்டே வர்ற 13-14 வயசுபையனையும்-பொண்ணையும் ஒன்னும் சொல்லாதவங்க, பையனும் - பையனும் நட்பா கோர்த்து நடந்து போன தப்பா பேசுறாங்க.,
இங்க, சார்ன்னு கூப்பிட்டா, சூடு பட்டமாதிரி துடிச்சு போறவங்க, பேரைசொல்லி கூப்பிட்டா சந்தோசமா திரும்பி பாக்குறாங்க...
டின்னெர் , பார்ட்டில மொக்க குடிச்சி வாந்தி எடுக்கிரவனை ஒன்னும் சொல்லாதவங்க, எல்லா டிஷ்யும் நல்லா சாப்புடுரவனை கிண்டல் பண்ணுறாங்க..
போன்னுல பிரண்டுகூட( பையன் -பையன்) பேசிக்கிட்டு இருந்தா கிண்டல் பண்ணுறவுங்க, பொண்ணுகூட பேசுறேன்னு சொன்னா சொன்னும் சொல்லுறதுல்ல...
ஆகமொத்ததுல, இந்த ஊரு ஒலகத்துல நாகரீகம்முற பேருள நடக்குரதுல்ல
எது சரி, எது தப்புன்னு ஒன்னுமே புரியல…
ஒங்களுக்கு எதாவது தெரிஞ்சா எனக்கு விளக்குங்களே…
2 comments:
சில விசயங்களை புரிஞ்சுக்காம இருக்குறதுதான் நல்லது.
Ignorance is Bless..
போட்டு மண்டைய ரொம்ப குழப்பிகாதீங்க..
பார்த்திட்டு போய்கிட்டே இருங்க..
பொதுவாக நாகரீகம் , கலாச்ச்சரம் என்று எதுவும் இல்லை
அவரவருக்கு என்று சில கட்டுபாடுகளை வைத்து கொண்டு அதை மீறினால் தவறு என்பார்கள் அவ்வளவே
Post a Comment
உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.
- புதுக்குறள்.