பாரபட்சமில்லாமல் பாப்புலர் ஆக்குகின்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி... நன்றி...

நன்றி...நன்றி..,






வாக்காள பெருமக்களுக்கு நன்றி...நன்றி...






ஆழ்ந்த சொற்கள், அருமையான கருத்துக்கள், இனிமையான கவிதை, குலுங்க குலுங்க குமுறல்கள், மனம் மகிழ நகைச்சுவை, எல்லோருக்கும் தேவையான தொழில்நுட்ப விஷயங்கள் குறிப்பாக சொந்தப் பதிவுகள் என அறிவார்ந்த பதிவுகள் மட்டுமல்லாது...






என்னைபோல் எப்போவாவது சொந்த எழுத்து, பெரும்பாலும் நெட்டில் சுட்டதை வைத்து ( சூரியவம்சம் -இட்லி உப்புமா ஆவதைப்போல்) அங்கே இங்கே பட்டி- டிங்கரிங் பார்த்து பதிவுஎற்றுபவர்களையும்,






மனம் கோணாமல், பதிவர் ஏமாறாத வண்ணம் எல்லோருக்கும் எல்லாமும் என்ற உயரிய தத்துவத்தை நமது தமிழிஷ்-இல் கடைபிடித்து எல்லோருக்கும் ஒட்டு போட்டுவரும் அன்பு தோழர்களுக்கு மனமார்ந்த, இருகரம் கூப்பிய நன்றி... நன்றி..,






அதில் மிக முக்கயமான முதல்வர் திருவாளர் Ragavan-நைஜீரியா அவர்கள், 2008-09-22 அன்று நமது தமிழிஷ்-இல் இணைந்து இதுவரை வெற்றிகரமாக இரண்டே இரண்டு பதிவுகள், மொத்தம் 269 கருத்துக்கள் மட்டும் என சிக்கனமாக இருக்கும் நமது அன்பிக்கினிய நண்பர் ஓட்டுப் போடுவதில் மட்டும் கஞ்சத்தனம் சிறிதுமில்லது இதுவரை 4054 (நான் எழுதும்போது) ( இந்நேரம் லீடிங் 4100 தாண்டி இருக்கலாம்) ஓட்டுக்கள் இட்டு தனது பெருந்தன்மையை காட்டி உள்ளார்.






(அதிலும் தன்னைப் பற்றிய குறிப்புகளில் எல்லா நடிகர்களையும் பிடிக்கும், எல்லா பதிவர்களையும் பிடிக்குமென பதிந்தவர், சமீபத்ய சாதனையாக - எல்லா பதிவுகளையும் படித்த பின் நல்ல மனநிலையில் இருப்பதாக கூறிஉள்ளார்.



நல்ல மனநிலையில் இருப்பதை சாதனையாக கூறிக்கொள்ளும் அளவுக்கு நமது பதிவர்களின் பதிவு இருக்கிறது- இது வேற விஷயம்)






இதில் அடுத்து வருபவர் மற்றுமொரு நண்பர் மாப்பி(mappi), 2008-10-18-இல் தமிழிஷ்-இல் இணைந்த நண்பர் இதுவரை பஞ்சமில்லாமல் 3679 வாக்குகள் இட்டு எல்லோருடைய பதிவுகளையும் வாழவைத்துள்ளார்.






இந்த இருவரும் எப்பொழுதுமே தமிழிஷ்-இன் கடைசி 12 பயன்பாட்டாளர் பட்டியலில் இருந்த வண்ணமே இருக்கின்றனர். கொடுத்து வைத்தவர்கள் என்னைபோன்ற தத்து பித்து பதிவர்கள் தான். ஏதோ இவர்களைப் போன்ற வாக்காளர்கள் இருப்பத்தனால் தான் நானெல்லாம் நம்ம தமிழிஷ்-இல் பாப்புலர் பட்டியலில் இடம் பிடிக்க முடிகிறது. குறிப்பாக மீண்டும் ஏதாவது எழுதுவதற்கு தைரியம் வருகிறது.






அதனால் மீண்டும் மீண்டும் நண்பர்களுக்கு நன்றி...நன்றி...நன்றி!






கடப்பாரை குறிப்பு:-






எல்லோருக்கும் பொதுவான வாக்காளர்கள் ( வால்பையன்- 1321 வாக்குகள், வீரன்-773 வாக்குகள், Jyovramsundar-1548 வாக்குகள் ) என பட்டியல் ரொம்ப பெருசு என்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றிகள் சொல்லி தான் இந்த கடப்பாரை குத்து இல்லை, இல்லை குறிப்பு!



14 comments:

கார்க்கிபவா said...

இதுக்கு நான் ஒட்டு போட்டேன்..:))))

அப்பாவி முரு said...

ஒட்டு மட்டும் பத்தாது, உங்களின் பொன்னான கருத்து(குத்து)இம் தேவை.

பழமைபேசி said...

//Ragavan-நைஜீரியா//

கருத்துரைத்து, பதிவுகளைப் பலர் பார்ர்க்கும் பதிவுகளாக்கும் அண்ணன் இராகவன் வாழ்க! அண்ணனைக் கண்டு கொண்ட முருகுவும் வாழ்க!! வாழ்த்துகள்!!!

அப்பாவி முரு said...

பழமைபேசி அண்ணே நீங்க என் பதிவுக்கு வந்ததே எனக்கு பெருமை.

Anonymous said...

நன்றி...
நன்றி...
நன்றி (to the power n)

நான் ஓட்டு போடுவது மட்டுமல்ல நண்பரே, கூடியவரை எல்லா பதிவுகளையும் படிக்கும் வழக்கமும் உண்டு.

அலுவலகத்தில் இருக்கும் போது, தமிலிழ் திறந்து வைத்திருப்பதால் எப்போது பாவிப்பது போல் தோன்றுகிறது.

மேலும் பல பதிவுகளில் என்னுடைய பின்னூட்டத்தையும் நீங்கள் காணலாம்.

ஒரு வாசகனான என்னை கௌரவப்படுத்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

Anonymous said...

எப்போதும் போல் இதற்கு என்னுடைய ஓட்டை பதிவு பண்ணிவிட்டேன்.

Anonymous said...

ஓட்டு எங்கள் பிறப்புரிமை என்பதை அறியாதவரா நீங்கள்..

இல்லை அறிந்தும் அறியாதவர் போல் நடப்பவரா நீங்கள்..

ஏதோ எனக்கு எழுத வராது .. இல்ல .. தெரியாது.. நம்மால முடிஞ்சது ஓட்டு மட்டும் தான்..

அதை ஒழுங்கா செஞ்சுகிட்டு இருக்கேன்..

என்ன நான் சொன்னது சரிதானா?

Anonymous said...

// பழமைபேசி கூறியது...
//Ragavan-நைஜீரியா//

கருத்துரைத்து, பதிவுகளைப் பலர் பார்ர்க்கும் பதிவுகளாக்கும் அண்ணன் இராகவன் வாழ்க! அண்ணனைக் கண்டு கொண்ட முருகுவும் வாழ்க!! வாழ்த்துகள் //

வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் பழமை பேசி அவர்களுக்கும் நன்றிகள் பல உரித்தாகுக..

அப்பாவி முரு said...

/// இராகவன், நைஜிரியா கூறியது...

ஓட்டு எங்கள் பிறப்புரிமை என்பதை அறியாதவரா நீங்கள்..

இல்லை அறிந்தும் அறியாதவர் போல் நடப்பவரா நீங்கள்..

ஏதோ எனக்கு எழுத வராது .. இல்ல .. தெரியாது.. நம்மால முடிஞ்சது ஓட்டு மட்டும் தான்..

அதை ஒழுங்கா செஞ்சுகிட்டு இருக்கேன்..

என்ன நான் சொன்னது சரிதானா?///

அண்ணே, வாங்கண்ணே. ஓட்டைப் பத்தி ரொம்ப சரியா சொன்னீங்க. அரசியல்ல ஒட்டு போடுறப்பையும், எல்லோரும் உங்களை மாதிரி தெளிவா இருந்தா நாட்டுக்கே நல்லது. இப்பிடி நாமெல்லாம் நாடு, நாடா வேலை தேடி அழிய வேண்டியதில்லை.

எட்வின் said...

அண்ணன் ராகவனுக்கும். முரு வுக்கும் வாழ்த்துக்கள். //பாரபட்சமில்லாமல்// அந்த வாக்கு தமிளிஸ்கு சால பொருந்தும்.

coolzkarthi said...

//Ragavan-நைஜீரியா//

கருத்துரைத்து, பதிவுகளைப் பலர் பார்ர்க்கும் பதிவுகளாக்கும் அண்ணன் இராகவன் வாழ்க! அண்ணனைக் கண்டு கொண்ட முருகுவும் வாழ்க!! வாழ்த்துகள்!!!repeattu

அப்பாவி முரு said...

இந்த பதிவு, பாராட்டும் அண்ணன் ராகவன், மாப்பி, வால்பையன்,வீரன், ஜ்யோவ்ரம்சுண்டர் போன்றவர்களுக்கு தான்.

இந்த பதிவு முழுக்க முழுக்க அவர்களுக்கு அர்ப்பணம். (வார்த்தை சரிதானே?)

சரவணகுமரன் said...

//நல்ல மனநிலையில் இருப்பதை சாதனையாக கூறிக்கொள்ளும் அளவுக்கு நமது பதிவர்களின் பதிவு இருக்கிறது- இது வேற விஷயம்//

:-))

குடுகுடுப்பை said...

அண்ணனை கவுரவப்படுத்திய அப்பாவியார் வாழ்வாங்கு வாழ்க.

Post a Comment

உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே
இடுக்கைக்கு பின்னூட்டுவதாம் பண்பு.

- புதுக்குறள்.

 
©2009 அப்பாவி | by TNB